GK Tamil
Home TNPSC Thirukkural Quiz History Geography Science Indian Polity Sports Contact

TNPSC Group 1 2022 Preliminary Examination

General Studies Questions 51 to 75

51.  சங்க காலத்தில் தமிழகம் முழுவதிலும் கொண்டாடப்பட்ட பண்டிகை எது?
Answer: D.   திருவாதிரை
52.  "கவறும் கழகமும் கையும் தருக்கி
இவறியார் இல்லாகி யார்" - இக்குறள் யாருக்கு அறிவுரை கூறுகிறது?
Answer: D.   வேந்தர்கள்
53.  பின்வருவனவற்றைப் பட்டியல் I-றோடு பட்டியல் II-னைப் பொருத்துக:
பட்டியல் I பட்டியல் II
(a) திருமுருகாற்றுப்படை 1. முடத்தாமக்கண்ணியார்
(b) பொருநராற்றுப்படை 2. நக்கீரர்
(c) சிறுபாணாற்றுப்படை 3. கபிலர்
(d) குறிஞ்சி பாட்டு 4. நல்லூர் நத்தத்தனார்
Answer: C.   2 1 4 3
54.  கூற்று [A] : கற்பித்தல் – கற்றல் செயல்முறையின் முழுமையான மறுசீரமைப்பிற்காக, புதிய கல்விக்கொள்கை, பாரம்பரிய ஆசிரியர் மையமாக இருந்த கற்றல், கற்பவரின் மைய அணுகுமுறையாக உருவாகின்றது.
காரணம் [R] : புதிய கல்வி கொள்கையில் மாணவர்களின் ஆக்கபூர்வதிறனை உயர்த்தி அவர்களின் முழுமையான வளர்ச்சியை உறுதி செய்தல்.
Answer: C.   [A] மற்றும் [R] இவை இரண்டும் சரி மற்றும் [R] என்பது [A] யின் சரியான விளக்கம்
55.  'மண்வளத்தை மேம்படுத்துதல்' மற்றும் 'மழைநீர் சேகரிப்பை கட்டாயப்படுத்துதல்' - இக் கூற்றுடன் தொடர்புடையது
Answer: C.   பசுமையான புரட்சி
56.  எந்தச் சட்டங்கள் சூழ்நிலைக் கருதி மாநில அரசுகளை மத்திய அரசு கட்டுப்படுத்தும் அதிகாரங்கள் கூறுகின்றன.
Answer: C.   சரத்து 365, 256 மற்றும் 257
57.  இந்தியப் பொருளாதாரம் இதன் மூலம் குறிக்கப்படுகிறது:
(i) குறைந்த தலா வருமானம்
(ii) உழைக்கும் மக்கள் அதிக விகிதத்தில் தொழிற்சாலைகளில் ஈடுபட்டுள்ளமை
(iii) மேம்படுத்தப்பட்ட மூலதன உருவாக்க விகிதம்
(iv) வேலை வாய்ப்பில் சிக்கல்கள்
Answer: B.   (i) மற்றும் (iii) சரியானவை
58.  இந்திய ரிசர்வ் வங்கியின் செயல்பாடுகளாவன:
(i) நாணயங்கள் மற்றும் ரூபாய் நோட்டு வெளியிடுதல்
(ii) அரசாங்கத்திற்கு வங்கியாளராக செயல்படுதல்
(iii) நாட்டில் கடன் முறைகளை ஒழுங்குபடுத்துதல்
Answer: D.   (i), (ii) மற்றும் (iii)
59.  எத்தனை ஜோடிகள் சரியாக பொருத்தப்பட்டுள்ளன?
