GK Tamil
Home TNPSC Thirukkural Quiz History Geography Science Indian Polity Sports Contact

General Tamil Questions 76 to 100

76.  'உறுபடை' - என்பதன் இலக்கணக் குறிப்பு தேர்க.
Answer: D.   உரிச்சொற்றொடர்
77.  விடைக்கேற்ற வினாவைத் தேர்ந்தெடு:
"அழகன் குழல் ஊதினான்"
Answer: A.   அழகன் எதை ஊதினான்?
78.  விடைக்கேற்ற வினாவைத் தேர்ந்தெடு:
"சேரமான் இரும்பொறையின் அவைப்புலவர் பொய்கையார்"
Answer: B.   சேரமான் இரும்பொறையின் அவைப்புலவர் யார்?
79.  விடைக்கேற்ற வினாவைத் தேர்ந்தெடு:
“உள்ளம் என்பது மனம்"
Answer: A.   உள்ளம் என்பது எது?
80.  விடைக்கேற்ற வினாவைத் தேர்ந்தெடு:
"ஐம்பெருங்காப்பியங்களுள் ஒன்று குண்டலகேசி"
Answer: C.   ஐம்பெருங்காப்பியங்களுள் ஒன்று எது?
81.  விடைக்கேற்ற வினாவைத் தேர்ந்தெடு:
"நந்திக் கலம்பகத்தின் பாட்டுடைத் தலைவன் பல்லவ மன்னன் மூன்றாம் நந்திவர்மன்"
Answer: D.   நந்திக் கலம்பகத்தின் பாட்டுடைத் தலைவன் யார்?
82.  "புலவரே, பரிசைப் பெற்றுக் கொள்ளுங்கள் என்று அரசன் கூறினான்" - எவ்வகை வாக்கியம் எனச் சுட்டுக.
Answer: C.   நேர்க்கூற்று வாக்கியம்
83.  "மாதவி தோழியிடம் தான் புத்தகம் கொண்டு வருவதாகக் கூறினாள்" - எவ்வகை வாக்கியம் எனச் சுட்டுக.
Answer: D.   அயற்கூற்று வாக்கியம்
84.  "செயற்கைக்கோள் அறிவியல் அறிஞர்களால் விண்ணில் ஏவப்பட்டது" - எவ்வகை வாக்கியம் எனச் சுட்டுக.
Answer: D.   செயப்பாட்டு வினை வாக்கியம்
85.  "தூய்மையுடன் இரு, தன்னலமற்று இரு" - எவ்வகை வாக்கியம் எனச் சுட்டுக.
Answer: D.   விழைவு வாக்கியம்
86.  "ஆசிரியர் இலக்கணம் கற்பித்தார்" - எவ்வகை வாக்கியம் எனச் சுட்டுக.
Answer: D.   செய்வினை வாக்கியம்
87.  தன்வினைச் சொற்றொடரைக் கண்டறிக.
Answer: A.   கம்பர் இராமாயணத்தை இயற்றினார்
88.  பிறவினைச் சொற்றொடரைக் கண்டறிக.
Answer: A.   மாதவி நடனம் கற்பித்தாள்
89.  செய்வினை வாக்கியத்தைக் கண்டறிக:
Answer: B.   மக்கள் நாடகம் பார்த்தனர்
90.  செயப்பாட்டு வினை வாக்கியம் கண்டறிக:
Answer: B.   நான் ஆசிரியரால் பாரட்டப்பட்டேன்
91.  தன்வினைச் சொற்றொடரைக் கண்டறிக.
Answer: C.   உமறுப்புலவர் சீறாப்புராணத்தை இயற்றினார்
92.  “பசுத்தோல் போர்த்திய புலி போல" - இவ்வுவமையால் விளக்கப்பெறும் பொருத்தமான பொருளைத் தேர்ந்தெடுக்க:
Answer: B.   ஏமாற்றுதல்
93.  "பாம்புக்கு பால் ஊட்டி வளர்த்தால் போல" - இவ்வுவமையால் விளக்கப்பெறும் பொருத்தமான பொருளைத் தேர்ந்தெடுக்க:
Answer: C.   கொடூரத்தன்மை
94.  "வெந்தபுண்ணில் வேல் பாய்ந்தது போல" - இவ்வுவமையால் விளக்கப்பெறும் பொருத்தமான பொருளைத் தேர்ந்தெடுக்க:
Answer: B.   மேலும் மேலும் துன்பம்
95.  “இருதலைக் கொள்ளி எறும்பைப் போல" - இவ்வுவமையால் விளக்கப்பெறும் பொருத்தமான பொருளைத் தேர்ந்தெடுக்க:
Answer: B.   தவிப்பு
96.  “அரசனை நம்பி புருசனை கைவிட்டது போல" - இவ்வுவமையால் விளக்கப்பெறும் பொருத்தமான பொருளைத் தேர்ந்தெடுக்க:
Answer: B.   ஏமாற்றம்
97.  தேவரும் பிழைத்திலர் தெய்வ வேதியர்
ஏவரும் பிழைத்திலர் அறமும் ஈறின்றால் - அடி எதுகையைக் கண்டறிக.
Answer: D.   தேவரும் - ஏவரும்
98.  கள்ளாமை வேண்டும் கடிய வருதலால் - சீர்மோனையை எடுத்தெழுதுக.
Answer: A.   கள்ளாமை - கடிய
99.  ஆதிரை நல்லாள் ஆங்கது தான் கேட்(டு) - சீர்மோனையை எடுத்தெழுதுக.
Answer: A.   ஆதிரை - ஆங்கது
100.  சினமென்னும் சேர்ந்தாரைக் கொல்லி இனமென்னும் - இயைபுத் தொடையினைச் சுட்டுக.
Answer: C.   சினமென்னும் - இனமென்னும்
;