GK Tamil
Home TNPSC Quiz History Geography Science Indian Polity Sports Contact

TNPSC Group 4 2011

General Tamil Questions 51 to 75

1.  'அழைப்பு' இச்சொல்லின் வேர்ச்சொல்லை காண்க.
A.   அழைத்தல்
B.   அளை
C.   அழை
D.   அழையா.
Answer: C.  அழை
2.  'பொறு' - என்னும் வேர்ச்சொல்லின் வினையாலணையும் பெயரைத் தேர்ந்தெடுக்க.
A.   பொறுத்தார்
B.   பொறுத்து
C.   பொறுமை
D.   பொறுத்த.
Answer: A.  பொறுத்தார்
3.  'நில்' என்னும் வேர்ச்சொல்லின் வினையெச்சத்தை தேர்ந்தெடுக்க.
A.   நின்ற
B.   நின்று
C.   நிற்கின்ற
D.   நின்றான்.
Answer: B.  நின்று
4.  'நடு' - என்னும் வேர்ச்சொல்லின் தொழிற்பெயரை தேர்ந்தெடுக்க.
A.   நட்டல்
B.   நடும்
C.   நடா
D.   நடுவு.
Answer: A.  நட்டல்
5.  'ஒழி' - என்னும் வேர்ச்சொல்லின் வினையெச்சத்தை தேர்ந்தெடுக்க.
A.   ஒழித்த
B.   ஒழிதல்
C.   ஒழித்தவன்
D.   ஒழித்து.
Answer: D.  ஒழித்து.
6.  'அழு' - என்னும் வேர்ச்சொல்லின் வினையாலணையும் பெயரைத் தேர்ந்தெடுக்க.
A.   அழுத
B.   அழுது
C.   அழுதல்
D.   அழுவாளை.
Answer: D.  அழுவாளை.
7.  அகர வரிசைப்படி சொற்களை சீர் செய்க :
A.   கவ்வு, கள், கல், கர்வம்
B.   கர்வம், கவ்வு, கல், கள்
C.   கள், கர்வம், கவ்வு, கல்
D.   கர்வம், கல், கவ்வு, கள்.
Answer: D.  கர்வம், கல், கவ்வு, கள்.
8.  அகர வரிசைப்படி சொற்களை சீர் செய்க :
A.   குழந்தை, கூர்வேல், கேள்வி, கோதை
B.   கோதை, கேள்வி, கூர்வேல் குழந்தை
C.   கேள்வி, கூர்வேல், குழந்தை, கோதை
D.   கூர்வேல், குழந்தை, கோதை, கேள்வி.
Answer: A.  குழந்தை, கூர்வேல், கேள்வி, கோதை
9.  அகர வரிசைப்படி சொற்களை சீர் செய்க :
A.   அந்தணர், ஆண்மை, ஆற்றல், ஏக்கம்
B.   ஆண்மை, ஏக்கம், அந்தணர், ஆற்றல்
C.   ஆற்றல், அந்தணர், ஆண்மை, ஏக்கம்
D.   ஏக்கம், அந்தணர், ஆற்றல், ஆண்மை.
Answer: A.  அந்தணர், ஆண்மை, ஆற்றல், ஏக்கம்
10.  அகர வரிசைப்படி சொற்களை சீர் செய்க:
A.   சென்று, சார்பு, சால்பு, மூழ்கு
B.   சார்பு, சால்பு, மூழ்கு, சென்று
C.   சார்பு, சால்பு, சென்று, மூழ்கு
D.   மூழ்கு, சென்று, சால்பு, சார்பு.
Answer: C.  சார்பு, சால்பு, சென்று, மூழ்கு
11.  அகர வரிசைப்படி சொற்களை சீர் செய்க :
A.   படம், பட்டு, படி, படாடோபம்
B.   பட்டு, படம், படாடோபம், படி
C.   படாடோபம், படி, படம், பட்டு
D.   படி, படாடோபம், படம், பட்டு.
Answer: A.  படம், பட்டு, படி, படாடோபம்
12.  சொற்களை ஒழுங்குபடுத்தி சொற்றொடராக்குக.
A.   காவியத்தைப்படி இளங்கோ எழுதிய கண்ணகியின்
B.   இளங்கோ எழுதிய கண்ணகியின் காவியத்தைப்படி
C.   காவியத்தைப்படி கண்ணகியின் எழுதிய இளங்கோ
D.   கண்ணகி இளங்கோ எழுதிய காவியத்தைப்படி.
Answer: B.  இளங்கோ எழுதிய கண்ணகியின் காவியத்தைப்படி
13.  சொற்களை ஒழுங்குபடுத்தி சொற்றொடராக்குக.
A.   பாரம்பரியம் நீண்ட ஆயுர்வேதம் உடையது
B.   உடையது ஆயுர்வேதம் நீண்ட பாரம்பரியம்
