GK Tamil
Home TNPSC Quiz History Geography Science Indian Polity Sports Contact

TNPSC Group 2 2012 Preliminary Examination

General Tamil Questions 1 to 25

1.  புன்மனம் - என்பதன் இலக்கணக் குறிப்பு தேர்க :
A.   பண்புத்தொகை
B.   வினைத்தொகை
C.   உருவகம்
D.   உம்மைத்தொகை
Answer: A.  பண்புத்தொகை
2.  வாக்கிய அமைப்பினைக் கண்டறிதல்:

கனகவிசயர் செங்குட்டுவனால் வெல்லப்பட்டனர் - எவ்வகை வாக்கியம் எனச்சுட்டுக.
A.   செய்வினை வாக்கியம்
B.   செயப்பாட்டுவினை வாக்கியம்
C.   செய்தி வாக்கியம்
D.   உடன்பாட்டு வாக்கியம்
Answer: B.  செயப்பாட்டுவினை வாக்கியம்
3.  இயற்கை கவிதை தத்துவ அறிஞர்
A.   ஸ்ரீ அரவிந்தர்
B.   பாரதியார்
C.   தாகூர்
D.   சுப்ரமணியசிவம்
Answer: C.  தாகூர்
4.  பிரித்தெழுதுக : வெந்நீர்
A.   வெண்மை நீர்
B.   வெம்மை + நீர்
C.   வெம் + நீர்
D.   வெண் + நீர்
Answer: B.  வெம்மை + நீர்
5.  பிரித்தெழுதுக : அறைந்தறைந்து
A.   அறை + அறைந்து
B.   அறைந்து + அறைந்து
C.   அறை + அறை + அறைந்து
D.   அறைதல் + அறைந்து
Answer: B.  அறைந்து + அறைந்து
6.  சரியான உவமையை தேர்ந்தெடுக்க : வேகம்
A.   கயிறற்ற பட்டம் போல
B.   காய்ந்த மாடு கம்பங்கொல்லையில் மேய்ந்தாற்போல
C.   கண்ணிலான் கண்பெற்று இழந்தது போல
D.   ஆலையில் இட்ட கரும்பு போல
Answer: B.  காய்ந்த மாடு கம்பங்கொல்லையில் மேய்ந்தாற்போல
7.  Drag - என்ற ஆங்கிலச் சொல்லுக்கு கீழ்க்காணும் விடைகளில் எது தவறானது?
A.   இழு
B.   வலை
C.   சுமை
D.   தடை
Answer: C.  சுமை
8.  பொருந்தா இணையைக் கண்டறிக:
A.   Dome - குவிந்த கூரை
B.   Doyen - பிரபலமானவர்
C.   Duress - விருப்பம்
D.   Dole - மானியச் சலுகை
Answer: C.  Duress - விருப்பம்
9.  தமிழ்நாட்டின் சுதேச இயக்க தந்தை என அழைக்கப்படுபவர்
A.   இராஜகோபாலாச்சாரியார்
B.   சுப்பிரமணியசிவா
C.   வ.உ. சிதம்பரம் பிள்ளை
D.   சத்தியமூர்த்தி
Answer: C.  வ.உ. சிதம்பரம் பிள்ளை
10.  சொற்களை ஒழுங்குபடுத்தி சொற்றொடராக்குதல்:
A.   ஆதி காவியமென எண்ணப்படுவது வடமொழியில் வால்மீகி இராமாயணம்
B.   வடமொழியில் வால்மீகி இராமாயணம் ஆதி காவியமென எண்ணப்படுவது
C.   வடமொழியில் ஆதிகாவியமென எண்ணப்படுவது வால்மீகி இராமாயணம்
D.   காவியமென எண்ணப்படுவது வடமொழியில் ஆதி வால்மீகி இராமாயணம்
Answer: C.  வடமொழியில் ஆதிகாவியமென எண்ணப்படுவது வால்மீகி இராமாயணம்
11.  காண் - என்னும் வேர்ச்சொல்லின் வினையெச்சத்தை தேர்ந்தெடுக்க:
A.   கண்ட
B.   கண்டு
C.   காணுதல்
D.   காண்க
Answer: B.  கண்டு
12.  "கோளில் பொறியில் குணமிலவே எண்குணத்தான்
தாளை வணங்காத் தலை"

-இக்குறளில், கோளில் - குணமிலவே என்பது
A.   இணை மோனை
B.   பொழிப்பு மோனை
C.   ஒருஉ மோனை
D.   கூழை மோனை
Answer: C.  ஒருஉ மோனை
13.  'வானாகி மண்ணாகி வளியாகி ஒளியாகி
ஊனாகி உயிராகி உண்மையுமாய் இன்மையுமாய்'

