TNPSC Group 2 2012 Preliminary Examination
General Studies Questions 51 to 92
1.
தவறான பொருத்தத்தைக் கண்டுபிடிக்கவும்.
A.
துத்தநாகம் - என்ஸைம்
B.
இரும்பு - ஹீமோகுளோபின்
C.
மக்னீஸியம் - உலர் மின்கலம்
D.
பெரில்லியம் - X-கதிர் குழாய்
Answer:
C.
மக்னீஸியம் - உலர் மின்கலம்
2.
பொருத்துக:
| (a) விதி 74 | 1. கவுன்சில் ஆப் மந்திரிகள் |
| (b) விதி 356 | 2. அரசியலமைப்பு திருத்த முறைகள் |
| (c) விதி 370 | 3. ஜம்மு மற்றும் காஷ்மீர் |
| (d) விதி 368 | 4. நெருக்கடி நிலை அறிவிப்பு |
A.
1 4 3 2
B.
2 1 4 3
C.
3 2 1 4
D.
4 1 3 2
Answer:
A.
1 4 3 2
3.
கீழ்கண்ட அனைவரும் எந்த பதவியை வகித்தார்கள்?
1. கிருஷ்ண காந்த்
2. கோபால் ஸ்வரூப் பதக்
3. பைரான் சிங் ஷேகாவாத்
சரியான விடையை தேர்ந்தெடுக்கவும்.
1. கிருஷ்ண காந்த்
2. கோபால் ஸ்வரூப் பதக்
3. பைரான் சிங் ஷேகாவாத்
சரியான விடையை தேர்ந்தெடுக்கவும்.
A.
துணை பிரதமர்
B.
மத்திய பணியாளர் தேர்வு ஆணையம் தலைமை அதிகாரி
C.
மாநிலங்களவையின் தலைவர்
D.
உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி
Answer:
C.
மாநிலங்களவையின் தலைவர்
4.
கீழ்வருவனவற்றுள் எந்த கூற்று சரியானது?
A.
ஒரு நபர் ஒரு தொகுதிக்கு மேல் வாக்காளராக பதிவு செய்யலாம்
B.
ஒரு நபர் ஒரு தொகுதியின் பல பகுதிகளில் வாக்காளராக பதிவு செய்யலாம்
C.
வாக்காளராக பதிவின் போது தவறான விபரம் கொடுத்தால் அபராத தொகையே தண்டனையாகும்
D.
வாக்காளராக பதிவின் போது தவறான விபரம் கொடுத்தால் அபராத தொகையும், ஓர் ஆண்டு சிறை தண்டனையும் விதிக்கப்படும்
Answer:
D.
வாக்காளராக பதிவின் போது தவறான விபரம் கொடுத்தால் அபராத தொகையும், ஓர் ஆண்டு சிறை தண்டனையும் விதிக்கப்படும்
5.
பட்டியல் Iஉடன் பட்டியல் IIஐப் பொருத்தி, பட்டியல்களுக்குக் கீழே உள்ள தொகுப்பிலிருந்து சரியான விடையினைத் தெரிவு செய்க.
| பட்டியல் I | பட்டியல் II |
|---|---|
| (a) நியூ இந்தியா | 1. லாலா லஜ்பத் ராய் |
| (b) தி பீப்புள்ஸ் ஃபிரண்ட் | 2. பிபின் சந்திர பால் |
| (c) வந்தே மாதரம் | 3. தாதாபாய் நௌரோஜி |
| (d) ராஸ்ட் கோஃப்டார் | 4. ஏ.ஓ.ஹியூம் |
A.
2 4 1 3
B.
3 1 4 2
C.
4 3 2 1
D.
2 1 3 4
Answer:
A.
2 4 1 3
6.
'எல்லை காந்தி' என புகழ்பெற்ற கான் அப்துல் கபார் கான் தலைமையில் பதானியர்கள் 'கூடை கித்மத்கார்ஸ்' (கடவுளின் சேவகர்கள்) என்னும் சங்கத்தைத் தொடங்கினர். அது அனைவராலும் என்னவென்று அறியப்பட்டது?
A.
வெள்ளைச்சட்டைகள்
B.
சிகப்புப் படை
C.
