GK Tamil
Home TNPSC Quiz History Geography Science Indian Polity Sports Contact

TNPSC Group 2 2017 Preliminary Examination

General Tamil Questions 1 to 25

1.  கரிசலாங்கண்ணி என்னும் மூலிகையை குறிக்காத பெயர்
A.   கரி சாலை
B.   கையாந்தகரை
C.   சிங்கவல்லி
D.   தேகராசம்
Answer: C.  சிங்கவல்லி
2.  அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை
பண்பும் பயனும் அது.
-இக்குறளில் பயின்று வரும் பொருள்கோள் எது?
A.   நிரல்நிறைப் பொருள்கோள்
B.   ஆற்றுநீர் பொருள்கோள்
C.   மொழிமாற்றுப் பொருள்கோள்
D.   விற்பூட்டுப் பொருள்கோள்
Answer: A.  நிரல்நிறைப் பொருள்கோள்
3.  'கேண்மை' - இச்சொல்லின் எதிர்ச்சொல்.
A.   துன்பம்
B.   பகை
C.   நட்பு
D.   வலிமை
Answer: B.  பகை
4.  'பாலை நிலத்திற்குரிய பறவைகள்' எவை?
A.   கிளி, மயில்
B.   நாரை, அன்னம்
C.   புறா, பருந்து
D.   கடற்காகம்
Answer: C.  புறா, பருந்து
5.  துறந்தார் பெருமை துணைக்கூறின் வையத்
திறந்தாரை எண்ணிக்கொண் டற்று
- இதில் அமைந்து வரும் மோனை.
A.   இணை மோனை
B.   பொழிப்பு மோனை
C.   ஒரூஉ மோனை
D.   கூழை மோனை
Answer: B.  பொழிப்பு மோனை
6.  இன்பம் விழையான் இடும்பை இயல்பென்பான்
துன்பம் உறுதல் இலன்
- இதில் அமைந்து வரும் தொடைநயம்.
A.   அடி முரண் தொடை
B.   அடி மோனைத் தொடை
C.   அடி இயைபுத் தொடை
D.   எதுவுமில்லை
Answer: A.  அடி முரண் தொடை
7.  'அரியவற்றுள்' -இச்சொல்லை அசைபிரித்து சரியான விடையை எழுதுக.
A.   நிரை நேர் நேர்
B.   நிரை நிரை நேர்
C.   நிரை நேர் நிரை
D.   நேர் நேர் நிரை
Answer: B.  நிரை நிரை நேர்
8.  சொல்லுக்கு முதலில் மட்டுமே வரும் ஔகாரம், எத்தனை மாத்திரை அளவினதாய்க் குறைந்து ஒலிக்கும்
A.   ஒன்றே கால் மாத்திரை
B.   ஒன்றரை மாத்திரை
C.   ஒன்றே முக்கால் மாத்திரை
D.   ஒரு மாத்திரை
Answer: B.  ஒன்றரை மாத்திரை
9.  “இரட்டைக்கிளவி இரட்டிற் பிரிந்திசையா" எனக் குறிப்பிடும் நூல்
A.   தொல்காப்பியம்
B.   நன்னூல்
C.   அகப்பொருள்
D.   அகத்தியம் :
Answer: B.  நன்னூல்
10.  பொருந்தாததை எடுத்து எழுதுக.
A.   அரசன் வந்தது - திணை வழு
B.   கபிலன் பேசினாள் - பால் வழு
C.   குயில்கள் கூவியது - எண் வழு
D.   கமலா சிரித்தாய் - கால வழு
Answer: D.  கமலா சிரித்தாய் - கால வழு
11.  பொருந்தாததை கண்டறிந்து எழுதுக.
A.   ஐந்து கிலோ - எடுத்தல் அளவை ஆகுபெயர்
B.   நாலு லிட்டர் - முகத்தல் அளவை ஆகுபெயர்
C.   மூன்று மீட்டர் - நீட்டல் அளவை ஆகுபெயர்
D.   இந்தியா வென்றது - உவமையாகுபெயர்
Answer: D.  இந்தியா வென்றது - உவமையாகுபெயர்
12.  தொழிற் பெயரைக் கண்டறிக.
'வா' -
A.   வருதல்
B.   வந்து
C.   வந்தான்
D.   வந்த
