GK Tamil
Home TNPSC Quiz History Geography Science Indian Polity Sports Contact

TNPSC Group 2 2017 Preliminary Examination

General Studies Questions 1 to 25

1.  எறிபொருள் இயக்கம் என்பது மாறாத _______________ கொண்ட கிடைமட்ட இயக்கம் மற்றும் மாறாத _______________ கொண்ட செங்குத்து இயக்கம் ஆகியவற்றின் கலவை ஆகும்.
A.   முடுக்கம், திசைவேகம்
B.   திசைவேகம், முடுக்கம்
C.   இடப்பெயர்ச்சி, திசைவேகம்
D.   திசைவேகம், இடப்பெயர்ச்சி
Answer: B.  திசைவேகம், முடுக்கம்
2.  அணுக்கரு விசையானது
A.   மின்னூட்டத்தை சார்ந்துள்ளது
B.   சுழற்சியை சார்ந்திராது
C.   மின்னூட்டம் மற்றும் சுழற்சியை சார்ந்திராது
D.   சுழற்சியை சார்ந்துள்ளது ஆனால் மின்னூட்டம் சார்ந்திராது
Answer: D.  சுழற்சியை சார்ந்துள்ளது ஆனால் மின்னூட்டம் சார்ந்திராது
3.  ஆக்சிஜனைக் கொண்டு SO₃²⁻ முதல் SO₄²⁻ ஆக்சிஜனேற்றம் செய்யும் கீழ்காணும் வினையில்,
SO₃²⁻ + :Ö → SO₄²⁻
எது லூயிஸ் அமிலமாகவும் எது லூயிஸ் காரமாகவும் செயல்படுகிறது?
A.   SO₃²⁻ லூயிஸ் அமிலம் மற்றும் ஆக்சிஜன் லூயிஸ் காரம்
B.   ஆக்சிஜன் லூயிஸ் அமிலம் மற்றும் SO₃²⁻ லூயிஸ் காரம்
C.   இரண்டும் லூயிஸ் அமிலங்கள்
D.   இரண்டும் லூயிஸ் காரங்கள்
Answer: B.  ஆக்சிஜன் லூயிஸ் அமிலம் மற்றும் SO₃²⁻ லூயிஸ் காரம்
4.  சுவாசித்தலில் சயனைட் எதிர்ப்புத்திறன் இவற்றில் காணப்படுகிறது.
A.   தாவரங்களில் மட்டும்
B.   விலங்குகளில் மட்டும்
C.   தாவரங்கள் மற்றும் விலங்குகளில்
D.   தாவரங்கள் மற்றும் நுண்ணுயிரிகளில்
Answer: D.  தாவரங்கள் மற்றும் நுண்ணுயிரிகளில்
5.  ஆண் பாலின ஹார்மோன் 'டெஸ்டோஸ்டீரோனை' உற்பத்தி செய்வது
A.   லெய்டிக் செல்கள்
B.   செர்டோலை செல்கள்
C.   ஜெர்மினல் எபிதீலியல் செல்கள்
D.   ஸ்பெர்மெட்டோகோனியல் செல்கள்
Answer: A.  லெய்டிக் செல்கள்
6.  கீழ்க்கண்டவற்றுள் எது சரியாகப் பொருந்தி உள்ளது?