சிகப்புச்சட்டைகள்
D.
வெள்ளைப் படை
Answer:
C.
சிகப்புச்சட்டைகள்
7.
முதல் பட்டியலையும், இரண்டாவது பட்டியலையும் ஒப்பிட்டு, கீழ்க்கண்ட தொகுப்பின் துணையோடு, சரியான விடையை அளிக்கவும்.
| பட்டியல் I | பட்டியல் II |
|---|---|
| புலவர்கள் | புத்தகங்கள் |
| (a) காளிதாஸர் | 1. அஷ்டாங்க சங்கிரகம் |
| (b) விஷ்ணு சர்மா | 2. சூரிய சித்தாந்தம் |
| (c) ஆர்யபட்டர் | 3. பஞ்ச தந்திரம் |
| (d) வாக்பட்டர் | 4. சாகுந்தலம் |
A.
4 3 2 1
B.
3 4 1 2
C.
1 2 3 4
D.
2 1 4 3
Answer:
A.
4 3 2 1
8.
எக்கல்வெட்டியிலுள்ள அரசு ஆணையில் புத்தர், தர்மம், சங்கம் இவற்றின் பால் அசோகர் தன்னுடைய ஈடுபாட்டை அறிவித்துள்ளார்?
A.
மாஸ்கியின் சிறு குன்று கல்வெட்டு
B.
ரும்மிநேயியின் சிறு தூண் கல்வெட்டு
C.
சார்நாத்தின் தூண் கல்வெட்டு
D.
பாப்ரா சிறு குன்று கல்வெட்டு
Answer:
D.
பாப்ரா சிறு குன்று கல்வெட்டு
9.
கானிங் பிரபு "கருணையுள்ள கானிங்" என்று அழைக்கப்பட்டது ஏன்?
A.
இந்தியர்களின் மீது மிகுந்த அன்போடு உயர்பதவிகளை வழங்கியதால்
B.
சிப்பாய் கலகத்தில் ஈடுபட்ட அனைவருக்கும் பொது மன்னிப்பு வழங்கியதால்
C.
நில வரியை அவர் குறைத்ததால்
D.
பிரிட்டிஷ் அரசாங்கத்தின் முதல் வைசிராயாக அவர் நியமிக்கப்பட்டதால்
Answer:
B.
சிப்பாய் கலகத்தில் ஈடுபட்ட அனைவருக்கும் பொது மன்னிப்பு வழங்கியதால்
10.
கார்போஹைட்ரேட் செரிமானத்தில், கீழ்க்காணும் சர்க்கரைப் பொருட்கள் அவற்றின் எளிய வடிவங்களாக மாற்றப்படுகின்றன.
I. ஸ்டார்ச் → மால்ட்டோஸ் + ஐசோமால்ட்டோஸ்
II. மால்ட்டோஸ் → குளுக்கோஸ்
III. லாக்ட்டோஸ் → மால்ட்டோஸ்
IV. சுக்ரோஸ் → குளுக்கோஸ் + பிரக்ட்ரோஸ்
எது/ எவை சரி?
I. ஸ்டார்ச் → மால்ட்டோஸ் + ஐசோமால்ட்டோஸ்
II. மால்ட்டோஸ் → குளுக்கோஸ்
III. லாக்ட்டோஸ் → மால்ட்டோஸ்
IV. சுக்ரோஸ் → குளுக்கோஸ் + பிரக்ட்ரோஸ்
எது/ எவை சரி?
A.
I மட்டும்
B.
II மற்றும் III
C.
II, III மற்றும் IV
D.
I, II மற்றும் IV
Answer:
D.
I, II மற்றும் IV
11.
பட்டியல் Iஐ பட்டியல் II உடன் பொருத்தி கீழே கொடுக்கப்பட்டுள்ள குறிப்பீடுகளைக் கொண்டு சரியான விடையைத் தேர்ந்தெடு:
| பட்டியல் I | பட்டியல் II |
|---|---|
| (a) பூவில் மிகவும் சிறியது | 1. டிஸ்கிடியா ராபிலிஸியா |
| (b) பூவில் மிகவும் பெரியது | 2. கல்வாழை |
| (c) சமச்சீரற்ற பூ | 3. பில்லென்தஸ் |
| (d) அல்லி வட்டம் மட்டும் உள்ள பூ | 4. உல்பியா |
A.
