GK Tamil
Home TNPSC Thirukkural Quiz History Geography Science Indian Polity Sports Contact

TNPSC Group 1 2022 Preliminary Examination

General Studies Questions 26 to 50

26.  "Nambikkai Inaiyam (NI)" தமிழ்நாடு அரசு திட்டம் பற்றியது
Answer: A.   மாநில முழுவதும் Block chain உள்கட்டமைப்பு
27.  எது சரியானது?
(i) HYV - அதிக விளைச்சல் தரும் வகைகள்
(ii) MSP - அதிகபட்ச ஆதரவு விலை
(iii) PDS - பொது விநியோக முறை
(iv) IPM - ஒருங்கிணைந்த பூச்சிக்கொல்லி மேலாண்மை
Answer: B.   (i) மற்றும் (iii) மட்டும்
28.  கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்தின் முக்கிய நோக்கம்
1. சாகுபடி பரப்பை அதிகரிக்க செய்தல்
2. தொடர்ந்து நிலத்தை சாகுபடிக்கு கொண்டு வருதல்
3. புதிய பயிர்களை அறிமுகப்படுத்துவதன் மூலம் பயிர் முறையை மாற்றுதல்
4. நீர் ஆதாரங்களை பெருக்குதல்
Answer: C.   1, 2 மற்றும் 4 ஆகியவை சரி
29.  கீழ்க்கண்டவற்றைப் பொருத்துக:
(a) 1997 1. அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சித் திட்டம்
(b) 1998 2. வரும்முன் காப்போம் திட்டம்
(c) 2006 3. சமத்துவபுரம்
(d) 2009 4. நமக்கு நாமே திட்டம்
Answer: A.   3 4 2 1
30.  இந்திய அரசின் பின்வரும் திட்டங்களுள் துப்புரவு தொழிலாளர்களின் பாதுகாப்பையும், மதிப்பையும் உறுதி செய்வது எது?
Answer: B.   நமஸ்தே
31.  எந்த காலகட்டத்தில் நான்கு கைகளுடன் கூடிய நடராஜரின் வெண்கலச் சின்னங்கள் வார்க்கப்பட்டன?
Answer: B.   சோழர் காலம்
32.  பின்வரும் சட்டங்களை அதனோடு தொடர்புடைய ஆண்டுகளோடு பொருத்துக:
(a) மத்ராஸ் வன யானைகள் பாதுகாப்புச் சட்டம் 1. 1882
(b) தமிழ்நாடு வனச் சட்டம் 2. 1980
(c) வன பாதுகாப்புச் சட்டம் 3. 1972
(d) வன விலங்குகள் பாதுகாப்புச் சட்டம் 4. 1873
Answer: B.   4 1 2 3
33.  டாக்டர். முத்துலெஷ்மி ரெட்டியைப் பொறுத்தவரை பின்வரும் கூற்றுகளில் எது உண்மையானது?
1. இந்தியாவில் மருத்துவத்தில் பட்டம் பெற்ற முதல் பெண் ஆவார்.
2. பிரிட்டிஷ் இந்தியாவின் முதல் சட்டமன்ற உறுப்பினராவார்.
3. மகாராஜ கல்லூரியில் சேர்ந்த முதல் பெண் மாணவியாவார்.
4. சட்ட சபையின் முதல் பெண் தலைவராவார்.
Answer: B.   2, 3 மற்றும் 4
34.  தமிழ்நாடு பஞ்சாயத்து ராஜ் (சட்ட திருத்த மசோதா) சட்டம் 2016ன் சிறப்பம்சம்
Answer: D.   50 சதவிகித இட ஒதுக்கீடு பெண்களுக்கு கொடுக்கப்பட்டது
35.  ஆங்கிலேயர்களுக்கு எதிரான ஆரம்பகால எதிர்ப்பின் போது "திருக்சிராப்பள்ளி பிரகடனத்தை" வெளியிட்டவர்
Answer: C.   மருது சகோதரர்கள்
36.  பொருத்துக:
பெயர் தொடர்புடையது
(a) சுவாமி சகஜாநந்தா 1. அப்ரஸ்டு ஹின்டுஸ்
(b) M.C. ராஜா 2. தமிழன்
(c) பண்டிட் அயோத்திதாசர் 3. நந்தனார் கல்விக் கழகம்
(d) வீரேசலிங்கம் 4. விதவை இல்லம்
Answer: A.   3 1 2 4
37.  கூற்று [A] : எந்த ஒரு நாட்டின் மேம்பாட்டிற்கும் மனித வளம் அத்தியாவசியமாக இருக்கிறது.
காரணம் [R] : கல்வி மற்றும் மக்கள் நலத்தில் முதலீடு செய்வதன் விளைவாக நாட்டின் எதிர் காலத்தில் அதிக அளவு பலன் கிடைக்கும்.
Answer: A.   [A] மற்றும் [R] இரண்டும் சரியானது மற்றும் [R], [A] வை விளக்குகிறது