Answer: A.  வருதல்
13.  அகர வரிசையில் அமைந்துள்ள சொற்களைக் கண்டறிக
A.   காசு, கூறை, கைப்பிடி, கிளி, கேணி
B.   காசு, கிளி, கூறை, கேணி, கைப்பிடி
C.   கிளி, கைப்பிடி, காசு, கூறை, கேணி
D.   கேணி, காசு, கிளி, கூறை, கைப்பிடி
Answer: B.  காசு, கிளி, கூறை, கேணி, கைப்பிடி
14.  'இனிய நண்ப' - இலக்கணக் குறிப்பு தருக
A.   குறிப்புப் பெயரெச்சம்
B.   தெரிநிலை பெயரெச்சம்
C.   எதிர்மறைப் பெயரெச்சம்
D.   குறிப்பு வினையெச்சம்
Answer: A.  குறிப்புப் பெயரெச்சம்
15.  “எதிரூன்றல் காஞ்சி, எயில் காத்தல் நொச்சி" - இதில் நொச்சி என்பது
A.   மதில் காத்தல்
B.   மதில் வளைத்தல்
C.   மதில் பூச்சூடல்
D.   மதில்வாகை சூடல்
Answer: A.  மதில் காத்தல்
16.  சொல்லை பொருளோடு பொருத்துக:
(a) வனப்பு 1. வலிமை
(b) அடவி 2. அழகு
(c) வீறு 3. இனிமை
(d) மதுரம் 4. காடு
A.   2 4 1 3
B.   2 3 1 4
C.   3 2 4 1
D.   1 3 2 4
Answer: A.  2 4 1 3
17.  பொருத்துக:
(a) திரிகடுகம் 1. பெருவாயின் முள்ளியார்
(b) ஆசாரக்கோவை 2. நல்லாதனார்
(c) பழமொழி நானூறு 3. காரியாசான்
(d) சிறுபஞ்சமூலம் 4. முன்றுறை அரையனார்
A.   2 1 4 3
B.   2 3 4 1
C.   3 2 1 4
D.   3 1 4 2
Answer: A.  2 1 4 3
18.  தமிழ்விடு தூதின் ஆசிரியர் யார்?
A.   கபிலர்
B.   நரிவெரூஉத் தலையார்
C.   அறியப்படவில்லை
D.   ஓதலாந்தையார்
Answer: C.  அறியப்படவில்லை
19.  ஐஞ்சிறு காப்பியங்கள் - என்னும் வகைப்பாட்டில் இல்லாத நூல் எது?
A.   நாக குமார காவியம்
B.   நீலகேசி
C.   குண்டலகேசி
D.   சூளாமணி
Answer: C.  குண்டலகேசி
20.  'இணையில்லை முப்பாலுக்கு இந்நிலத்தே' - எனப் பாடியவர்
A.   பாரதியார்
B.   பாரதிதாசன்
C.   சுரதா
D.   திருவள்ளுவர்
Answer: B.  பாரதிதாசன்
21.  கல்லை சேர்த்துக் கட்டிக் கடலில் எறிந்தபோது கல்லினை தெப்பமாகக் கொண்டு கரையேறியவர்
A.   பெரியாழ்வார்
B.   அப்பூதியடிகள்
C.   மாணிக்கவாசகர்
D.   அப்பர்
Answer: D.  அப்பர்
22.  “ரூபாயத்" என்பதன் பொருள்
A.   மூன்றடிச் செய்யுள்
B.   நான்கடிச் செய்யுள்
C.   இரண்டடிச் செய்யுள்
D.   ஐந்தடிச் செய்யுள்
Answer: B.  நான்கடிச் செய்யுள்
23.  அணு துளைக்காத கிரெம்ளின் மாளிகையில் வைத்து, திருக்குறளைப் பாதுகாக்கும் நாடு எது?
A.   இங்கிலாந்து
B.   சீனா
C.   உருசிய நாடு
D.   அமெரிக்கா
Answer: C.  உருசிய நாடு
24.  வைதோரைக் கூட வையாதே - இந்த
வையமுழுதும் பொய்த்தாலும் பொய்யாதே
-இவ்வரியை பாடியவர்
A.   குடும்பைச் சித்தர்
B.   கடுவெளிச்சித்தர்
C.   திருமூலர்
D.   கவிமணி
Answer: B.  கடுவெளிச்சித்தர்
25.  26 முதல் 32 வயது வரை உடைய பருவ மகளிர்
A.   மடந்தை
B.   அரிவை
C.   மங்கை
D.   தெரிவை
Answer: D.  தெரிவை
;