2 1 3 4
B.
1 2 3 4
C.
3 4 1 2
D.
4 1 2 3
Answer:
D.
4 1 2 3
12.
A என்பது கூற்று R என்பது காரணம். பின்வரும் இரண்டு வாக்கியங்களை ஆய்ந்து, பின்தரப்பட்ட குறிப்புகளைப் பயன்படுத்தி விடையளிக்கவும்.
A. சுவர் மற்றும் தடைகளுக்குப் பின்னால் இருந்து வரும் ஒலியை நாம் கேட்கிறோம்
R. ஓர் அலையின் அலைநீளம் அதன் பாதையில் உள்ள தடைகள் மற்றும் பொருட்களின் அளவிற்குச் சமமாகவோ, குறைவாகவோ இருந்தால், விளிம்பு வளைவு ஏற்படும்.
A. சுவர் மற்றும் தடைகளுக்குப் பின்னால் இருந்து வரும் ஒலியை நாம் கேட்கிறோம்
R. ஓர் அலையின் அலைநீளம் அதன் பாதையில் உள்ள தடைகள் மற்றும் பொருட்களின் அளவிற்குச் சமமாகவோ, குறைவாகவோ இருந்தால், விளிம்பு வளைவு ஏற்படும்.
A.
A மற்றும் R வாக்கியங்கள் தனித்தனியே சரி. R என்பது Aக்கான சரியான காரணம்
B.
A மற்றும் R வாக்கியங்கள் தனித்தனியே உண்மை. ஆனால் R என்பது Aக்கான காரணம் அல்ல
C.
A சரி, R சரியல்ல
D.
R சரி, ஆனால் A சரியல்ல
Answer:
A.
A மற்றும் R வாக்கியங்கள் தனித்தனியே சரி. R என்பது Aக்கான சரியான காரணம்
13.
கொடுக்கப்பட்டுள்ள வடஅமெரிக்காவைச் சுற்றியுள்ள கடல் நீரோட்டங்கள் படத்தை கருத்தில் கொள்க. வரிசை I வரிசை II பொருத்தி, சரியான குறியீடு உள்ள பதிலைத் தேர்ந்தெடுக்க.
| வரிசை I | வரிசை II |
|---|---|
| நீரோட்ட எண் | நீரோட்டத்தின் பெயர் |
| (a) I | 1. அலாஸ்கா |
| (b) II | 2. கல்ஃப் நீரோட்டம் |
| (c) III | 3. கலிபோர்னியா |
| (d) IV | 4. லபராடார் |
A.
3 4 2 1
B.
2 1 3 4
C.
4 2 3 1
D.
1 3 4 2
Answer:
D.
1 3 4 2
14.
புதுக்கற்கால ஓவிய மையங்களை அதன் மாவட்டங்களுடன் பொருத்துக.
குறியீடுகளிலிருந்து சரியான விடையைத் தேர்ந்தெடுத்தல்
| (a) சோன் பள்ளத்தாக்கு | 1. ராய்கார் |
| (b) மாணிக்பூர் | 2. மிர்ஸாபூர் |
| (c) சிங்கன்பூர் | 3. மத்திய மாகாணம் |
| (d) ஹோஷங்காபாத் | 4. உத்திரப் பிரதேசம் |
குறியீடுகளிலிருந்து சரியான விடையைத் தேர்ந்தெடுத்தல்
A.
2 4 1 3
B.
1 2 3 4
C.
3 4 1 2
D.
4 3 2 1
Answer:
A.
2 4 1 3
15.
'சர்தார்' எனும் பட்டம் வல்லபாய் பட்டேலுக்கு இந்நிகழ்ச்சியின் போது அளிக்கப்பட்டது
A.
உப்பு சத்தியாகிரகம்
B.
பர்தோலி சத்தியாகிரகம்
C.
சட்ட மறுப்பு இயக்கம்
D.
காபினட் அமைச்சர் குழு வருகையின் போது
Answer:
B.
பர்தோலி சத்தியாகிரகம்
16.
திருமாலைப் பாடாமல் நம்மாழ்வாரையே தெய்வமாகப் பாடியவர் யார்?