தடுப்பூசி - செயல்
1. Pfizer - mRNA தடுப்பூசி
2. Covishield - DNA அடிப்படையிலான தடுப்பூசி
3. Covaxin - செயலிழந்த தடுப்பூசி
4. Sputnik. V - வைரல் வெக்டர் தடுப்பூசி
Answer: C.   3 ஜோடிகள்
60.  இந்தியா ஒரு மதச்சார்பற்ற நாடு, அனைத்து மதங்களையும் சமமாக मதிக்கிறது மற்றும் அவர்களுக்கு சம வாய்ப்புகளை வழங்குகிறது என 1961ல் நேரு எழுதினார். அதை இந்தியாவின் ஜனாதிபதியாக இருந்த ராதாகிருஷ்ணன் "மக்களாகிய நாம் கண்ணுக்கு தெரியாத ஆவியின் யதார்த்ததையோ அல்லது வாழ்க்கைக்கு மதங்களின் பொருத்தத்தையோ நிராகரிக்கிறோம், அல்லது மதத்தை உயர்த்துகிறோம், என்று அர்த்தமல்ல மதச்சார்பின்மையே ஒரு நேர்மறையான மதமாக மாறுகிறது அல்லது அரசு தெய்வீக உரிமைகளை ஏற்றுக்கொள்கிறது என்று அர்த்தம் இல்லை" என்று வெளிப்படுத்தினார்.

பின்வருவனவற்றில் எது சிறப்பாக பத்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது?
Answer: C.   இந்திய மதச்சார்பின்மை பொது வெளியில் மதத்தின் முக்கியத்துவத்தை அங்கீகரிக்கவில்லை
61.  தமிழ்நாடு மாநிலம் பின்வரும் கொள்கை/கொள்கைகளில் எதை பெற்றுள்ளது?
1. தமிழ்நாடு R மற்றும் D பாலிசி
2. தமிழ்நாடு Life Sciences Promotion பாலிசி
3. தமிழ்நாடு காலணி மற்றும் தோல் பொருட்கள் பாலிசி
4. தமிழ்நாடு ஃபின்டெக் பாலிசி
Answer: C.   1, 2 மற்றும் 3
62.  பின்வருவனவற்றில் எவை சரியாகப் பொருந்தியுள்ளன?
(i) நியூ இந்தியா மற்றும் காமன்வீல் — திருமதி. அன்னிபெசன்ட் அம்மையார்
(ii) கேசரி மற்றும் மராத்தா — பாலகங்காதர திலகர்
(iii) இந்தியர் கருத்து — கோபால் ஹரி தேஷ்முக்
(iv) இந்து பிரகாஸ் — மகாத்மா காந்தி
Answer: A.   (i) மற்றும் (ii)
63.  கீழ்க்கண்ட வாக்கியங்களில் மெட்ராஸ் நேட்டிவ் அசோசியேஷன் பற்றிய சரியான வாக்கியங்களைத் தேர்ந்தெடுக்கவும்.
(i) இந்தியாவில் ஆரம்பிக்கப்பட்ட முதலாவது அரசியல் சார்ந்த அமைப்பு
(ii) இது 1852ம் ஆண்டு முதல் செயல்பட தொடங்கியது
(iii) மெட்ராஸ் நேட்டிவ் அசோசியேஷனின் நிறுவனர் ஜி. லஷ்மிநரசு ஷெட்டி
(iv) மெட்ராஸ் நேட்டிவ் அசோசியேஷனின் தலைவர் அனந்தாச்சார்லு
Answer: C.   (ii) மற்றும் (iii) மட்டும்
64.  வடக்கு அரைக்கோளத்தில் ஏற்படும் வளிமண்டல மேலடுக்கு சுழற்ச்சி எந்த திசையில் காற்று சுழலும்
Answer: C.   எதிர்கடிகாரச் சுற்று
65.  ப்ளாக் செயின் டெக்னாலஜியின் தூண்கள் எவை?
1. வெளிப்படைத் தன்மை
2. மாறுதல் இல்லாதது
3. பரவலாக்குதல்
Answer: D.   1, 2 மற்றும் 3
66.  கீழ்க்காணும் சட்டங்களில் எது அடிமைகளின் பட்டயம் என ஜவஹர்லால் நேருவினால் விவரிக்கப்பட்டது?
Answer: C.   இந்திய அரசாங்கச் சட்டம் 1935
67.  இந்திய தேசிய காங்கிரஸ் எந்த ஆண்டு அமர்வில் வரலாற்று சிறப்புமிக்க 'பூர்ண சுயராஜ்' அறிக்கையை வெளியிட்டது
Answer: C.   1929 லாகூர்
68.  1930 ஆம் ஆண்டு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியால் சட்டமறுப்பு இயக்கத்தினை நடத்த செயற்குழுத்தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டவர் யார்?
