GK Tamil
Home TNPSC Thirukkural Quiz History Geography Science Indian Polity Sports Contact

General Tamil Questions 51 to 75

51.  மதுரையில் உலகத் தமிழ் மாநாடு எந்த ஆண்டு நடைபெற்றது?
Answer: A.   1981
52.  நான் நிரந்தரமானவன் அழிவதில்லை
எந்த நிலையிலும் எனக்கு மரணமில்லை.
எனக் கவிதை பாடியவர்.
Answer: B.   கண்ணதாசன்
53.  எளிமையினால் ஒரு தமிழன் படிப்பில்லை யென்றால்
இங்குள்ள எல்லாரும் நாணிடவும் வேண்டும்.
எனப் பாடியவர்.
Answer: A.   பாரதிதாசன்
54.  மரக்கலத்தை குறிக்கும் நான்கு சொற்களை தேர்ந்தெடுக்க
Answer: C.   கலம், வங்கம், புணை, அம்பி
55.  பிறமொழிச் சொற்களுக்கு ஏற்ற தமிழ்ச்சொற்களைப் பொருத்துக:
(a) மீனாட்சி 1. அங்கயற்கண்ணி
(b) மதுரவசனி 2. வாள்நெடுங்கண்ணி
(c) கட்கநேத்ரி 3. நீள்நெடுங்கண்ணி
(d) விசாலாட்சி 4. தேன்மொழிப்பாவை
Answer: B.   1 4 2 3
56.  பிழையற்றத் தொடரைத் தேர்வு செய்க.
Answer: B.   ஒரு மாவட்டத்தில் ஓர் அமைச்சர் அவருடைய மகனோடு சுற்றுலா மேற்கொண்டார்
57.  “மாகதம்" எனப்படுவது
Answer: C.   வித்தாரகவி
58.  அகத்திணையின் வகைகள்
Answer: D.   ஏழு
59.  கரணத்தேர் ________ எனப் பிரியும்.
Answer: B.   கரணத்து + ஏர்
60.  மாறியுள்ள சீர்களை முறைப்படுத்தி எழுதுக
Answer: C.   இல்லாரை எல்லாரும் எள்ளுவர் செல்வரை
61.  மாறியுள்ள சீர்களை முறைப்படுத்தி எழுதுக
Answer: C.   குணநலம் சான்றோர் நலனே பிறநலம்
62.  பகுபதத்தில் குறைந்தளவு இருக்க வேண்டிய உறுப்புகள்
Answer: C.   பகுதி, விகுதி
63.  உறுவேனில் -இலக்கணக் குறிப்பு யாது?
Answer: B.   உரிச்சொற்றொடர்
64.  “இறை, செப்பு" என்பன கீழ்க்கண்ட எச்சொல்லுக்கு வழங்கும் வேறுபெயர்கள்
Answer: C.   விடை
65.  கீழ்க்காணும் தொடரில் சரியான விடையை தேர்வு செய்க.
Answer: C.   யானையின் கண்கள் சிறியன
66.  ஓடையில் யானையும் யானைக் ________ ம் நின்றன.
Answer: A.   யானைக் கன்று
67.  Refrigerator-என்ற ஆங்கிலச் சொல்லுக்கு நேரான தமிழ்ச்சொல்லைத் தேர்ந்தெடுக்க
Answer: A.   குளிர் பதனப் பெட்டி
68.  'கோ' -இச்சொல்லின் உரிய பொருளைக் கண்டறிக
Answer: A.   அரசன்
69.  உவமை விளக்கும் பொருளை கண்டறிந்து பொருத்துக:
(a) அத்திப் பூத்தது போல 1. ஒற்றுமை
(b) உயிரும் உடம்பும் போல 2. பயனில்லை
(c) ஆற்றில் கரைத்த புளி 3. வேதனை
(d) இடிவிழுந்த மரம் போல 4. அரிய செயல்
Answer: C.   4 1 2 3
70.  "அண்டப் பகுதியின் உண்டைப் பிறக்கும்"
-இவ்வரிகள் இடம்பெற்ற நூலின் பெயர்.
Answer: B.   திருவாசகம்
71.  "கேழல்” என்பதன் பொருளைத் தேர்ந்தெடுத்து எழுதுக
Answer: D.   பன்றி
72.  பட்டியல் I ஐ பட்டியல் II டன் பொருத்தி விடை எழுது.
பட்டியல் I பட்டியல் II
(a) திருஞானசம்பந்தர் 1. திருவாதவூர்
(b) திருநாவுக்கரசர் 2. திருவெண்ணெய் நல்லூர்
(c) சுந்தரர் 3. திருவாமூர்
(d) மாணிக்கவாசகர் 4. சீர்காழி
Answer: A.   4 3 2 1
73.  "கொங்குதேர் வாழ்க்கை அஞ்சறைத் தும்பி
காமம் செப்பாது கண்டது மொழிமோ"
-இவ்வரிகள் இடம்பெற்ற நூல் எது?
Answer: C.   குறுந்தொகை
74.  “தேம்பாவணி” எத்தனை காண்டங்களை உடையது
Answer: B.   மூன்று
75.  பொருந்தாத இணையைக் கண்டறிக:
Answer: C.   கோதில் - பசு
;