A.
மதுரகவியாழ்வார்
B.
தொண்டரடிப்பொடியாழ்வார்
C.
பொய்கையாழ்வார்
D.
திருப்பாணாழ்வார்
Answer:
A.
மதுரகவியாழ்வார்
17.
கீழ்க்காணம் தொடர்களை அவற்றின் ஆசிரியர்களோடு பொருத்துக:
| தொடர்கள் | கவிஞர்கள் |
|---|---|
| (a) மாதர் தம்மை இழிவு செய்யும் மடமையைக் கொளுத்துவோம் | 1. கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை |
| (b) கல்வியில்லாத பெண்கள் களர்நிலம் | 2. பாரதியார் |
| (c) மங்கையராய்ப் பிறப்பதற்கே - நல்ல மாதவம் செய்திட வேண்டும் | 3. நாமக்கல் கவிஞர் |
| (d) தமிழன் என்று சொல்லடா - தலை நிமிர்ந்து நில்லடா | 4. பாரதிதாசன் |
A.
4 1 3 2
B.
1 3 2 4
C.
2 4 1 3
D.
3 2 4 1
Answer:
C.
2 4 1 3
18.
பட்டியல் I-ஐ பட்டியல் II உடன் பொருத்துக.
| பட்டியில் I | பட்டியில் II |
|---|---|
| அனல் மின் திட்டங்கள் | மாநிலங்கள் |
| (a) துருவன் | 1. குஜராத் |
| (b) கொர்பா | 2. ஒரிசா |
| (c) ஒப்ரா | 3. உத்திர பிரதேசம் |
| (d) தால்ச்சர் | 4. மத்திய பிரதேசம் |
A.
1 3 2 4
B.
1 2 3 4
C.
1 4 3 2
D.
1 3 4 2
Answer:
C.
1 4 3 2
19.
பின்வருவனவற்றை பொருத்துக:
| நீதிப்பேராணை | அம்சம் |
|---|---|
| (a) ஆள்கொணர் ஆணை | 1. நிர்வாக அதிகாரிகளுக்கு எதிராக பிரயோகிக்க இயலாது |
| (b) தடை ஆணை | 2. அமைச்சர்களுக்கு எதிராக பிரயோகிக்க இயலாது |
| (c) நெறிமுறை உறுத்தல் | 3. பிறரும், பாதிப்புக்குள்ளாகாத எந்த சமூக ஆர்வலரும் கோரலாம் |
| (d) தகுதி முறைவினா | 4. சட்டமன்ற அமைப்புகள் மற்றும் தனிநபர்களுக்கு எதிராக பிரயோகிக்க இயலாது |
A.
3 1 4 2
B.
1 2 3 4
C.
2 3 4 1
D.
3 4 2 1
Answer:
A.
3 1 4 2
20.
பட்டியல் I-ஐ பட்டியல் II உடன் பொருத்தி, கீழே கொடுக்கப்பட்டுள்ள குறியீடுகளைக் கொண்டு சரியான விடையைத் தேர்ந்தெடு:
| பட்டியல் I | பட்டியல் II |
|---|---|
| (a) மணிக்கொடி | 1. ஜி. சுப்பிரமணிய ஐயர் |
| (b) எழுத்து | 2. திரு.வி.க. |
| (c) சுதேசமித்திரன் | 3. பி.எஸ். ராமையா |
| (d) நவசக்தி | 4. சி.சு. செல்லப்பா |
A.
1 2 3 4
B.
4 1 2 3
C.
2 3 4 1
D.
3 4 1 2
Answer:
D.
3 4 1 2
21.
கீழ்க்காண்பனவற்றுள் பொருத்தமற்றதைக் குறிப்பிடுக.
A.
திருத்தொண்டத்தொகை
B.
திருத்தொண்டர் திருவந்தாதி
C.
திருத்தொண்டர் புராணம்
D.
திருவிளையாடற்புராணம்
Answer:
D.
திருவிளையாடற்புராணம்
22.
