GK Tamil
Home TNPSC Quiz History Geography Science Indian Polity Sports Contact

TNPSC Group 4 2011

General Tamil Questions 76 to 100

1.  'உறுபடை' என்பதன் இலக்கணக் குறிப்பு தேர்க.
A.   வேற்றுமைத்தொடர்
B.   பெயரெச்சத் தொடர்
C.   வினையெச்சத் தொடர்
D.   உரிச்சொற்றொடர்.
Answer: D.  உரிச்சொற்றொடர்.
2.  விடைக்கேற்ற வினாவைத் தேர்ந்தெடு :
"அழகன் குழல் ஊதினான்"
A.   அழகன் எதை ஊதினான் ?
B.   அழகன் ஊதிய பொருள் எது ?
C.   குழலின் பயன்பாடு யாது ?
D.   அழகன் இசைத்தது எது ?
Answer: A.  அழகன் எதை ஊதினான் ?
3.  விடைக்கேற்ற வினாவைத் தேர்ந்தெடு :
"சேரமான் இரும்பொறையின் அவைப்புலவர் பொய்கையார்"
A.   சேரமான் இரும்பொறையின் நண்பர் யார் ?
B.   சேரமான் இரும்பொறையின் அவைப்புலவர் யார் ?
C.   இரும்பொறை எந்த நாட்டை ஆண்ட மன்னன் ?
D.   பொய்கையார் யார் ?
Answer: B.  சேரமான் இரும்பொறையின் அவைப்புலவர் யார் ?
4.  விடைக்கேற்ற வினாவைத் தேர்ந்தெடு :
“உள்ளம் என்பது மனம்"
A.   உள்ளம் என்பது எது ?
B.   மனமே உள்ளம் என்பது சரியா ?
C.   உள்ளத்தின் சிறப்பு யாது ?
D.   உள்ளம் மனம் இரண்டும் ஒன்றா ?
Answer: A.  உள்ளம் என்பது எது ?
5.  விடைக்கேற்ற வினாவைத் தேர்ந்தெடு :
"ஐம்பெருங்காப்பியங்களுள் ஒன்று குண்டலகேசி"
A.   ஐம்பெருங்காப்பியங்கள் யாவை ?
B.   குண்டலகேசி ஐம்பெருங்காப்பியங்களுள் ஒன்றா ?
C.   ஐம்பெருங்காப்பியங்களுள் ஒன்று எது ?
D.   குண்டலகேசி பெருங்காப்பியமா ?
Answer: C.  ஐம்பெருங்காப்பியங்களுள் ஒன்று எது ?
6.  விடைக்கேற்ற வினாவைத் தேர்ந்தெடு :
"நந்திக் கலம்பகத்தின் பாட்டுடைத் தலைவன் பல்லவ மன்னன் மூன்றாம் நந்திவர்மன்"
A.   கலம்பகம் சிற்றிலக்கியமா ?
B.   கலம்பகத்தின் உறுப்புகள் எத்தனை ?
C.   பல்லவ மன்னன் யார் ?
D.   நந்திக் கலம்பகத்தின் பாட்டுடைத் தலைவன் யார் ?
Answer: D.  நந்திக் கலம்பகத்தின் பாட்டுடைத் தலைவன் யார் ?
7.  "புலவரே, பரிசைப் பெற்றுக் கொள்ளுங்கள் என்று அரசன் கூறினான்" - எவ்வகை வாக்கியம் எனச் சுட்டுக.
A.   செய்தி வாக்கியம்
B.   அயற்கூற்று வாக்கியம்
C.   நேர்க்கூற்று வாக்கியம்
D.   தொடர்வாக்கியம்.
Answer: C.  நேர்க்கூற்று வாக்கியம்
8.  "மாதவி தோழியிடம் தான் புத்தகம் கொண்டு வருவதாகக் கூறினாள்" - எவ்வகை வாக்கியம் எனச் சுட்டுக.
A.   நேர்க்கூற்று
B.   கலவை வாக்கியம்
C.   செய்தி வாக்கியம்
D.   அயற்கூற்று வாக்கியம்.
Answer: D.  அயற்கூற்று வாக்கியம்.
9.  "செயற்கைக்கோள் அறிவியல் அறிஞர்களால் விண்ணில் ஏவப்பட்டது" - எவ்வகை வாக்கியம் எனச் சுட்டுக.
A.   செய்வினை வாக்கியம்
B.   உடன்பாட்டு வாக்கியம்
C.   எதிர்மறை வாக்கியம்
D.   செயப்பாட்டு வினை வாக்கியம்.
Answer: D.  செயப்பாட்டு வினை வாக்கியம்.
10.  "தூய்மையுடன் இரு. தன்னலமற்று இரு" - எவ்வகை வாக்கியம் எனச் சுட்டுக..
A.   செய்திவாக்கியம்
B.   உடன்பாட்டு வாக்கியம்
C.   எதிர்மறை வாக்கியம்
D.   விழைவு வாக்கியம்.
Answer: D.  விழைவு வாக்கியம்.
11.  "ஆசிரியர் இலக்கணம் கற்பித்தார்" - எவ்வகை வாக்கியம் எனச் சுட்டுக.
A.   செய்தி வாக்கியம்
B.   எதிர்மறை வாக்கியம்
C.   செயப்பாட்டு வினைவாக்கியம்
D.   செய்வினை வாக்கியம்.
Answer: D.  செய்வினை வாக்கியம்.
12.  தன்வினைச் சொற்றொடரைக் கண்டறிக.
A.   கம்பர் இராமாயணத்தை இயற்றினார்
B.   கம்பரால் இராமாயணம் இயற்றப்பட்டது
