GK Tamil
Home TNPSC Quiz History Geography Science Indian Polity Sports Contact

TNPSC Group 2 2017 Preliminary Examination

General Tamil Questions 51 to 75

1.  மதுரையில் உலகத் தமிழ் மாநாடு எந்த ஆண்டு நடைபெற்றது?
A.   1981
B.   1982
C.   1983
D.   1985
Answer: A.  1981
2.  நான் நிரந்தரமானவன் அழிவதில்லை
எந்த நிலையிலும் எனக்கு மரணமில்லை.
எனக் கவிதை பாடியவர்.
A.   சுரதா
B.   கண்ணதாசன்
C.   பாரதிதாசன்
D.   மு. மேத்தா
Answer: B.  கண்ணதாசன்
3.  எளிமையினால் ஒரு தமிழன் படிப்பில்லை யென்றால்
இங்குள்ள எல்லாரும் நாணிடவும் வேண்டும்.
எனப் பாடியவர்.
A.   பாரதிதாசன்
B.   பாரதியார்
C.   சுரதா
D.   கண்ணதாசன்
Answer: A.  பாரதிதாசன்
4.  மரக்கலத்தை குறிக்கும் நான்கு சொற்களை தேர்ந்தெடுக்க
A.   கலம், தோணி, புணரி, மிதவை
B.   கலம், பரிசில், ஓடம், பரவை
C.   கலம், வங்கம், புணை, அம்பி
D.   கலம், பரிசில், ஆழி, பஃறி
Answer: C.  கலம், வங்கம், புணை, அம்பி
5.  பிறமொழிச் சொற்களுக்கு ஏற்ற தமிழ்ச்சொற்களைப் பொருத்துக:
(a) மீனாட்சி 1. அங்கயற்கண்ணி
(b) மதுரவசனி 2. வாள்நெடுங்கண்ணி
(c) கட்கநேத்ரி 3. நீள்நெடுங்கண்ணி
(d) விசாலாட்சி 4. தேன்மொழிப்பாவை
A.   1 4 3 2
B.   1 4 2 3
C.   1 3 4 2
D.   1 2 4 3
Answer: B.  1 4 2 3
6.  பிழையற்றத் தொடரைத் தேர்வு செய்க.
A.   ஓர் மாவட்டத்தில் ஒரு அமைச்சர் அவருடை மகனோடு சுற்றுலா மேற்க்கொண்டார்
B.   ஒரு மாவட்டத்தில் ஓர் அமைச்சர் அவருடைய மகனோடு சுற்றுலா மேற்கொண்டார்
C.   ஒரு மாவட்டத்தில் ஒரு அமைச்சர் அவரது மகனோடு சுற்றுலா மேற்க்கொண்டார்
D.   ஒரு மாவட்டத்தில் ஒரு அமைச்சர் அவரது மகனோடு சுற்றுலா மேற்கொண்டார்
Answer: B.  ஒரு மாவட்டத்தில் ஓர் அமைச்சர் அவருடைய மகனோடு சுற்றுலா மேற்கொண்டார்
7.  “மாகதம்" எனப்படுவது
A.   மதுரகவி
B.   சித்திரகவி
C.   வித்தாரகவி
D.   ஆசுகவி
Answer: C.  வித்தாரகவி
8.  அகத்திணையின் வகைகள்
A.   ஐந்து
B.   ஆறு
C.   மூன்று
D.   ஏழு
Answer: D.  ஏழு
9.  கரணத்தேர் ________ எனப் பிரியும்.
A.   கரணம் + தேர்
B.   கரணத்து + ஏர்
C.   கரன் + அத்து + ஏர்
D.   காரணம் + தேர்
Answer: B.  கரணத்து + ஏர்
10.  மாறியுள்ள சீர்களை முறைப்படுத்தி எழுதுக
A.   இல்லாரை எள்ளுவர் செல்வரை எல்லாரும்
B.   இல்லாரை செல்வரை எல்லாரும் எள்ளுவர்
C.   இல்லாரை எல்லாரும் எள்ளுவர் செல்வரை
D.   செல்வரை எல்லாரும் எள்ளுவர் இல்லாரை
Answer: C.  இல்லாரை எல்லாரும் எள்ளுவர் செல்வரை
11.  மாறியுள்ள சீர்களை முறைப்படுத்தி எழுதுக
A.   குணநலம் நலனே சான்றோர் பிறநலம்
B.   சான்றோர் நலனே குணநலம் பிறநலம்
C.   குணநலம் சான்றோர் நலனே பிறநலம்
D.   சான்றோர் குணநலம் நலனே பிறநலம்
Answer: C.  குணநலம் சான்றோர் நலனே பிறநலம்
