GK Tamil
Home TNPSC Quiz History Geography Science Indian Polity Sports Contact

TNPSC Group 4 2011

General Tamil Questions 26 to 50

1.  ஒருமை பன்மை பிழைகளை நீக்குக :
A.   காவல்துறை அதிகாரி திருடனைப் பிடித்தார்
B.   காவல்துறை அதிகாரிகள் திருடனைப் பிடித்தான்
C.   காவல்துறை அதிகாரி திருடனைப் பிடித்தார்கள்
D.   காவல்துறை அதிகாரிகள் திருடனைப் பிடித்தது.
Answer: A.  காவல்துறை அதிகாரி திருடனைப் பிடித்தார்
2.  ஒருமை பன்மை பிழைகளை நீக்குக :
A.   ஆதவன் பசி போக்க உணவு வேண்டினார்கள்
B.   ஆதவனும் வேலவனும் பசி போக்க உணவு வேண்டினான்
C.   ஆதவனும் வேலவனும் பசி போக்க உணவு வேண்டியது
D.   ஆதவன் பசி போக்க உணவு வேண்டினான்.
Answer: D.  ஆதவன் பசி போக்க உணவு வேண்டினான்.
3.  பிறமொழிச் சொற்களை நீக்கிய வாக்கியத்தை தேர்வு செய்க :
A.   காலேஜில் அட்மிஷன் முடிந்தது
B.   கல்லூரியில் அட்மிஷன் முடிந்தது
C.   கல்லூரியில் சேர்க்கை முடிந்தது
D.   காலேஜில் சேர்க்கை முடிந்தது.
Answer: C.  கல்லூரியில் சேர்க்கை முடிந்தது
4.  சந்திப்பிழையற்ற தொடரைத் தேர்க :
A.   தண்ணீர் பற்றாக்குறை நீங்கத் தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்த வேண்டும்
B.   தண்ணீர்ப் பற்றாக்குறை நீங்க தண்ணீரைச் சிக்கனமாகப் பயன்படுத்த வேண்டும்
C.   தண்ணீர் பற்றாக்குறை நீங்க தண்ணீரைச் சிக்கனமாக பயன்படுத்த வேண்டும்
D.   தண்ணீர்ப் பற்றாக்குறை நீங்கத் தண்ணீரைச் சிக்கனமாகப் பயன்படுத்த வேண்டும்.
Answer: D.  தண்ணீர்ப் பற்றாக்குறை நீங்கத் தண்ணீரைச் சிக்கனமாகப் பயன்படுத்த வேண்டும்.
5.  வழூஉச் சொற்கள் நீக்கிய வாக்கியத்தை தேர்வு செய்க :
A.   அகல் விளக்கில் என்னை ஊற்றுக
B.   அகல் விளக்கில் எண்ணை ஊற்றுக
C.   அகல் விளக்கில் எண்ணெய் ஊற்றுக
D.   அகல் விளக்கில் எண்ண ஊற்றுக.
Answer: C.  அகல் விளக்கில் எண்ணெய் ஊற்றுக
6.  Wrong : என்ற ஆங்கிலச் சொல்லுக்கு நேரான தமிழ்ச் சொல்லைத் தேர்ந்தெடுக்க.
A.   தவறு
B.   சரி
C.   பன்மை
D.   ஒருமை.
Answer: A.  தவறு
7.  Favourite : என்ற ஆங்கிலச் சொல்லுக்கு நேரான தமிழ்ச் சொல்லைத் தேர்ந்தெடுக்க.
A.   சிறப்பற்ற
B.   விருப்பத்திற்குரிய
C.   தகுதியான
D.   நேர்மையான.
Answer: B.  விருப்பத்திற்குரிய
8.  Character என்ற ஆங்கிலச் சொல்லுக்கு நேரான தமிழ்ச் சொல்லைத் தேர்ந்தெடுக்க.
A.   நடத்தை
B.   சிரத்தை
C.   பரத்தை
D.   மறத்தை.
Answer: A.  நடத்தை
9.  Planets: என்ற ஆங்கிலச் சொல்லுக்கு நேரான தமிழ்ச் சொல்லைத் தேர்ந்தெடுக்க.
A.   விண்மீன்கள்
B.   கதிரவன்
C.   கோள்கள்
D.   வெள்ளி.
Answer: C.  கோள்கள்