வரிசை Iஉடன் வரிசை IIவினைப் பொருத்தி வரிசைகளுக்கு கீழ் கொடுக்கப்பட்டுள்ள தொகுப்பிலிருந்து சரியான விடையினைத் தெரிவு செய்க.
| வரிசை I | வரிசை II |
|---|---|
| (a) நேரிடைச் செயல்நாள் | 1. 20 பிப்ரவரி, 1947 |
| (b) இடைக்கால அரசு | 2. 3 ஜூன், 1947 |
| (c) மௌண்ட்பேட்டன் திட்டம் | 3. 16 ஆகஸ்டு, 1946 |
| (d) அட்லியின் அறிவிப்பு | 4. 2 செப்டம்பர், 1946 |
A.
3 4 2 1
B.
3 1 2 4
C.
3 4 1 2
D.
4 3 2 1
Answer:
A.
3 4 2 1
23.
பின்வருவனவற்றுள் குடிமக்களுக்கு கிடைக்கப் பெறும் ஆனால் வெளிநாட்டவருக்கு கிடைக்கப் பெறாத உரிமை எது?
A.
சட்டத்திற்கு முன் சமம்
B.
ஆரம்ப கல்விக்கான உரிமை
C.
சமய நிகழ்வுகளை மேலாளும் சுதந்திரம்
D.
கல்வி நிறுவனங்களை நிறுவி நிர்வகிக்கும் சிறுபான்மையினருக்கான உரிமை
Answer:
D.
கல்வி நிறுவனங்களை நிறுவி நிர்வகிக்கும் சிறுபான்மையினருக்கான உரிமை
24.
பின்வரும் அம்சங்களில் இந்திய அரசியலமைப்பு நடைமுறைக்கு வருவதற்கு முன்பிருந்தே செயல்பாட்டிற்கு வந்தது எது?
A.
அடிப்படை உரிமைகள்
B.
குடியுரிமை
C.
அரசு கொள்கையின் வழிகாட்டு நெறிகள்
D.
அரசியலமைப்பு திருத்தங்கள்
Answer:
B.
குடியுரிமை
25.
கீழ்க்கண்ட பட்டியல் Iஐ பட்டியல் II உடன் பொருத்தி, சரியான விடையைத் தேர்ந்தெடு.
சரியாகப் பொருத்தப்பட்டதைத் தேர்ந்தெடுக்கவும்.
| பட்டியல் I | பட்டியல் II |
|---|---|
| (a) சையனோ பாக்டீரியா | 1. ரோடோஸ்பைரில்லம் |
| (b) அம்மோனியாவாக்கும் பாக்டீரியா | 2. தையோ பேசில்லஸ் |
| (c) ஒளிச்சேர்க்கை பாக்டீரியா | 3. பாசில்லஸ் |
| (d) நைட்ரஜனை குறைக்கும் பாக்டீரியா | 4. நாஸ்டாக் |
சரியாகப் பொருத்தப்பட்டதைத் தேர்ந்தெடுக்கவும்.
A.
1 2 4 3
B.
1 2 3 4
C.
4 3 2 1
D.
4 3 1 2
Answer:
D.
4 3 1 2
26.
பின்வரும் இணைகளை கருத்தில் கொள்க:
I. வில்லி-வில்லிஸ் - ஆஸ்திரேலியா
II. டைபூன்கள் - சீனா
III. ஹரிகேன் - ஜப்பான்
மேற்குறிப்பிட்ட இணைகளில் எது சரி?
I. வில்லி-வில்லிஸ் - ஆஸ்திரேலியா
II. டைபூன்கள் - சீனா
III. ஹரிகேன் - ஜப்பான்
மேற்குறிப்பிட்ட இணைகளில் எது சரி?
A.
I மட்டும்
B.
I மற்றும் II
C.
II மற்றும் III
D.
II மட்டும்
Answer:
B.
I மற்றும் II
27.
புவி அமைப்பியல் யுகங்களை அதனதன் காலங்களோடு பொருத்துக.
| (a) கேம்பிரியனுக்கு முன்காலம் | 1. ஜுராசிக் |
| (b) செனோசோயிக் யுகம் | 2. ஆர்கேயன் |
| (c) மீசோசோயிக் யுகம் | 3. சிலூரியன் |
| (d) தொல்லுயிர் யுகம் | 4. இயோசின் |
A.
2 4 1 3
B.
3 2 4 1
C.
