GK Tamil
Home TNPSC Thirukkural Quiz History Geography Science Indian Polity Sports Contact

TNPSC Group 4 2018

Aptitude Questions 1 to 25

1.  \(e^{0}\)-வின் மதிப்பு
Answer: B.   1
2.  ஒரு மாறியில் அமைந்த ஓர் ஒருபடிச் சமன்பாட்டிற்கு எத்தனை தீர்வுகள்?
Answer: B.   ஒரு தீர்வு
3.  \(0.12,\ 0.012,\ 0.0012,\ \ldots\) என்ற தொடர் வரிசையில் 7-ஆவது உறுப்பு.
Answer: D.   \(1.2 \times 10^{-7}\)
4.  சுருக்குக:

\(\dfrac{9}{8} \div \dfrac{3}{5}\) - இல் \(\left(\dfrac{3}{4}+\dfrac{3}{5}\right)\)
Answer: D.   \(1\,\dfrac{7}{18}\)
5.  ஒரு குறிப்பிட்ட அசலானது ஆண்டுக்கு 8% வட்டி வீதத்தில் மூன்று மடங்காகுவதற்கு பிடிக்கும் காலம்
Answer: C.   25 ஆண்டுகள்
6.  இரு வெவ்வேறு எண்களின் (G.C.D. மற்றும் L.C.M.) சரியான தொடர்பு
I. மீப்பெரு. பொ.வ. = மீச்சிறு. பொ.ம
II. மீப் பெரு. பொ.வ. ≤ மீச்சிறு.பொ.ம
III. மீச்சிறு.பொ.ம ≤ மீப்பெரு பொ.வ.
IV. மீச்சிறு. பொ.ம > மீப்பெரு பொ.வ.
Answer: D.   IV
7.  \(p,\ q,\ r,\ s,\ t\) என்பன கூட்டுத் தொடர் வரிசையில் \((A.P)\) இருப்பின், \(p - 4q + 6r - 4s + t = ?\)
Answer: D.   0
8.  90, 150, 225 ஆகிய எண்களின் மீ.பொ.வ மற்றும் மீ.பொ.ம.
Answer: A.   15, 450
9.  \(y-\dfrac{1}{y}=6\) எனில் \(y^{3}-\dfrac{1}{y^{3}}\) இன் மதிப்பைக் காண்க.
Answer: C.   234
10.  ஓர் இணைகரத்தில் எது தவறான கூற்று?
Answer: C.   மூலை விட்டங்களின் நீளங்களும் சமமாகும்
11.  0-வின் தலைகீழி = __________
Answer: D.   தலைகீழி கிடையாது
12.  கீழ்காணும் கூற்றுகளில் எது தவறான கூற்றாகும்?
Answer: B.   இரு எண்களின் மீப்பெரு பொ.வ. 1 எனில் அவ்விரு எண்களும் பகா எண்கள் எனப்படும்
13.  ஒரு பெருக்குத் தொடர் வரிசையின் அடுத்தடுத்த நான்கு உறுப்புகளின் பெருக்குத் தொகை 625 எனில் முதல் உறுப்பைக் காண்க.
Answer: C.   5
14.  இலாப அல்லது நட்ட சதவீதம் எப்பொழுதும் எதன் மேல் கணக்கிடப்படுகிறது?
Answer: A.   அடக்க விலை
15.  ஒரு மாணவன் அவனுடைய பள்ளிக்கு செல்லும் போது மணிக்கு 3 கி.மீ வேகத்திலும் பள்ளியிலிருந்து வீடு திரும்பும் போது மணிக்கு 2 கி.மீ வேகத்திலும் செல்கிறார். மேலும் அவர் பள்ளிக்கு சென்று வர 5 மணிநேரம் எடுத்துக் கொண்டால் பள்ளிக்கும் வீட்டிற்கும் உள்ள தூரம்
Answer: C.   6 கி.மீ
16.  \(x,\ 2x+2,\ 3x+3\) என்பன ஒரு பெருக்குத் தொடர் வரிசையிலிருப்பின் \(11x,\ 22x+22,\ 33x+33\) என்ற தொடர் வரிசையானது
Answer: B.   ஒரு பெருக்குத் தொடர் வரிசை
17.  மூன்று எண்களின் கூடுதல் 264 முதல் எண் இரண்டாவது எண் போல் இரு மடங்கு, மூன்றாவது எண் முதல் எண்ணில் மூன்றில் ஒரு பங்கு எனில் இரண்டாவது எண் யாது?
Answer: B.   72
18.  \(1^{2}+2^{2}+3^{2}+\cdots+10^{2}=385\) எனில் \(2^{2}+4^{2}+6^{2}+\cdots+20^{2}\) -ன் மதிப்பு
Answer: C.   1540
19.  \(y\)-ன் \(x\%\)-க்கும் \(x\)-ன் \(y\%\) இடையே, விகித பின்னத்தின் மதிப்பு
Answer: D.   1
20.  அருணின் தற்போதைய வயது அவருடைய தந்தையின் வயதில் பாதியாகும். பன்னிரண்டு ஆண்டுகட்கு முன்பு தந்தையின் வயதானது அருணின் வயதைப் போல மும்மடங்காக இருந்தது. தற்போது தந்தையின் வயது
Answer: C.   48 ஆண்டுகள்
21.  \(a,\ b,\ c\) என்பன ஒரு கூட்டுத் தொடர்வரிசையில் உள்ளன எனில் \(3^{a},\ 3^{b},\ 3^{c}\) ஆகியவை ____________ என்ற தொடர்வரிசையில் உள்ளது.
Answer: B.   G.P.
22.  \(-1<r<1\) எனில் முடிவிலி வரை பெருக்குத்தொடரின் கூடுதல்
Answer: C.   \(\dfrac{a}{1-r}\)
23.  அரைவட்டத்தில் அமையும் கோணம் _____________
Answer: D.   செங்கோணம்
24.  \(\dfrac{a}{3}=\dfrac{b}{4}=\dfrac{c}{7}\) எனில் \(\dfrac{a+b+c}{c}\) என்பது
Answer: B.   \(2\)
25.  2:3, 3:5, 4:7, 5:8 இவற்றில் பெரியது எது?
Answer: D.   2:3
;