10.  Travel : என்ற ஆங்கிலச் சொல்லுக்கு நேரான தமிழ்ச் சொல்லைத் தேர்ந்தெடுக்க.
A.   ஊர்தி
B.   பேருந்து
C.   பயணம்
D.   சுற்றுலா.
Answer: C.  பயணம்
11.  ஒலி வேறுபாடறிந்து சரியான பொருளைத் தேர்க.
கல்
கள்
A.   செங்கல்
மது
B.   படி
கல்வி
C.   வாது
கருங்கல்
D.   சூது
மாது
Answer: A.  செங்கல்
மது
12.  ஒலி வேறுபாடறிந்து சரியான பொருளைத் தேர்க.
குளி
குழி
A.   பாரோடு
உள்ளம்
B.   வேரோடு
வெள்ளம்
C.   நீராடு
பள்ளம்
D.   பாராட்டு
கள்ளம்.
Answer: C.  நீராடு
பள்ளம்
13.  ஒலி வேறுபாடறிந்து சரியான பொருளைத் தேர்க.
அரி
அறி
A.   அடி
திருமால்
B.   கடல்
விலங்கு
C.   வெட்டு
தெரிந்துகொள்
D.   தாமரை
பூ.
Answer: C.  வெட்டு
தெரிந்துகொள்
14.  ஒலி வேறுபாடறிந்து சரியான பொருளைத் தேர்க.
அன்னம்
அண்ணம்
A.   சோறு
பல்
B.   உணவு
உதடு
C.   பறவை
மேல்வாய்
D.   காகம்
கீழ்வாய்.
Answer: C.  பறவை
மேல்வாய்
15.  ஒலி வேறுபாடறிந்து சரியான பொருளைத் தேர்க.
வலி
வளி
A.   வலித்தல்
தேவலோகம்
B.   ஒழிதல்
கடல்
C.   வழி
ஆகாயம்
D.   வலிமை
காற்று.
Answer: D.  வலிமை
காற்று.
16.  'உ' என்னும் ஒரெழுத்து ஒரு மொழிக்குரிய பொருள் யாது ?
A.   மகிழ்ச்சி
B.   கோபம்
C.   துன்பம்
D.   சிரிப்பு.
Answer: A.  மகிழ்ச்சி
17.  'கா' என்னும் ஒரெழுத்து ஒரு மொழிக்குரிய பொருள் யாது ?
A.   சோலை
B.   மாலை
C.   ஓலை
D.   வேலை..
Answer: A.  சோலை
18.  'ஈ' என்னும் ஒரெழுத்து ஒரு மொழிக்குரிய பொருள் யாது ?
A.   எடுத்தல்
B.   கொடுத்தல்
C.   பார்த்தல்
D.   செய்தல்.
Answer: B.  கொடுத்தல்
19.  'ஔ' என்னும் ஒரெழுத்து ஒரு மொழிக்குரிய பொருள் யாது ?
A.   விண்
B.   பாதாளம்
C.   சுவர்க்கம்
D.   பூமி.
Answer: D.  பூமி.
20.  திங்கள்முடி சூடுமலை தென்றல்விளை யாடுமலை -சீர் இயைபினைக் கண்டறிக.
A.   திங்கள்முடி, சூடுமலை
B.   சூடுமலை, யாடுமலை
C.   திங்கள்முடி, தென்றல்விளை
D.   சூடுமலை, தென்றல்விளை.
Answer: B.  சூடுமலை, யாடுமலை
21.  'கீ' என்னும் ஒரெழுத்து ஒரு மொழிக்குரிய பொருள் யாது ?
A.   சேவல் கூவுதல்
B.   குயில் கூவுதல்
C.   கிளிக்குரல்
D.   மயில் அகவுதல்.
Answer: C.  கிளிக்குரல்
22.  'வந்த' - இச்சொல்லின் வேர்ச்சொல்லை காண்க.
A.   வரு
B.   வருக
C.   வந்து
D.   வா.
Answer: D.  வா.
23.  'ஒளிர்வான்' - இச்சொல்லின் வேர்ச்சொல்லை காண்க.
A.   ஒளிர
B.   ஒளிர்
C.   ஒளிரா
D.   ஒளிரும்.
Answer: B.  ஒளிர்
24.  'புக்கான்' இச்சொல்லின் வேர்ச்சொல்லை காண்க.
A.   புகு
B.   புக்கு
C.   புகுந்து
D.   புகுத்து.
Answer: A.  புகு
25.  'மருண்டு' இச்சொல்லின் வேர்ச்சொல்லை காண்க.
A.   மருண்
B.   மருட்டு
C.   மருல்
D.   மருள்.
Answer: D.  மருள்.
;