C.   கம்பர் இராமாயணத்தை இயற்றுவித்தார்
D.   இராமாயணம் கம்பர் இயற்றியது.
Answer: A.  கம்பர் இராமாயணத்தை இயற்றினார்
13.  பிறவினைச் சொற்றொடரைக் கண்டறிக.
A.   மாதவி நடனம் கற்பித்தாள்
B.   மாதவி நடனம் கற்றாள்
C.   நடனம் மாதவியால் கற்பிக்கப்பட்டது
D.   நடனத்தை மாதவி கற்றாள்.
Answer: A.  மாதவி நடனம் கற்பித்தாள்
14.  செய்வினை வாக்கியத்தைக் கண்டறிக :
A.   நாடகம் மக்கள் பார்த்தது
B.   மக்கள் நாடகம் பார்த்தனர்
C.   மக்களால் நாடகம் பார்க்கப்பட்டது
D.   நாடகத்தை மக்களால் பார்க்கப்பட்டது.
Answer: B.  மக்கள் நாடகம் பார்த்தனர்
15.  செயப்பாட்டு வினை வாக்கியம் கண்டறிக
A.   ஆசிரியர் என்னைப் பாராட்டினார்
B.   நான் ஆசிரியரால் பாரட்டப்பட்டேன்
C.   ஆசிரியர் பாராட்டினார் என்னை
D.   என்னை ஆசிரியர் பாராட்டினார்.
Answer: B.  நான் ஆசிரியரால் பாரட்டப்பட்டேன்
16.  தன்வினைச் சொற்றொடரைக் கண்டறிக.
A.   சீறாப்புராணம் உமறுப்புலவரால் இயற்றப்பட்டது
B.   இயற்றினார் சீறாப்புராணத்தை உமறுப்புலவர்
C.   உமறுப்புலவர் சீறாப்புராணத்தை இயற்றினார்
D.   சீறாப்புராணம் உமறுப்புலவர் இயற்றுவித்தார்.
Answer: C.  உமறுப்புலவர் சீறாப்புராணத்தை இயற்றினார்
17.  “பசுத்தோல் போர்த்திய புலி போல"
இவ்வுவமையால் விளக்கப்பெறும் பொருத்தமான
பொருளைத் தேர்ந்தெடுக்க :
A.   போற்றுதல்
B.   ஏமாற்றுதல்
C.   வணங்குதல்
D.   அஞ்சுதல்.
Answer: B.  ஏமாற்றுதல்
18.  "பாம்புக்கு பால் ஊட்டி வளர்த்தால் போல"
இவ்வுவமையால் விளக்கப்பெறும்
பொருத்தமான பொருளைத் தேர்ந்தெடுக்க :
A.   நம்பகத்தன்மை
B.   அவசியமாக்குதல்
C.   கொடூரத்தன்மை
D.   அவசரமாக்குதல்.
Answer: C.  கொடூரத்தன்மை
19.  "வெந்தபுண்ணில் வேல் பாய்ந்தது போல"
இவ்வுவமையால் விளக்கப்பெறும்
பொருத்தமான பொருளைத் தேர்ந்தெடுக்க :
A.   அதிக இன்பம்
B.   மேலும் மேலும் துன்பம்
C.   மகிழ்ச்சி
D.   வெறுப்பு.
Answer: B.  மேலும் மேலும் துன்பம்
20.  “இருதலைக் கொள்ளி எறும்பைப் போல"
இவ்வுவமையால் விளக்கப்பெறும்
பொருத்தமான பொருளைத் தேர்ந்தெடுக்க:
A.   சலிப்பு
B.   தவிப்பு
C.   இழப்பு
D.   மறுப்பு.
Answer: B.  தவிப்பு
21.  “அரசனை நம்பி புருசனை கைவிட்டது போல"
இவ்வுவமையால் விளக்கப்பெறும்
பொருத்தமான பொருளைத் தேர்ந்தெடுக்க :
A.   நகைச்சுவை
B.   ஏமாற்றம்
C.   நம்பிக்கை
D.   வெற்றி.
Answer: B.  ஏமாற்றம்
22.  தேவரும் பிழைத்திலர் தெய்வ வேதியர்
ஏவரும் பிழைத்திலர் அறமும் ஈறின்றால் - அடி எதுகையைக் கண்டறிக.
A.   தேவரும் -- தெய்வ
B.   தேவரும் -- பிழைத்திலர்
C.   ஏவரும் -- அறமும்
D.   தேவரும் -- ஏவரும்
Answer: D.  தேவரும் -- ஏவரும்
23.  கள்ளாமை வேண்டும் கடிய வருதலால் - சீர்மோனையை எடுத்தெழுதுக.
A.   கள்ளாமை -- கடிய
B.   கள்ளாமை -- வேண்டும்
C.   கள்ளாமை -- வருதலால்
D.   வேண்டும் -- வருதலால்.
Answer: A.  கள்ளாமை -- கடிய
24.  ஆதிரை நல்லாள் ஆங்கது தான் கேட்(டு) - சீர்மோனையை எடுத்தெழுதுக.
A.   ஆதிரை -- ஆங்கது
B.   ஆதிரை -- நல்லாள்
C.   நல்லாள் -- தான் கேட்டு
D.   ஆதிரை -- தான் கேட்டு.
Answer: A.  ஆதிரை -- ஆங்கது
25.  சினமென்னும் சேர்ந்தாரைக் கொல்லி இனமென்னும் - இயைபுத் தொடையினைச் சுட்டுக.
A.   சினமென்னும் -- சேர்ந்தாரைக்
B.   சினமென்னும் -- கொல்லி
C.   சினமென்னும் -- இனமென்னும்
D.   சேர்ந்தாரைக் -- கொல்லி.
Answer: C.  சினமென்னும் -- இனமென்னும்
;