Answer: B.   S. சத்தியமூர்த்தி
69.  வன விலங்குகளைப் பாதுகாக்கும் நீண்ட கால வழிமுறைகளின் தொடர் அம்சங்கள் என்பவை:
(i) தேசிய பூங்காக்கள், சரணாலயங்கள், உயிர்க்கோள காப்பகங்கள் ஆகியவற்றில் வேட்டையாடுவது தடை செய்யப்பட வேண்டும்
(ii) மேலும் தேசிய பூங்காக்கள் மற்றும் வனவிலங்கு சரணாலயங்கள் நிறுவப்பட வேண்டும்
(iii) வனவிலங்குகளின் சிறைப்பட்ட இனப்பெருக்கத்தை ஊக்குவிக்கக் கூடாது
Answer: C.   (i) மற்றும் (ii) மட்டும்
70.  உயிரியல் நிகழ்தகவுக்கு மாறாக, முதன்மையாக புள்ளிவிவர முக்கியத்துவத்தின் அறிக்கைகளை அடிப்படையாகக் கொண்ட ஒரு மாசுபாட்டின் விளைவின் சுற்றுச்சூழல் அல்லது உயிரியல் முக்கியத்துவத்தை ஒதுக்குதல்
Answer: C.   மால்ஸ்டிக் பொருத்தமின்மை
71.  குடியுரிமை திருத்தச் சட்டம் (CAA) 2019 பற்றிய பின்வரும் கூற்றுகளில் எது/எவை உண்மையானவை?
1. இந்தியாவில் 6 ஆண்டுகளுக்கு மேல் வாழ்ந்த அனைத்து வெளிநாட்டினருக்கும் குடியுரிமை வழங்கப்படும்.
2. ஆப்கானிஸ்தான், பங்களாதேஷ் மற்றும் பாகிஸ்தானில் இருந்து வந்து 31 டிசம்பர் 2014க்கு முன் இந்தியாவிற்குள் நுழைந்த இந்துக்கள், சீக்கியர்கள், பௌத்தர்கள், ஜைனர்கள், பார்சிகள் அல்லது கிறிஸ்துவ சமூகங்களின் உறுப்பினர்களுக்கு குடியுரிமை
3. குறிப்பிட்ட சமூகங்களைச் சேர்ந்தவர்களுக்கு 12 ஆண்டுகளுக்கு பதிலாக 6 ஆண்டுகளுக்குள் குடியுரிமை வழங்கப்படும்
4. குடிமக்களின் தேசிய பதிவேட்டை தயாரிப்பதில் CAA உதவும்
Answer: D.   2 மற்றும் 3 சரி
72.  பின்வருவனவற்றுள் இந்திய ரயில்வே மண்டலம் குறித்து தவறாகப் பொருத்தப்பட்டுள்ள விடையைக் காண்க.
Answer: B.   மத்தியபகுதி - ஜெய்பூர்
73.  பின்வரும் கூற்றுகளில் எவை மனித இனங்களைப் பற்றிய சரியான கூற்றுகள்?
(i) இனங்கள் என்பது அதிகமாகவோ அல்லது குறைவாகவோ நிரந்தர தனித்துவமான பண்புகளைக் கொண்ட ஒரு குழுவாகும்.
(ii) மனித இனங்கள் 7 இரத்த வகைகளாக பிரிக்கப்பட்டுள்ளன.
(iii) தோலின் நிறம், உயரம், தலையின் வடிவம், முகம், மூக்கு, கண், முடி வகை மற்றும் இரத்த வகை ஆகியவற்றின் அடிப்படையில் இனங்கள் அடையாளம் காணப்பட்டு வகைப்படுத்தப்படுகின்றன.
Answer: A.   (i) மற்றும் (iii) மட்டும்
74.  அக்பர் காலத்தில் இங்கிலாந்தை ஆட்சி செய்தவர்
Answer: B.   முதலாம் இராணி எலிஸபெத்
75.  மெடோஸ் டெய்லர் ___________ ன் மரணம் பாஹ்மனி ஆட்சியின் "முடிவின் ஆரம்பம்" என்று கருதினார்.
Answer: A.   மஹ்மத் கவான்
;