TNPSC Group 2 2017 Preliminary Examination
General Studies Questions 26 to 50
1.
இந்தியாவில் நீதிப்புனராய்வு அதிகாரம் வரையறைக்குட்பட்டது, ஏனெனில்
A.
செயல்துறை உயர்வானது
B.
சட்டதுறை உயர்வானது
C.
அரசியலமைப்பு உயர்வானது
D.
நீதிபதிகள் இடமாறுதலுக்கு உட்பட்டவர்கள்
Answer:
C.
அரசியலமைப்பு உயர்வானது
2.
இந்திய அரசாங்கம் பாரத் ரத்னா மற்றும் பத்மஸ்ரீ விருதுகளை _______________ விதியின் கீழ் உருவாக்கியுள்ளது.
A.
இந்திய அரசியல் சட்ட விதி - 14
B.
இந்திய அரசியல் சட்ட விதி - 18
C.
இந்திய அரசியல் சட்ட விதி - 25
D.
இந்திய அரசியல் சட்ட விதி - 32
Answer:
B.
இந்திய அரசியல் சட்ட விதி - 18
3.
பெண்களின் பயிற்சி மற்றும் வேலைவாய்ப்பிற்கான ஆதரவு (STEP) என்ற திட்டம் அறிமுகப்படுத்தப்பட்ட ஆண்டு
A.
1986-87
B.
1990-91
C.
1995-96
D.
1996-97
Answer:
A.
1986-87
4.
இந்திய பிரதமரால், மே 26, 2017ம் நாள் இந்தியாவிலேயே மிகவும் நீளமான சாலைப் பாலம் திறந்து வைக்கப்பட்டது. அது எந்த இரு மாநிலங்களை இணைக்கின்றது?
A.
அஸ்ஸாம் மற்றும் அருணாசலப் பிரதேசம்
B.
அஸ்ஸாம் மற்றும் மணிப்பூர்
C.
அஸ்ஸாம் மற்றும் திரிபுரா
D.
மணிப்பூர் மற்றும் திரிபுரா
Answer:
A.
அஸ்ஸாம் மற்றும் அருணாசலப் பிரதேசம்
5.
இந்தியாவில் எந்த அமைப்பைச் சார்ந்த விஞ்ஞானிகள் தற்போது நீரிலிருந்து ஆற்றல் எதுவும் பயன்படுத்தாமல் மின்சாரம் உருவாக்க முடியும் என கண்டறிந்துள்ளார்கள்?
A.
NPL, புது டெல்லி
B.
IISC, பெங்களூரு
C.
IISER, கொல்கத்தா
D.
IIT, சென்னை
Answer:
A.
NPL, புது டெல்லி
6.
டிசம்பர் 20, 2016ல் பிரதம மந்திரி நாட்டின் முதன்முதலாக எந்த இடத்தில் இந்திய திறன் நிறுவனத்தை [IIS] துவக்கி வைத்தார்?
A.
அகமதாபாத்
B.
பெங்களூரு
C.
கான்பூர்
D.
வாரணாசி
Answer:
C.
கான்பூர்
7.
புது டில்லியில் 2017ம் ஆண்டு மார்ச் மாதத்தில் எந்த அமைப்பு க்யான் சங்கம் மாநாட்டினை [அறிவு உச்சி மாநாடு] நடத்தியது?
A.
பிரஜ்னா பார்வா
B.
கிருஷ்ணுவ கல்வி கழகம்
C.
இந்திய இஸ்லாமிய மாணவர்கள் இயக்கம்
D.
இந்திய ஜனநாயக வாலிபர் அமைப்பு
Answer:
A.
பிரஜ்னா பார்வா
8.
பிரதம மந்திரி கிரிஷன் சாய் யோஜனா திட்டத்தின் நோக்கம் என்ன?
A.
சுற்றுபுற சூழல்
B.
நிலத்தடி நீர் செறிவூட்டுதல்
C.
துணி உற்பத்தி
D.
இலவச உணவு
Answer:
B.
நிலத்தடி நீர் செறிவூட்டுதல்
9.
மணிப்பூரின் இரும்பு பெண்மணி இரோம் ஷர்மிளா, 2017 மணிப்பூர் மாநில சட்டமன்ற தேர்தலில் பெற்ற வாக்குகள் எத்தனை?
A.
10 வாக்குகள்
B.
30 வாக்குகள்
C.
60 வாக்குகள்
D.
90 வாக்குகள்
Answer:
D.
90 வாக்குகள்
10.
எந்த மாவட்டத்தில் புதிய பல் மருத்துவக் கல்லூரி 2017-ஆம் ஆண்டில் தொடங்கிட தமிழ்நாடு முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார்?
A.
சென்னை
B.
தருமபுரி
C.
விருதுநகர்
D.
புதுக்கோட்டை
Answer:
C.
விருதுநகர்
11.
எந்த ஒரு மாநில அரசு இந்த நிதி ஆண்டிலிருந்து [ஏப்ரல் 1 - மார்ச் 31] காலண்டர் ஆண்டிற்கு [ஜனவரி 1- டிசம்பர் 31]க்கு மாற்றியுள்ளது?
A.
கேரளா
B.
மத்திய பிரதேசம்
C.
பஞ்சாப்
D.
மேற்கு வங்கம்
Answer:
B.
மத்திய பிரதேசம்
12.
