GK Tamil
Home TNPSC Thirukkural Quiz History Geography Science Indian Polity Sports Contact

General Tamil Questions 1 to 25

1.  கரிசலாங்கண்ணி என்னும் மூலிகையை குறிக்காத பெயர்
Answer: C.   சிங்கவல்லி
2.  அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை
பண்பும் பயனும் அது.
-இக்குறளில் பயின்று வரும் பொருள்கோள் எது?
Answer: A.   நிரல்நிறைப் பொருள்கோள்
3.  'கேண்மை' - இச்சொல்லின் எதிர்ச்சொல்.
Answer: B.   பகை
4.  'பாலை நிலத்திற்குரிய பறவைகள்' எவை?
Answer: C.   புறா, பருந்து
5.  துறந்தார் பெருமை துணைக்கூறின் வையத்
திறந்தாரை எண்ணிக்கொண் டற்று
- இதில் அமைந்து வரும் மோனை.
Answer: B.   பொழிப்பு மோனை
6.  இன்பம் விழையான் இடும்பை இயல்பென்பான்
துன்பம் உறுதல் இலன்
- இதில் அமைந்து வரும் தொடைநயம்.
Answer: A.   அடி முரண் தொடை
7.  'அரியவற்றுள்' -இச்சொல்லை அசைபிரித்து சரியான விடையை எழுதுக.
Answer: B.   நிரை நிரை நேர்
8.  சொல்லுக்கு முதலில் மட்டுமே வரும் ஔகாரம், எத்தனை மாத்திரை அளவினதாய்க் குறைந்து ஒலிக்கும்
Answer: B.   ஒன்றரை மாத்திரை
9.  “இரட்டைக்கிளவி இரட்டிற் பிரிந்திசையா" எனக் குறிப்பிடும் நூல்
Answer: B.   நன்னூல்
10.  பொருந்தாததை எடுத்து எழுதுக.
Answer: D.   கமலா சிரித்தாய் - கால வழு
11.  பொருந்தாததை கண்டறிந்து எழுதுக.
Answer: D.   இந்தியா வென்றது - உவமையாகுபெயர்
12.  தொழிற் பெயரைக் கண்டறிக.
'வா' -
Answer: A.   வருதல்
13.  அகர வரிசையில் அமைந்துள்ள சொற்களைக் கண்டறிக
Answer: B.   காசு, கிளி, கூறை, கேணி, கைப்பிடி
14.  'இனிய நண்ப' - இலக்கணக் குறிப்பு தருக
Answer: A.   குறிப்புப் பெயரெச்சம்
15.  “எதிரூன்றல் காஞ்சி, எயில் காத்தல் நொச்சி" - இதில் நொச்சி என்பது
Answer: A.   மதில் காத்தல்
16.  சொல்லை பொருளோடு பொருத்துக:
(a) வனப்பு 1. வலிமை
(b) அடவி 2. அழகு
(c) வீறு 3. இனிமை
(d) மதுரம் 4. காடு
Answer: A.   2 4 1 3
17.  பொருத்துக:
(a) திரிகடுகம் 1. பெருவாயின் முள்ளியார்
(b) ஆசாரக்கோவை 2. நல்லாதனார்
(c) பழமொழி நானூறு 3. காரியாசான்
(d) சிறுபஞ்சமூலம் 4. முன்றுறை அரையனார்
Answer: A.   2 1 4 3
18.  தமிழ்விடு தூதின் ஆசிரியர் யார்?
Answer: C.   அறியப்படவில்லை
19.  ஐஞ்சிறு காப்பியங்கள் - என்னும் வகைப்பாட்டில் இல்லாத நூல் எது?
Answer: C.   குண்டலகேசி
20.  'இணையில்லை முப்பாலுக்கு இந்நிலத்தே' - எனப் பாடியவர்
Answer: B.   பாரதிதாசன்
21.  கல்லை சேர்த்துக் கட்டிக் கடலில் எறிந்தபோது கல்லினை தெப்பமாகக் கொண்டு கரையேறியவர்
Answer: D.   அப்பர்
22.  “ரூபாயத்" என்பதன் பொருள்
Answer: B.   நான்கடிச் செய்யுள்
23.  அணு துளைக்காத கிரெம்ளின் மாளிகையில் வைத்து, திருக்குறளைப் பாதுகாக்கும் நாடு எது?
Answer: C.   உருசிய நாடு
24.  வைதோரைக் கூட வையாதே - இந்த
வையமுழுதும் பொய்த்தாலும் பொய்யாதே
-இவ்வரியை பாடியவர்
Answer: B.   கடுவெளிச்சித்தர்
25.  26 முதல் 32 வயது வரை உடைய பருவ மகளிர்
Answer: D.   தெரிவை
;