C.   ஆயுர்வேதம் உடையது பாரம்பரியம் நீண்ட
D.   ஆயுர்வேதம் நீண்ட பாரம்பரியம் உடையது.
Answer: D.  ஆயுர்வேதம் நீண்ட பாரம்பரியம் உடையது.
14.  சொற்களை ஒழுங்குபடுத்தி சொற்றொடராக்குக.
A.   இரண்டு திருக்குறளில் அதிகாரங்களில் சிதம்பரனாருக்கு எல்லையற்ற ஆர்வம்
B.   இரண்டு எல்லையற்ற ஆர்வம் திருக்குறளில் அதிகாரங்களில் சிதரம்பரனாருக்கு
C.   சிதம்பரனாருக்குத் திருக்குறளில் இரண்டு அதிகாரங்களில் எல்லையற்ற ஆர்வம்
D.   இரண்டு சிதம்பரனாருக்குத் திருக்குறளில் அதிகாரங்களில் எல்லையற்ற ஆர்வம்.
Answer: C.  சிதம்பரனாருக்குத் திருக்குறளில் இரண்டு அதிகாரங்களில் எல்லையற்ற ஆர்வம்
15.  சொற்களை ஒழுங்குபடுத்தி சொற்றொடராக்குக.
A.   நெருப்பு-மனித குலம் கண்ட முதல் அறிவியல் கண்டுபிடிப்பு
B.   மனிதகுலம் கண்ட முதல் அறிவியல் கண்டுபிடிப்பு நெருப்பு
C.   அறிவியல் கண்டுபிடிப்பு மனிதகுலம் கண்ட முதல் நெருப்பு
D.   முதல் நெருப்பு மனிதகுலம் கண்ட அறிவியல் கண்டுபிடிப்பு.
Answer: B.  மனிதகுலம் கண்ட முதல் அறிவியல் கண்டுபிடிப்பு நெருப்பு
16.  சொற்களை ஒழுங்குபடுத்தி சொற்றொடராக்குக.
A.   சடையும் பனித்த பவளம் போல் உதடும்
B.   பவளம் போல பனித்த சடையும் உதடும்
C.   பனித்த சடையும் பவளம் போல் உதடும்
D.   பனித்த போல் சடையும் பவளம் உதடும்.
Answer: C.  பனித்த சடையும் பவளம் போல் உதடும்
17.  'திண்டிவனம்' பெயர்ச் சொல்லின் வகை அறிக.
A.   பொருட்பெயர்
B.   சினைப்பெயர்
C.   இடப்பெயர்
D.   காலப்பெயர்.
Answer: C.  இடப்பெயர்
18.  'நாழிகை' பெயர்ச் சொல்லின் வகை அறிக.
A.   இடப்பெயர்
B.   தொழிற்பெயர்
C.   பண்புப்பெயர்
D.   காலப்பெயர்.
Answer: D.  காலப்பெயர்.
19.  'வாய்' பெயர்ச் சொல்லின் வகை அறிக.
A.   பொருட்பெயர்
B.   சினைப்பெயர்
C.   தொழிற்பெயர்
D.   காலப்பெயர்.
Answer: B.  சினைப்பெயர்
20.  'பூங்கா' பெயர்ச் சொல்லின் வகை அறிக.
A.   தொழிற்பெயர்
B.   பொருட்பெயர்
C.   காலப்பெயர்
D.   இடப்பெயர்.
Answer: D.  இடப்பெயர்.
21.  'நீளம்' பெயர்ச் சொல்லின் வகை அறிக.
A.   தொழிற்பெயர்.
B.   காலப்பெயர்
C.   பொருட்பெயர்
D.   பண்புப்பெயர்.
Answer: D.  பண்புப்பெயர்.
22.  'கெடுப்பதூஉம்' - என்பதன் இலக்கணக் குறிப்பு தேர்க.
A.   சொல்லிசையளபெடை
B.   இன்னிசையளபெடை
C.   இசைநிறையளபெடை
D.   செய்யுளிசையளபெடை.
Answer: B.  இன்னிசையளபெடை
23.  'சொலல்' என்பதன் இலக்கணக் குறிப்பு தேர்க.
A.   பண்புப்பெயர்
B.   இடப்பெயர்
C.   தொழில்பெயர்
D.   காலப்பெயர்.
Answer: C.  தொழில்பெயர்
24.  'நகையும் உவகையும்' என்பதன் இலக்கணக் குறிப்பு தேர்க.
A.   வினைமுற்று
B.   எண்ணுமை
C.   முதற்போலி
D.   பண்புப்பெயர்.
Answer: B.  எண்ணுமை
25.  'இரீஇ' என்பதன் இலக்கணக் குறிப்பு தேர்க.
A.   இன்னிசை அளபெடை
B.   சொல்லிசை அளபெடை
C.   வினைச்சொல்
D.   வினைமுற்று.
Answer: B.  சொல்லிசை அளபெடை
;