-இப்பாடலடிகளில்
A.   இயைபு, மோனை அமைந்துள்ளது
B.   எதுகையும் மோனையும் அமைந்துள்ளது
C.   இயைபு, எதுகை மோனை அமைந்துள்ளன
D.   இயைபு மட்டும் அமைந்துள்ளது
Answer: C.  இயைபு, எதுகை மோனை அமைந்துள்ளன
14.  கீழ்க்காணும் விடைகளில் எது சரியானது?
A.   கோ - குகன்
B.   சோ - மகன்
C.   சே - எருது
D.   தா - விடை
Answer: C.  சே - எருது
15.  பெயர்ச்சொல்லின் வகையறிக : நீளம்
A.   குணப்பெயர்
B.   பொருட்பெயர்
C.   தொழிற்பெயர்
D.   சினைப்பெயர்
Answer: A.  குணப்பெயர்
16.  பட்டியல் I-ல் உள்ள சொற்றொடரை பட்டியல் II-ல் உள்ள தொடர்களுடன் பொருத்தி கீழே கொடுக்கப்பட்டுள்ள குறியீடுகளைக் கொண்டு சரியான விடையைத் தேர்ந்தெடு.
பட்டியல்-I பட்டியல்-II
(a) தாய்மொழி வழியாகக் 1. தமிழில் படித்தேன்
(b) நான் தாய்மொழித் 2. தமிழில் பேசுதல் தகுதிமிகு பண்பாகும்
(c) தமிழர் தமிழறிந்தாரிடம் 3. உள்ள நூல்களை நன்கு கற்க வேண்டும்
(d) நாம் பிறமொழியில் 4. கல்வி கற்பதே சாலச் சிறந்தது
A.   3 2 1 4
B.   2 1 4 3
C.   4 1 2 3
D.   3 1 4 2
Answer: C.  4 1 2 3
17.  பொருத்துக
(a) திண்மை 1. தீமை
(b) தின்மை 2. வலிமை
(c) தண்மை 3. இயல்பு
(d) தன்மை 4. குளிர்ச்சி
A.   2 1 4 3
B.   1 3 2 4
C.   4 2 3 1
D.   1 3 4 2
Answer: A.  2 1 4 3
18.  1. இடன்
2. திறன்
3. கொம்பர்
4. இலை
- ஈற்றுப்போலிகள்
A.   3.4-சரி
B.   1.2-சரி
C.   1, 2, 3-சரி
D.   1, 2, 4-சரி
Answer: C.  1, 2, 3-சரி
19.  'தொண்டர் சீர் பரவுவார்' என்று வழங்கப்படுபவர் யார்?
A.   கம்பர்
B.   சேக்கிழார்
C.   இராமலிங்க அடிகள்
D.   சுந்தரர்
Answer: B.  சேக்கிழார்
20.  தன்வினை வாக்கியத்தைக் கண்டறிக.
A.   சீதை புத்தாடை அணிவித்தாள்
B.   சீதை புத்தாடை அணிந்தாள்
C.   புத்தாடை சீதையால் அணிவிக்கப்பட்டது
D.   சீதை புத்தாடை அணியாள்
Answer: B.  சீதை புத்தாடை அணிந்தாள்
21.  கூறு -என்னும் வேர்ச்சொல்லின் பெயரெச்சத்தை தேர்ந்தெடு
A.   கூறி
B.   கூறுக
C.   கூறல்
D.   கூறிய
Answer: D.  கூறிய
22.  பொருந்தாச் சொல்லைக் கண்டறி
A.   கயல்
B.   இயல்
C.   துயில்
D.   பயில்
Answer: A.  கயல்
23.  பட்டியல் 1-ல் உள்ள சொல்லை பட்டியல் II-ல் உள்ள பொருளுடன் பொருத்தி சரியான விடையைத் தேர்ந்தெடு
பட்டியல் I-சொல் பட்டியல் II-பொருள்
(a) கிழக்கு 1. விதந்து கூறுதல்
(b) கிளத்தல் 2. கீழ்த்திசை
(c) கிழத்தி 3. கிளர்ச்சி
(d) கிளப்பம் 4. உரியவன்
A.   2 1 4 3
B.   2 1 3 4
C.   4 2 3 1
D.   1 3 2 4
Answer: A.  2 1 4 3
24.  சரியான பிரித்தறிதலை கண்டறிக:
A.   ஈராறாண்டு ஈறு + ஆறு + ஆண்டு
B.   ஈரெட்டாண்டு -இருபது + எட்டு ஆண்டு
C.   ஐயைந்தாய் - ஐந்து - ஐந்து + ஆய்
D.   மூவைந்தாய் - முப்பது + ஐந்து ஆய்
Answer: C.  ஐயைந்தாய் - ஐந்து - ஐந்து + ஆய்
25.  பிரித்தெழுதுக: எந்தாய்
A.   எம் தந்தாய்
B.   எம் + தாய்
C.   எந்தன் தாய்
D.   எம் தந்தை
Answer: B.  எம் + தாய்
;