38.  பின்வரும் நிறுவனங்களில் எது தேசிய நிறுவன தர கட்டமைப்பின் படி ஒட்டுமொத்த தரவரிசையில் முதலிடத்தைப் பெற்றது?
Answer: A.   IIT, சென்னை
39.  பொருத்துக:
திணை கடவுள்
(a) குறிஞ்சி 1. காளி
(b) முல்லை 2. முருகன்
(c) மருதம் 3. இந்திரன்
(d) பாலை 4. திருமால்
Answer: C.   2 4 3 1
40.  காந்தியடிகள் சபர்மதி என்னும் இடத்தில் ஒரு ஆசிரமம் உருவாக்கினார். அதே போல் இராஜாஜி தமிழகத்தில் ஒரு ஆசிரமம் உருவாக்கினார். எங்கே அதை உருவாக்கினார்?
Answer: D.   திருச்செங்கோடு
41.  பின்வருவனவற்றுள் இராமலிங்க அடிகள் பற்றிய உண்மையான கூற்று எது?
(i) இராமலிங்க அடிகள் சமரச சுத்த சன்மார்க்க சத்ய சங்கத்தை 1865-ல் ஆரம்பித்தார்
(ii) இராமலிங்க அடிகள் ஜாதிய முறைக்கு எதிரானவர்
(iii) இராமலிங்க அடிகள் 1867-ல் சத்ய தர்ம சாலையை நிறுவினார்
Answer: C.   (i), (ii) மற்றும் (iii) உண்மையானது
42.  பொருந்தா இணையைக் கண்டறிக
Answer: B.   சுகுண சுந்தரி - நடேச சாஸ்திரி
43.  ஈரோட்டில் 1921-ம் ஆண்டு ஈ.வே.ரா தமிழ்நாட்டில் கள்ளுக்கடை மறியல் போராட்டம் நடத்தினார். அப்போது இரண்டு பெண்கள் அவருடன் சேர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவ்விரு பெண்கள் தான் கள்ளுக்கடை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதற்காக முதன் முதலில் கைது செய்யப்பட்டவர்கள். அவர்கள் யார்?
Answer: A.   நாகம்மையார் மற்றும் கண்ணம்மாள்
44.  சரியாகப் பொருத்தப்பட்ட ஜோடிகளைத் தேர்ந்தெடுக்கவும்:
1. நிழல் தாங்கல்கள் - வைகுண்ட சுவாமிகள்
2. இந்து முற்போக்கு முன்னேற்ற சங்கம் - ராஜாராம் மோகன் ராய்
3. சமரச சன்மார்க்க சங்கம் - வள்ளலார்
4. சுயமரியாதை அறம் - வேதநாயகம் பிள்ளை
Answer: A.   1 மற்றும் 3
45.  கீழ்க்காணும் பொருளுக்குரிய திருக்குறளை தெரிவு செய்க.
சிறிய காரியங்களிலே முயன்று வெற்றி பெறுவதை விட பெரிய காரியங்களிலே முயன்று தோல்வி அடைவது சிறப்பு
Answer: A.   கான முயலெய்த அம்பினில் யானை பிழைத்தவேல் ஏந்தல் இனிது
46.  பட்டியல் I-இல் உள்ள நூல்களைப் பட்டியல் II-இல் உள்ள நூலாசிரியர்களுடன் பொருத்தி, கீழே கொடுக்கப்பட்டுள்ள குறியீடுகளைக் கொண்டு சரியான விடையைத் தேர்ந்தெடுக்கவும்.
பட்டியல் I பட்டியல் II
(a) உலகம் சுற்றும் தமிழன் 1. தேசியக் கவி
(b) ஞானரதம் 2. சுவாமிநாதன்
(c) தண்ணீர் தண்ணீர் 3. வெ. இராமலிங்கம்
(d) என் கதை 4. ஏ.கருப்பன்
Answer: D.   4 1 2 3
47.  "மாரிவறம் கூறின் மன்னுயிர் இல்லை
மன்னுயிர் எல்லாம் மண்ணாள் வேந்தன்"
என யார்? யாருக்கு உரைத்தது?
Answer: A.   மணிமேகலா தெய்வம் உதயகுமரனுக்கு
48.  "ஊரெல்லாம் கூடி ஒலிக்க அழுதிட்டுப்
பேரினை நீக்கிப் பிணம் என்று பேரிட்டு"
எனச் சாவு உணர்த்தும் நிலையாமையை எடுத்துக் கூறியவர் யார்?
Answer: B.   திருமூலர்
49.  கீழ்க்காணும் கூற்றுகளுக்குரிய பொருத்தமான பொருளைத் தெரிவு செய்க:
1. பலகுடை நீழலும் தங்குடைக்கீழ்க் காண்பர் -
2. இரவார் இரப்பார்க்கு ஒன்று ஈவர்
Answer: C.   இவ்விரண்டு வரிகளும் உழவரின் பெருமையைப் பேசுகின்றன
50.  "நாடாகொன்றோ காடாகொன்றோ
அவ்வழி நல்லை வாழிய நிலனே"
மேற்காணும் புறநானூற்றுப் பாடல் உலக மேம்பாட்டிற்கு யாரின் ஒழுக்கத்தை அடிப்படையாகக் கூறுகின்றது?
Answer: B.   ஆடவர்
;