4 1 3 2
D.
1 3 2 4
Answer:
A.
2 4 1 3
28.
கீழ்கண்டவற்றை சரியாக பொருத்துக:
| (a) டாக்டர் காற்று | 1. சுவிட்சர்லாந்து |
| (b) செர்ரி பால்சம் | 2. சகரா (ஆப்பிரிக்கா) |
| (c) இரத்த மழை | 3. தெற்கு இத்தாலி |
| (d) பான் | 4. கர்நாடகா (இந்தியா) |
A.
1 3 2 4
B.
2 4 3 1
C.
3 2 4 1
D.
4 1 3 2
Answer:
B.
2 4 3 1
29.
பின்வரும் விஜயநகரப் பேரரசின் பிரிவுகளை இறங்கு வரிசையில் எழுது.
I. ராஜ்ஜியங்கள்
II. கூற்றங்கள்
III. வளநாடுகள்
IV. நாடுகள்
I. ராஜ்ஜியங்கள்
II. கூற்றங்கள்
III. வளநாடுகள்
IV. நாடுகள்
A.
I, III, IV, II
B.
I, II, IV, III
C.
II, III, IV, I
D.
I, III, II, IV
Answer:
A.
I, III, IV, II
30.
கீழ்க்கண்ட கருத்துக்களில் தவறானதை சுட்டிக் காண்பிக்கவும்.
A.
சமுத்திர குப்தர் தென்னிந்தியாவில் 12 அரசுகளை வென்றார்
B.
பாஹியானின் சுற்றுலா குறிப்பு குப்த சாம்ராஜ்யத்தின் நிலைமையை விளக்குகிறது
C.
ஸ்கந்த குப்தர் ஹூணர்களால் தோற்கடிக்கப்பட்டார்
D.
குமார குப்தர் மேற்கு இந்தியாவில் வெள்ளி நாணயங்களை வழங்கினார்
Answer:
C.
ஸ்கந்த குப்தர் ஹூணர்களால் தோற்கடிக்கப்பட்டார்
31.
பருப்பொருளின் நிலைகளது என்ட்ரோபிகளை ஏறுவரிசையில் குறிப்பது
A.
திண்மங்கள், திரவங்கள், வாயுக்கள், பி.இ.சி.கள்
B.
திரவங்கள், வாயுக்கள், பி.இ.சி.கள், திண்மங்கள்
C.
வாயுக்கள், திரவங்கள், திண்மங்கள், பி.இ.சி.கள்
D.
பி.இ.சி.கள், திண்மங்கள், திரவங்கள், வாயுக்கள்
Answer:
D.
பி.இ.சி.கள், திண்மங்கள், திரவங்கள், வாயுக்கள்
32.
கருங்கடல் என்று பெயர் இடப்பட்டிருப்பதற்கான காரணம்
A.
அது கருமை நிறத்தில் இருப்பதால்
B.
நுண் கடற்பாசியின் மிகுதியான செறிவின் காரணமாக
C.
அதன் நீர் அனைத்தையும் கருமை நிறத்திற்கு மாற்றுவதால்
D.
(அ) மற்றும் (இ) ஆகிய இரண்டும்
Answer:
B.
நுண் கடற்பாசியின் மிகுதியான செறிவின் காரணமாக
33.
பொருத்துக:
| (a) மௌலானா அபுல் கலாம் ஆசாத் | 1. தேஷ் |
| (b) மகாத்மா காந்தி | 2. மக்களின் நண்பன் |
| (c) ஆலன் ஆக்டேவியன் ஹியூம் | 3. தி ஹரிஜன் |
| (d) டாக்டர். இராஜேந்திர பிரசாத் | 4. அல் ஹிலால் |
A.
1 2 3 4
B.
4 3 2 1
C.
2 4 1 3
D.
3 1 2 4
Answer:
B.
4 3 2 1
34.
கீழ்கண்டவற்றுள் துருவ பாதையைச் சுற்றும் செயற்கைக்கோள் எது?
A.
INSAT
B.
GSAT
C.
METSAT
D.
Resource sat
Answer:
D.
Resource sat
35.
அனல் மின் நிலையங்கள் அமைந்துள்ள இடங்கள்
A.