I. கிரிகார் மெண்டல் - நியுரோஸ்போரா
II. T.H. மார்க்கன் - டிரோசோபில்லா
III. C.B. பிரிட்ஜஸ் - தோட்டப் பயறு
IV. J.H. முல்லர் - எலிகள்
A.   I
B.   II
C.   III
D.   IV
Answer: B.  II
7.  நம் நாட்டில் உற்பத்தி செய்யப்படுகின்ற பொருள்கள் சிலவற்றின் மீது வரி விதிக்கப்படுகின்றது. இது மைய அரசுக்குச் செல்கின்றது. அந்த வரி
A.   நேர்முக வரி
B.   மறைமுக வரி
C.   கலால் வரி
D.   சேவை வரி
Answer: C.  கலால் வரி
8.  பொருத்துக:
(a) அன்னிபெசன்ட் 1. கேசரி
(b) பிபின் சந்திரபால் 2. காமன் வீல்
(c) பூபேந்திர நாத் தத் 3. நியூ ஆசியா
(d) திலக் 4. யுகாந்தர்
A.   3 4 1 2
B.   2 1 4 3
C.   4 3 1 2
D.   2 3 4 1
Answer: D.  2 3 4 1
9.  ஈ. வெ. ராமசாமிக்கு முன், வைக்கம் சத்தியாகிரகத்தை தொடங்கிய மூன்று தலைவர்கள் அவர்களாவது
A.   தி. பிரகாசம், தி.கே. மாதவன் மற்றும் கே.பி. கேசவ மேனன்
B.   தி.கே. மாதவன், கே.பி. கேசவமேனன் மற்றும் ஜார்ஜ் ஜோசப்
C.   ஜார்ஜ் ஜோசப், தி. பிரகாசம் மற்றும் தி. கே. மாதவன்
D.   கே.பி. கேசவ மேனன், தி. பிரகாசம் மற்றும் ஜார்ஜ் ஜோசப்
Answer: B.  தி.கே. மாதவன், கே.பி. கேசவமேனன் மற்றும் ஜார்ஜ் ஜோசப்
10.  'நவீன இந்தியாவின் தந்தை' என்றழைக்கப்படுபவர் யார்?
A.   அம்பேத்கார்
B.   'பெரியார்' ஈ.வெ.ரா
C.   காந்திஜி
D.   இராஜாராம் மோகன் ராய்
Answer: D.  இராஜாராம் மோகன் ராய்
11.  தம்மபாணி எவ்விடத்தின் பழையபெயர்?
A.   தமிழ்நாடு
B.   கேரளம்
C.   ஸ்ரீலங்கா
D.   கர்நாடகம்
Answer: C.  ஸ்ரீலங்கா
12.  'பாராளுமன்றத்தின் தலைசிறந்த நபர் விவேகானந்தர்' என்று குறிப்பிட்ட பத்திரிகையின் பெயர்
A.   யங் இந்தியா
B.   சமாச்சர் தர்பன்
C.   சுதேசி மித்ரன்
D.   நியூயார்க் ஹெரால்ட்
Answer: D.  நியூயார்க் ஹெரால்ட்
13.  பயிரிடக்கூடிய நிலங்கள் ஒன்று முதல் ஐந்து ஆண்டுகள் வரை உழப்படாத பொழுது, அது இவ்வாறு அழைக்கப்படுகிறது
A.   பயன்பாடற்ற விளைநிலம்
B.   நடப்பாண்டு தரிசு
C.   பிற தரிசு
D.   நிலையான மேய்ச்சல் நிலம்
Answer: C.  பிற தரிசு
14.  கங்கை - பிரம்மபுத்திரா அலையாத்தி காடுகளில் முக்கியமாக காணப்படும் மரவகையானது
A.   ரொடோடென்ட்ரோன்ஸ்
B.   கடின பனை வகை
C.   லாரல்ஸ்
D.   ஜினிப்பர்
Answer: B.  கடின பனை வகை
15.  தவறான பொருத்தத்தை கண்டுபிடிக்கவும்?
A.   இந்திய ஐரோப்பிய குடும்பம் - ஆர்யா
B.   ஆஸ்டிரிக் குடும்பம் - நிசாடா
C.   திராவிட குடும்பம் - திராவிடா
D.   சைனா திபெத்திய குடும்பம் - முன்டா
Answer: D.  சைனா திபெத்திய குடும்பம் - முன்டா
16.  ___________-லிருந்து இந்தியாவில் மக்கள் தொகை கணக்கெடுப்பு தொடங்கப்பட்டது.
A.   1862ம் வருடம்
B.   1872ம் வருடம்
C.   1882ம் வருடம்
D.   1892ம் வருடம்
Answer: B.  1872ம் வருடம்
17.  வாணிப நடவடிக்கையில் முற்றுரிமை தடைச்சட்டம் (MRTP Act), 1969 ஆனது ரத்து செய்யப்பட்டு போட்டிச் சட்டம் 2002ற்கு இக்காலத்திலிருந்து நடைமுறைபடுத்தப்பட்டது.
