GK Tamil
Home TNPSC Quiz History Geography Science Indian Polity Sports Contact

TNPSC Group 2 2012 Preliminary Examination

General Tamil Questions 51 to 75

1.  பட்டியல் I-ல் உள்ள சொல்லை பட்டியல் II-ல் உள்ள பொருளுடன் பொருத்தி சரியான விடையைத் தேர்ந்தெடு.
சொல் பொருள்
(a) ஆழல் 1. அரசு புரிதல்
(b) ஆளுதல் 2. கறையான்
(c) ஆழி 3. சிங்கம்
(d) ஆளி 4. கடல்
A.   2 1 4 3
B.   1 2 3 4
C.   4 2 3 1
D.   1 3 2 4
Answer: A.  2 1 4 3
2.  பொருத்துக:
(a) கோ.வி. மணிசேகர் 1. வேருக்கு நீர்
(b) பாலகுமாரன் 2. யாகசாலை
(c) ராஜம் கிருஷ்ணன் 3. குருதிப்புனல்
(d) இந்திரா பார்த்தசாரதி 4. இரும்பு குதிரை
A.   1 3 4 2
B.   2 4 1 3
C.   3 2 1 4
D.   4 1 2 3
Answer: B.  2 4 1 3
3.  பொருத்துக
(a) கார் நாற்பது 1. பொய்கையார்
(b) களவழி நாற்பது 2. கபிலர்
(c) இன்னா நாற்பது 3. மதுரைக் கண்ணன் கூத்தனார்
(d) இனியவை நாற்பது 4. பூதஞ்சேந்தனார்
A.   2 4 1 3
B.   3 1 2 4
C.   1 3 4 2
D.   4 2 3 1
Answer: B.  3 1 2 4
4.  பின்வரும் இலக்கணக் குறிப்புக்குப் பொருந்தாத சொல்லைக் கண்டறிக : 'வினையெச்சம்'
A.   படர்ந்து
B.   தொட்டு
C.   பதித்து
D.   எளிது
Answer: D.  எளிது
5.  வேர்ச்சொல் தெரிவு செய் வந்தான்
வருதல் வாய்வது. வான் தோய் வெற்பன்
வந்தனன் ஆயின், அம் தளிர்ச் செயலைத் - (அகநானூறு)
A.   வந்தனன்
B.   வா
C.   வருதல்
D.   வந்தான்
Answer: B.  வா
6.  "வானாகி மண்ணாகி वளியாகி ஒளியாகி
ஊனாகி உயிராகி உண்மையுமாய் இன்மையுமாய்"
-இப்பாடலடிகளில் முரண் காணப்படுவது
A.   வான் - மண்
B.   வளி - ஒளி
C.   ஊன் - உயிர்
D.   உண்மை - இன்மை
Answer: D.  உண்மை - இன்மை
7.  பட்டியல் I-ல் உள்ள சொற்றொடரை பட்டியல் II-ல் உள்ள சொற்றொடருடன் பொருத்தி கொடுக்கப்பட்டுள்ள குறியீடுகளைக் கொண்டு சரியான விடையைத் தேர்ந்தெடு:
பட்டியல்-I பட்டியல்-II
(a) உலகில் நடக்கும் நிகழ்ச்சிகளை படமாக்குவது 1. வால்ட் டிஸ்னி
(b) ஒரு நிகழ்வை மட்டும் எடுத்துக் கொள்வது 2. கல்விப்படம்
(c) கற்பதற்கென உருவாக்கப்படும் படம் 3. விளக்கப்படம்
(d) கருத்துப்படம் அமைக்கத் தொடங்கியவர் 4. செய்திப்படம்
A.   4 2 1 3
B.   2 1 3 4
C.   4 3 2 1
D.   3 1 2 4
Answer: C.  4 3 2 1
8.  தொழிற்பெயர் அல்லாத சொல் எது?