தூத்துக்குடி, ராமகுண்டம், ராஜ்காட்
B.
நரோரா, கைகா, பால்காட்
C.
கடலூர், கோட்டா, தாராப்பூர்
D.
சேலம், பூனே, நரோரா
Answer:
A.
தூத்துக்குடி, ராமகுண்டம், ராஜ்காட்
36.
பொருத்துக:
| (a) தென் இந்தியாவின் மான்செஸ்டர் | 1. சிவகாசி |
| (b) குட்டி ஜப்பான் | 2. சென்னை |
| (c) நெசவுத் தலைநகரம் | 3. கோயம்புத்தூர் |
| (d) தெற்காசியாவின் டெட்ராய்ட் | 4. கரூர் |
A.
3 1 4 2
B.
3 1 2 4
C.
1 3 4 2
D.
2 1 3 4
Answer:
A.
3 1 4 2
37.
பணவாட்டம் என்பது விலையின் எந்த நிலையைக் குறிக்கும்?
A.
விலை குறைதல்
B.
விலை உயர்தல்
C.
விலை நிலைப்படுத்தப்படுதல்
D.
மிதமான விலை உயர்தல்
Answer:
A.
விலை குறைதல்
38.
கீழே கொடுக்கப்பட்டுள்ள பொருட்களின் குழுமத்திற்கு பொருந்தாதவற்றை கண்டறி.
கண்ணாடி, எபோனைட், காப்பர், ரப்பர்.
கண்ணாடி, எபோனைட், காப்பர், ரப்பர்.
A.
எபோனைட்
B.
காப்பர்
C.
கண்ணாடி
D.
ரப்பர்
Answer:
B.
காப்பர்
39.
ஒலியைப் பற்றிய கீழ்கண்ட கூற்றுகளில் சரியானவை எவை?
I. ஒலியானது நெட்டலைகள் மற்றும் குறுக்கலைகளை கொண்டது
II. ஒலியானது வெற்றிடத்திலும் பயணிக்கும்
III. ஒலி அலைகளின் குறுக்கீட்டு விளைவினால் உண்டாவது விம்மல்கள் ஆகும்
IV. ஒலி அலை செறிவின் அலகு, ஹெர்ட்ஸ் ஆகும்
I. ஒலியானது நெட்டலைகள் மற்றும் குறுக்கலைகளை கொண்டது
II. ஒலியானது வெற்றிடத்திலும் பயணிக்கும்
III. ஒலி அலைகளின் குறுக்கீட்டு விளைவினால் உண்டாவது விம்மல்கள் ஆகும்
IV. ஒலி அலை செறிவின் அலகு, ஹெர்ட்ஸ் ஆகும்
A.
I மற்றும் II
B.
II மட்டும்
C.
III மட்டும்
D.
III மற்றும் IV
Answer:
C.
III மட்டும்
40.
கீழ்கண்டவற்றுள் நாலாயிரதிவ்யப் பிரபந்தத்தின் எந்த தொகுப்பு சரியாக பொருத்தப்பட்டுள்ளது?
A.
முதலாபிரம பாடல்கள் - இயற்பா
B.
இரண்டாமாபிரம பாடல்கள் - பெரியதிருமொழி
C.
மூன்றாமாபிரம பாடல்கள் - திருவாய்மொழி
D.
நான்காமாபிரம பாடல்கள் - திருமொழி
Answer:
B.
இரண்டாமாபிரம பாடல்கள் - பெரியதிருமொழி
41.
புறத் தூய்மை நீரான் அமையும்; அகத்தூய்மை எதனால் அறியப்படும்?
A.
தவத்தான் வரும்
B.
வாய்மையான் காணப்படும்
C.
துண்ணக் கெடும்
D.
ஒளியோடு ஒழுகப்படும்
Answer:
B.
வாய்மையான் காணப்படும்
42.
'தொடர் நிலைச் செய்யுள்' என்ற தொடர்க்குரிய இலக்கிய வகை எது?
A.
நீதி இலக்கியம்
B.
எட்டுத்தொகை நூல்கள்
C.
காப்பிய இலக்கியம்
D.
பிள்ளைத்தமிழ் இலக்கியம்
Answer:
C.
காப்பிய இலக்கியம்