A.   2002
B.   2009
C.   2013
D.   2016
Answer: B.  2009
18.  S.N.அகர்வாலா உருவாக்கிய காந்திய திட்டத்தின் அடிப்படை நோக்கமானது
A.   வேளாண்மை வளர்ச்சி
B.   குடிசை மற்றும் கிராமிய தொழிலகங்களின் வளர்ச்சி
C.   சமத்துவத்தை அடைவது
D.   ஒட்டுமொத்த இந்தியாவின் மூலம் மற்றும் கலாச்சார நிலையினை உயர்த்துதல்
Answer: D.  ஒட்டுமொத்த இந்தியாவின் மூலம் மற்றும் கலாச்சார நிலையினை உயர்த்துதல்
19.  இந்திய திட்டக்குழுவின் இறுதியான துணைத் தலைவர்
A.   மன்மோகன் சிங்
B.   நரேந்திர மோடி
C.   அருண் ஜேட்லி
D.   மான்டேக் சிங் அலுவாலியா
Answer: D.  மான்டேக் சிங் அலுவாலியா
20.  தீவிர மாவட்ட வேளாண் திட்டம் தொடர்பான முதல் படிநிலை இந்த ஆண்டு துவங்கப்பட்டது
A.   1951-52
B.   1960-61
C.   1965-66
D.   1990-91
Answer: B.  1960-61
21.  தமிழ்நாடு அரசின் 'புது வாழ்வு திட்டம்' தொடர்பான கீழ்கண்ட கூற்றுகளில் எவை சரியானவை?
(i) இத்திட்டம் 2005-ல் தொடங்கப்பட்டது
(ii) உலக வங்கி இதற்கு நிதி உதவி வழங்குகிறது
(iii) இதற்கான திட்ட செலவு 1,667 கோடி ரூபாய்
(iv) தமிழ்நாட்டில் 26 மாவட்டங்களில் இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது
A.   அனைத்து கூற்றுகளும் சரி
B.   (i), (ii) மற்றும் (iii) சரியானவை
C.   (ii), (iii) மற்றும் (iv) சரியானவை
D.   (i), (ii) மற்றும் (iv) சரியானவை
Answer: A.  அனைத்து கூற்றுகளும் சரி
22.  மாநில சட்டமன்றத்தை கலைக்கும் அதிகாரம் மாநில ஆளுநருக்கு உள்ளதா?
A.   ஆம்
B.   இல்லை
C.   அவர் பரிந்துரை மட்டுமே செய்ய முடியும்
D.   குடியரசு தலைவர் மட்டுமே செய்ய முடியும்
Answer: A.  ஆம்
23.  நாடாளுமன்ற அவை விதிகளின் படி, சபாநாயகர் அனுமதித்தால், ஒரு தீர்மானத்திற்கான அறிக்கையை தேதி குறிப்பிடாமல் கொண்டு வரலாம் – அப்படி கொண்டு வரும் தீர்மானத்திற்கு என்ன பெயர்?
A.   கவன ஈர்ப்பு தீர்மானம்
B.   ஒத்திவைப்பு தீர்மானம்
C.   நம்பிக்கையில்லா தீர்மானம்
D.   தேதியில்லா, பெயர் சூட்டப்பட்ட தீர்மானம்
Answer: D.  தேதியில்லா, பெயர் சூட்டப்பட்ட தீர்மானம்
24.  பஞ்சாயத்து அமைப்புக்களுக்கு அரசியலமைப்பு அந்தஸ்து கொடுப்பதற்கு முன் முயற்சிகள் எடுக்கப்பட்டது எந்த குழுவின் பரிந்துரையின் பெயரில்?
A.   G.V.K. ராவ் குழு
B.   L.M. சிங்வி குழு
C.   அசோக் மேத்தா குழு
D.   பல்வந்த்ராய் மேத்தா குழு
Answer: B.  L.M. சிங்வி குழு
25.  பின்வரும் இந்திய அரசியலமைப்பின் எந்த விதி உச்சநீதி மன்றத்திற்கு சிறப்பு அனுமதி மனுவினை ஏற்கும் அதிகாரத்தை வழங்குகின்றது?
A.   விதி 136
B.   விதி 32
C.   விதி 139
D.   விதி 226
Answer: A.  விதி 136
;