A.   என்னல்
B.   கோறல்
C.   தருதல்
D.   கொல்லாமை
Answer: A.  என்னல்
9.  கவிதை நூலாசிரியர்களோடு நூல்களைப் பொருத்துக:
I-நூல் II-நூலாசிரியர்
(a) கண்ணீர்ப் பூக்கள் 1. அப்துல் ரகுமான்
(b) இன்னொரு தேசிய கீதம் 2. மீரா
(c) ஊசிகள் 3. வைரமுத்து
(d) பால்வீதி 4. மு மேத்தா
A.   2 4 3 1
B.   1 3 2 4
C.   3 1 4 2
D.   2 4 1 3
Answer: A.  2 4 3 1
10.  கோடிட்ட இடத்தை நிரப்புக:
காட்சி என்னும் தொழிற்பெயர் ___________ எனப்பிரியும்
A.   கா + சி
B.   கண் + சி
C.   காண் + சி
D.   காட் + சி
Answer: C.  காண் + சி
11.  வா - என்னும் வேர்ச்சொல் எவ்வாறு வினையாலணையும் பெயராய் அமையும்?
A.   வருவான்
B.   வருதல்
C.   வந்தவன்
D.   வாரான்
Answer: C.  வந்தவன்
12.  துடை-என்னும் வேர்ச்சொல்லின் வினைமுற்று எழுதுக:
A.   துடைத்த
B.   துடைத்தல்
C.   துடைத்தான்
D.   துடைத்து
Answer: C.  துடைத்தான்
13.  வேர்ச்சொல் பொருத்துக:
(a) வென்றான் 1. நல்கு
(b) தருவான் 2. கல்
(c) நல்கினர் 3. வெல்
(d) சுற்று 4. தா
A.   3 4 2 1
B.   4 1 2 3
C.   1 2 3 4
D.   3 4 1 2
Answer: D.  3 4 1 2
14.  "நாணாமை நாடாமை நாரின்மை யாது ஒன்றும்
பேணாமை பேதை தொழில்"
-இக்குறளில் உள்ளவாறு எது தவறான விடை?
A.   சீர்மோனை வந்துள்ளது
B.   சீர் எதுகை வந்துள்ளது
C.   சீர் இயைபு வந்துள்ளது
D.   அடி இயைபு வந்துள்ளது
Answer: B.  சீர் எதுகை வந்துள்ளது
15.  'பண்புப்பெயர்' என்பதன் சரியான இலக்கண விளக்கம் தேர்க :
A.   வண்ணம் வடிவம், அளவு, குணம் என்பனவற்றைக் குறித்து வரும்
B.   வடிவத்தையும், வண்ணத்தையும் மட்டும் குறித்து வரும்
C.   அளவையும், குணத்தையும் மட்டும் குறித்து வரும்
D.   காலம், தொழில் இரண்டையும் குறித்து வரும்
Answer: A.  வண்ணம் வடிவம், அளவு, குணம் என்பனவற்றைக் குறித்து வரும்
16.  கீழ்வரும் குறளிலுள்ள எதிர்ச்சொல்லை எழுது:
"பற்றுக பற்றற்றான் பற்றினை அப்பற்றைப்
பற்றுக பற்று விடற்கு"
A.   பற்றுக பற்றற்றான்
B.   பற்றினை X பற்றுவிடல்
C.   பற்றுக X பற்றுவிடல்
D.   பற்றுவிடல் X அப்பற்றை
Answer: C.  பற்றுக X பற்றுவிடல்
17.  எது எதிர்ச்சொல் ?
"வைதோரைக் கூட வையாதே இந்த
வைய முழுதும் பொய்த்தாலும் பொய்யாதே!