12.  பகுபதத்தில் குறைந்தளவு இருக்க வேண்டிய உறுப்புகள்
A.   பகுதி, சந்தி
B.   இடைநிலை, சாரியை
C.   பகுதி, விகுதி
D.   விகுதி, சாரியை
Answer: C.  பகுதி, விகுதி
13.  உறுவேனில் -இலக்கணக் குறிப்பு யாது?
A.   வினைத்தொகை
B.   உரிச்சொற்றொடர்
C.   பண்புத்தொகை
D.   வினையெச்சம்
Answer: B.  உரிச்சொற்றொடர்
14.  “இறை, செப்பு" என்பன கீழ்க்கண்ட எச்சொல்லுக்கு வழங்கும் வேறுபெயர்கள்
A.   வினா
B.   மொழி
C.   விடை
D.   இறைவன்
Answer: C.  விடை
15.  கீழ்க்காணும் தொடரில் சரியான விடையை தேர்வு செய்க.
A.   யானையின் கண் சிறியது
B.   யானையின் கண்கள் சிறியது
C.   யானையின் கண்கள் சிறியன
D.   யானையின் கண் சிறியன
Answer: C.  யானையின் கண்கள் சிறியன
16.  ஓடையில் யானையும் யானைக் ________ ம் நின்றன.
A.   யானைக் கன்று
B.   யானைக் குட்டி
C.   யானைக் குருளை
D.   யானைப் பிள்ளை
Answer: A.  யானைக் கன்று
17.  Refrigerator-என்ற ஆங்கிலச் சொல்லுக்கு நேரான தமிழ்ச்சொல்லைத் தேர்ந்தெடுக்க
A.   குளிர் பதனப் பெட்டி
B.   குளிரூட்டும் பெட்டி
C.   குளிர்சாதனப் பெட்டி
D.   குளிர் காக்கும் பெட்டி
Answer: A.  குளிர் பதனப் பெட்டி
18.  'கோ' -இச்சொல்லின் உரிய பொருளைக் கண்டறிக
A.   அரசன்
B.   அன்னம்
C.   ஆதவன்
D.   அன்பு
Answer: A.  அரசன்
19.  உவமை விளக்கும் பொருளை கண்டறிந்து பொருத்துக:
(a) அத்திப் பூத்தது போல 1. ஒற்றுமை
(b) உயிரும் உடம்பும் போல 2. பயனில்லை
(c) ஆற்றில் கரைத்த புளி 3. வேதனை
(d) இடிவிழுந்த மரம் போல 4. அரிய செயல்
A.   3 1 4 2
B.   2 3 4 1
C.   4 1 2 3
D.   4 2 1 3
Answer: C.  4 1 2 3
20.  "அண்டப் பகுதியின் உண்டைப் பிறக்கும்"
-இவ்வரிகள் இடம்பெற்ற நூலின் பெயர்.
A.   தேவாரம்
B.   திருவாசகம்
C.   ஏர் எழுபது
D.   திருக்கோவை
Answer: B.  திருவாசகம்
21.  "கேழல்” என்பதன் பொருளைத் தேர்ந்தெடுத்து எழுதுக
A.   எருமை
B.   புலி
C.   கரடி
D.   பன்றி
Answer: D.  பன்றி
22.  பட்டியல் I ஐ பட்டியல் II டன் பொருத்தி விடை எழுது.
பட்டியல் I பட்டியல் II
(a) திருஞானசம்பந்தர் 1. திருவாதவூர்
(b) திருநாவுக்கரசர் 2. திருவெண்ணெய் நல்லூர்
(c) சுந்தரர் 3. திருவாமூர்
(d) மாணிக்கவாசகர் 4. சீர்காழி
A.   4 3 2 1
B.   4 2 3 1
C.   2 4 1 3
D.   2 3 4 1
Answer: A.  4 3 2 1
23.  "கொங்குதேர் வாழ்க்கை அஞ்சறைத் தும்பி
காமம் செப்பாது கண்டது மொழிமோ"
-இவ்வரிகள் இடம்பெற்ற நூல் எது?
A.   நற்றிணை
B.   கலித்தொகை
C.   குறுந்தொகை
D.   புறனானூறு
Answer: C.  குறுந்தொகை
24.  “தேம்பாவணி” எத்தனை காண்டங்களை உடையது
A.   இரண்டு
B.   மூன்று
C.   நான்கு
D.   ஐந்து
Answer: B.  மூன்று
25.  பொருந்தாத இணையைக் கண்டறிக:
A.   மேதி - எருமை
B.   சந்தம் - அழகு
C.   கோதில் - பசு
D.   அங்கணர் - சிவன்
Answer: C.  கோதில் - பசு
;