GK Tamil
Home TNPSC Thirukkural Quiz History Geography Science Indian Polity Sports Contact

General Tamil Questions 51 to 75

51.  பட்டியல் I-ல் உள்ள சொல்லை பட்டியல் II-ல் உள்ள பொருளுடன் பொருத்தி சரியான விடையைத் தேர்ந்தெடு.
சொல் பொருள்
(a) ஆழல் 1. அரசு புரிதல்
(b) ஆளுதல் 2. கறையான்
(c) ஆழி 3. சிங்கம்
(d) ஆளி 4. கடல்
Answer: A.   2 1 4 3
52.  பொருத்துக:
(a) கோ.வி. மணிசேகர் 1. வேருக்கு நீர்
(b) பாலகுமாரன் 2. யாகசாலை
(c) ராஜம் கிருஷ்ணன் 3. குருதிப்புனல்
(d) இந்திரா பார்த்தசாரதி 4. இரும்பு குதிரை
Answer: B.   2 4 1 3
53.  பொருத்துக
(a) கார் நாற்பது 1. பொய்கையார்
(b) களவழி நாற்பது 2. கபிலர்
(c) இன்னா நாற்பது 3. மதுரைக் கண்ணன் கூத்தனார்
(d) இனியவை நாற்பது 4. பூதஞ்சேந்தனார்
Answer: B.   3 1 2 4
54.  பின்வரும் இலக்கணக் குறிப்புக்குப் பொருந்தாத சொல்லைக் கண்டறிக : 'வினையெச்சம்'
Answer: D.   எளிது
55.  வேர்ச்சொல் தெரிவு செய் வந்தான்
வருதல் வாய்வது. வான் தோய் வெற்பன்
வந்தனன் ஆயின், அம் தளிர்ச் செயலைத் - (அகநானூறு)
Answer: B.   வா
56.  "வானாகி மண்ணாகி वளியாகி ஒளியாகி
ஊனாகி உயிராகி உண்மையுமாய் இன்மையுமாய்"
-இப்பாடலடிகளில் முரண் காணப்படுவது
Answer: D.   உண்மை - இன்மை
57.  பட்டியல் I-ல் உள்ள சொற்றொடரை பட்டியல் II-ல் உள்ள சொற்றொடருடன் பொருத்தி கொடுக்கப்பட்டுள்ள குறியீடுகளைக் கொண்டு சரியான விடையைத் தேர்ந்தெடு:
பட்டியல்-I பட்டியல்-II
(a) உலகில் நடக்கும் நிகழ்ச்சிகளை படமாக்குவது 1. வால்ட் டிஸ்னி
(b) ஒரு நிகழ்வை மட்டும் எடுத்துக் கொள்வது 2. கல்விப்படம்
(c) கற்பதற்கென உருவாக்கப்படும் படம் 3. விளக்கப்படம்
(d) கருத்துப்படம் அமைக்கத் தொடங்கியவர் 4. செய்திப்படம்
Answer: C.   4 3 2 1
58.  தொழிற்பெயர் அல்லாத சொல் எது?
Answer: A.   என்னல்
59.  கவிதை நூலாசிரியர்களோடு நூல்களைப் பொருத்துக:
I-நூல் II-நூலாசிரியர்
(a) கண்ணீர்ப் பூக்கள் 1. அப்துல் ரகுமான்
(b) இன்னொரு தேசிய கீதம் 2. மீரா
(c) ஊசிகள் 3. வைரமுத்து
(d) பால்வீதி 4. மு மேத்தா
Answer: A.   2 4 3 1
60.  கோடிட்ட இடத்தை நிரப்புக:
காட்சி என்னும் தொழிற்பெயர் ___________ எனப்பிரியும்
Answer: C.   காண் + சி
61.  வா - என்னும் வேர்ச்சொல் எவ்வாறு வினையாலணையும் பெயராய் அமையும்?
Answer: C.   வந்தவன்
62.  துடை-என்னும் வேர்ச்சொல்லின் வினைமுற்று எழுதுக:
Answer: C.   துடைத்தான்
63.  வேர்ச்சொல் பொருத்துக:
(a) வென்றான் 1. நல்கு
(b) தருவான் 2. கல்
(c) நல்கினர் 3. வெல்
(d) சுற்று 4. தா
Answer: D.   3 4 1 2
64.  "நாணாமை நாடாமை நாரின்மை யாது ஒன்றும்
பேணாமை பேதை தொழில்"
-இக்குறளில் உள்ளவாறு எது தவறான விடை?
Answer: B.   சீர் எதுகை வந்துள்ளது
65.  'பண்புப்பெயர்' என்பதன் சரியான இலக்கண விளக்கம் தேர்க:
Answer: A.   வண்ணம் வடிவம், அளவு, குணம் என்பனவற்றைக் குறித்து வரும்
66.  கீழ்வரும் குறளிலுள்ள எதிர்ச்சொல்லை எழுது:
"பற்றுக பற்றற்றான் பற்றினை அப்பற்றைப்
பற்றுக பற்று விடற்கு"
Answer: C.   பற்றுக X பற்றுவிடல்
67.  எது எதிர்ச்சொல்?
"வைதோரைக் கூட வையாதே இந்த
வைய முழுதும் பொய்த்தாலும் பொய்யாதே!
வெய்ய வினைகள் செய்யாதே - கல்லை
வீணில் பறவைகள் மீதில் எய்யாதே"
Answer: A.   பொய்த்தாலும் X பொய்யாதே
68.  கீழ்க்கண்ட சொற்களுள் எது எதிர்ச்சொல் இல்லை?
Answer: B.   தலையாயது x முதன்மையானது
69.  கீழ்க்கண்ட சொற்களுள் எது எதிர்ச்சொல் இல்லை?
Answer: D.   பாஷையறிவுடையோர் சாதுரியமாகப் பேசுவோர்
70.  வாக்கிய அமைப்பினைக் கண்டறதல்:
வேலன் நன்றாகப் படித்ததால் தேர்வில் முதல் மதிப்பெண் பெற்றான் - எவ்வகை வாக்கியம் எனச் சுட்டுக.
Answer: D.   கலவை வாக்கியம்
71.  அகர வரிசைப்படி சொற்களை சீர் செய்க:
Answer: D.   கடம், குடம், கெடு, கேடயம்
72.  "முக்தி நூல்" என அடைமொழி கொண்ட நூல் யாது?
Answer: B.   சீவக சிந்தாமணி
73.  முருகனுக்கு 'அடி' விழுந்தது - 'அடி' என்ற பெயர்ச்சொல்லின் வகை அறிக.
Answer: A.   முதனிலைத் தொழிற்பெயர்
74.  நேர்க்கூற்று குறித்து கீழ்க்கண்டவற்றுள் சரியானது எது?
Answer: A.   ஒருவர் கூறியதை அவர் கூறியபடியே கூறுவது, மேற்கோள் குறியீடு இடம்பெறும் தன்மை. முன்னிலைப் பெயர்கள் இடம்பெறும்
75.  பின்வரும் இலக்கணங்களுள் தவறானது எது?
Answer: B.   அறிகல்லாதவர் - வினைச்சொல்
;