வெய்ய வினைகள் செய்யாதே - கல்லை
வீணில் பறவைகள் மீதில் எய்யாதே"
A.   பொய்த்தாலும் X பொய்யாதே
B.   பொய்த்தாலும் × செய்யாதே
C.   பொய்த்தாலும் × வையாதே
D.   பொய்த்தாலும் X எய்யாதே
Answer: A.  பொய்த்தாலும் X பொய்யாதே
18.  கீழ்க்கண்ட சொற்களுள் எது எதிர்ச்சொல் இல்லை?
A.   செய்தக்க X செய்யாமை
B.   தலையாயது x முதன்மையானது
C.   பற்றுக பற்றுவிடல்
D.   இயங்கா × இயங்குதல்
Answer: B.  தலையாயது x முதன்மையானது
19.  கீழ்க்கண்ட சொற்களுள் எது எதிர்ச்சொல் இல்லை?
A.   தலைப்பட்டன X தடைபட்டன
B.   பயிலுதல் X பயிற்றுதல்
C.   ஏற்புரை X மறுப்புரை
D.   பாஷையறிவுடையோர் சாதுரியமாகப் பேசுவோர்
Answer: D.  பாஷையறிவுடையோர் சாதுரியமாகப் பேசுவோர்
20.  வாக்கிய அமைப்பினைக் கண்டறதல்:
வேலன் நன்றாகப் படித்ததால் தேர்வில் முதல் மதிப்பெண் பெற்றான் - எவ்வகை வாக்கியம் எனச் சுட்டுக.
A.   உணர்ச்சி வாக்கியம்
B.   உடன்பாட்டு வாக்கியம்
C.   தன்வினை வாக்கியம்
D.   கலவை வாக்கியம்
Answer: D.  கலவை வாக்கியம்
21.  அகர வரிசைப்படி சொற்களை சீர் செய்க:
A.   கேடயம், கெடு, குடம், கடம்
B.   கெடு. கேடயம், கடம், குடம்
C.   குடம், கடம், கேடயம், கெடு
D.   கடம், குடம், கெடு, கேடயம்
Answer: D.  கடம், குடம், கெடு, கேடயம்
22.  "முக்தி நூல்" என அடைமொழி கொண்ட நூல் யாது?
A.   மணிமேகலை
B.   சீவக சிந்தாமணி
C.   குண்டலகேசி
D.   வளையாபதி
Answer: B.  சீவக சிந்தாமணி
23.  முருகனுக்கு 'அடி' விழுந்தது - 'அடி' என்ற பெயர்ச்சொல்லின் வகை அறிக.
A.   முதனிலைத் தொழிற்பெயர்
B.   தொழிற்பெயர்
C.   முதனிலை திரிந்த தொழிற்பெயர்
D.   காலப்பெயர்
Answer: A.  முதனிலைத் தொழிற்பெயர்
24.  நேர்க்கூற்று குறித்து கீழ்க்கண்டவற்றுள் சரியானது எது?
A.   ஒருவர் கூறியதை அவர் கூறியபடியே கூறுவது, மேற்கோள் குறியீடு இடம்பெறும் தன்மை. முன்னிலைப் பெயர்கள் இடம்பெறும்
B.   ஒருவர் கூறியதை அப்படியே கூறாமல் அயலார் கூறுவது
C.   ஒரு செய்தியைத் தெளிவாகத் தெரிவிக்கும்
D.   வினாப் பொருள் தரும் வாக்கியம்
Answer: A.  ஒருவர் கூறியதை அவர் கூறியபடியே கூறுவது, மேற்கோள் குறியீடு இடம்பெறும் தன்மை. முன்னிலைப் பெயர்கள் இடம்பெறும்
25.  பின்வரும் இலக்கணங்களுள் தவறானது எது?
A.   மறவற்க-எதிர்மறை வியங்கோள் வினைமுற்று
B.   அறிகல்லாதவர் - வினைச்சொல்
C.   மனத்திட்பம் ஆறாம் வேற்றுமைத்தொகை
D.   வைவாள் - உரிச்சொற்றொடர்
Answer: B.  அறிகல்லாதவர் - வினைச்சொல்
;