தமிழ்நாட்டில் எவ்வளவு சதவீதத்தில் மொத்த பயிர் சாகுபடிப் பரப்பில் மானாவாரிப் பகுதியில் பயிரிடப்படுகிறது?
A.
55%
B.
57%
C.
54%
D.
52%
Answer:
B.
57%
13.
இந்திய நியூட்ரினோ ஆய்வுக்கூடம் தமிழகத்தின் எந்த மாவட்டத்தில் உள்ளது?
A.
மதுரை
B.
தேனி
C.
கடலூர்
D.
சென்னை
Answer:
B.
தேனி
14.
சூப்பர் நோவா என்பது ஒரு வெடி விண்மீன். சாதாரண பார்வைக்கு புலப்பட்ட கடைசி இரண்டு சூப்பர் நோவா எந்த வருடங்களில் தெரிந்தது?
A.
1600, 1980
B.
1601, 1982
C.
1604, 1987
D.
1605, 1997
Answer:
C.
1604, 1987
15.
E = hγ என்ற சமன்பாட்டை பயன்படுத்தி, பிளாங்க் மாறிலி 'h'ன் பரிமாணத்தைக் கணக்கிடுக. இங்கு E → ஆற்றல், γ → அதிர்வெண்
A.
MLT⁻¹
B.
ML²T⁻¹
C.
ML⁻¹T⁻²
D.
ML⁻²T⁻¹
Answer:
B.
ML²T⁻¹
16.
கீழே உள்ளவைகளில் எது பாஸ்பரஸ் உள்ள பூச்சிக்கொல்லி?
A.
டி.டி.டி. (DDT)
B.
பி.எச்.சி. (BHC)
C.
2, 4-டி (2,4-D)
D.
பாராத்தியான்
Answer:
D.
பாராத்தியான்
17.
பொருத்துக:
| (a) கலப்பு உரங்கள் | 1. டி.எ.பி. |
| (b) சிக்கலான உரங்கள் | 2. என்.பி.கே. |
| (c) உயிர் உரங்கள் | 3. எண்ணெய் கேக் |
| (d) கரிம நைட்ரஜன் உரங்கள் | 4. பாசி |
A.
1 2 3 4
B.
2 1 4 3
C.
3 2 1 4
D.
4 3 2 1
Answer:
B.
2 1 4 3
18.
ஊடுருவல் மின்னணு நுண்ணோக்கியில் (TEMல்) பொருட்களை பெரிதுப்படுத்த பயன்படுகிறது.
A.
ஒளி
B.
ஆப்டிகல் லென்ஸ்கள்
C.
எலக்ட்ரான்கள் (மின்னணுக் கதிர்கள்)
D.
ஸ்கேனர்கள்
Answer:
C.
எலக்ட்ரான்கள் (மின்னணுக் கதிர்கள்)
19.
குளுக்கோசின் சுவாச ஈவு மதிப்பு
A.
0.5
B.
1.0
C.
1.5
D.
2.0
Answer:
B.
1.0
20.
கீழ்க்கண்ட பொருத்தங்களில் பண்புகளின் அடிப்படையில் எது தவறான பொருத்தமாகும்?
A.
கணையம் - குளுக்ககான்
B.
சிறுகுடல் - ஸ்டோமட்டேஸ்டேடின்
C.
விந்தகம் - ஈஸ்ட்ரோஜென்
D.
அட்ரீனல் சுரப்பி - குளுக்கோகார்டிகாய்ட்ஸ்
Answer:
C.
விந்தகம் - ஈஸ்ட்ரோஜென்
21.
கீழ்க்கண்டவற்றுள் எந்த ஹார்மோன் கருப்பையின் மெது தசைகளைச் சுருக்க உந்துகிறது?
A.
எபிநெப்ரின்
B.
இன்சுலின்
C.
ஆக்ஸிடோசின்
D.
குளுக்ககான்
Answer:
C.
ஆக்ஸிடோசின்
22.
இந்திய தேசிய காங்கிரஸின் முதல் கூட்டத் தொடரில் கலந்து கொண்ட பிரதிநிதிகளின் எண்ணிக்கை
A.
25
B.
100
C.
72
D.
2000
Answer:
C.
72
23.
புரட்சிகரமான தேசியவாதி நீலகண்ட பிரம்மச்சாரி பிறந்த இடம்
A.
திருநெல்வேலி
B.
மதுரை
C.
சீர்காழி
D.
சென்னை
Answer:
C.
சீர்காழி
24.
பின்வருவனவற்றை கால வரைமுறைபடுத்துக:
1. செங்குட்டுவன்
2. இமயவரம்பன்
3. கணைகால் இரும்போறை
4. குட்டுவன் சேரல்
1. செங்குட்டுவன்
2. இமயவரம்பன்
3. கணைகால் இரும்போறை
4. குட்டுவன் சேரல்
A.
2, 1, 4, 3
B.
4, 2, 3, 1
C.
2, 1, 3, 4
D.
3, 2, 4, 1
Answer:
A.
2, 1, 4, 3
25.
சோழ நாட்டில் வருவாய் துறை எவ்வாறு அழைக்கப்பட்டது?
A.
பெரும்தாரம்
B.
உடன் கூட்டம்
C.
புரவுவரி
D.
ஓலை நாயகம்
Answer:
C.
புரவுவரி