GK Tamil
Home TNPSC Quiz History Geography Science Indian Polity Sports Contact

TNPSC Group 4 2024 – Aptitude Questions 1 to 27 in Tamil

1. ஒருவர் ரூ.12,000 ஐ 5% கூட்டுவட்டி விகிதத்தில் 2 ஆண்டுகளுக்கு நிரந்தர வைப்பு திட்டத்தில் செலுத்துகிறார். நிரந்தர வைப்பு முதிர்வு தொகையாக அவர் எவ்வளவு பெறுவார்?

  • A. ரூ. 13,200
  • B. ரூ. 13,430
  • C. ரூ. 13,230
  • D. ரூ. 12,600
Answer: C. ரூ. 13,230

2. கித்தானைக் கொண்டு 700 செ.மீ ஆரமும் 24 மீ உயரமும் உடைய ஒரு கூம்பு வடிவக் கூடாரம் உருவாக்கப்படுகிறது. செவ்வக வடிவக் கித்தானின் அகலம் 4 மீ எனில் அதன் நீளம் காண்க.

  • A. 137.5 மீ
  • B. 13.75 மீ
  • C. 1.375 மீ
  • D. 1.037 மீ
Answer: A. 137.5 மீ

3. அடுத்த எண்ணைக் காண்க :
1, 2, 6, 24, 120, ?

  • A. 135
  • B. 146
  • C. 720
  • D. 438
Answer: C. 720

4. x:y = 2:1 எனில் (x² - y²): (x² + y²) என்பது

  • A. 5:3
  • B. 1:3
  • C. 3:1
  • D. 3:5
Answer: D. 3:5

5. குமரன் 20% தள்ளுபடியுடன் ஒரு ரெயின்கோட்டை வாங்கி ரூ. 25 யை சேமித்தார் எனில், ரெயின்கோட்டின் அசல் விலை என்ன?

  • A. ரூ. 125
  • B. ரூ. 250
  • C. ரூ. 175
  • D. ரூ. 150
Answer: A. ரூ. 125

6. A = 1, B = 2, C = 3, ....Z = 26 எனக் கொண்டால் H,C,F-ன் மீ.சி.ம எதற்குச் சமமில்லை?

  • A. X
  • B. E+S
  • C. A+C+H
  • D. AxCxH
Answer: C. A+C+H

7. மதிப்பு காண்க √5√5√5....

  • A. 5³
  • B. 5⁰
  • C. 5²
  • D. 5¹
Answer: D. 5¹

8. ஒரு அரைக்கோளத்தில் காணப்படும் மீப்பெரு வட்டங்களின் எண்ணிக்கை எத்தனை?

  • A. 1
  • B. 0
  • C. எண்ணற்றவை
  • D. 2
Answer: A. 1

9. உயரம் 4 மீ மற்றும் அடிப்பரப்பு 500 ச.மீ கொண்ட ஓர் உருளையின் கனஅளவைக் காண்க.

  • A. 2000 மீ³
  • B. 2500 மீ³
  • C. 2100 மீ³
  • D. 2700 மீ³
Answer: A. 2000 மீ³

10. 3x+4y:4x+6y = 22:32 எனில் x:y என்பது

  • A. 1:2
  • B. 1:4
  • C. 2:1
  • D. 3:1
Answer: A. 1:2

11. a மற்றும் b என்னும் இரு எண்கள் m:n என்னும் விகிதத்தில் அமைந்துள்ளன எனில் a மற்றும் b யின் மீ.பொ.ம எது?

  • A. ma
  • B. nb
  • C. mb
  • D. ab
Answer: C. mb

12. ஒரு புத்திசாலி மனிதன் மூட்டைக்கு 30 மாம்பழங்கள் வீதம் 3 மூட்டைகள் எடுத்துச் செல்கிறான். ஒவ்வொரு சுங்கச் சாவடியைத் தாண்டும் பொழுதும் மூட்டைக்கு 1 மாம்பழம் தர வேண்டும். 30 சுங்கச் சாவடிகளைத் தாண்டும் பொழுது அவனிடம் எத்தனை மாம்பழங்கள் மீதம் இருக்கும்?

  • A. 0
  • B. 10
  • C. 20
  • D. 25
Answer: D. 25

13. 24 மீ நீளம், 18 மீ அகலம் மற்றும் 16 மீ உயரம் உள்ள ஒரு அறையினுள் வைக்க முடிந்த மிகப் பெரிய கம்பியின் நீளம் என்ன?

  • A. 14 மீ
  • B. 24 மீ
  • C. 34 மீ
  • D. 44 மீ
Answer: C. 34 மீ

14. இரு எண்களின் மீ.சி.ம ஆனது மீ.பெ.கா-வின் 6 மடங்காகும். மீ.பெ.கா 12 மற்றும் ஓர் எண் 36 எனில், மற்றோர் எண்ணைக் காண்க.

  • A. 24
  • B. 34
  • C. 12
  • D. 6
Answer: A. 24

15. இரு எண்களின் மீ.பொ.வ 11 மற்றும் அவற்றின் மீ.சி.ம.693. ஓர் எண் 77 எனில் மற்றொரு எண் என்ன?

  • A. 79
  • B. 88
  • C. 99
  • D. 77
Answer: C. 99

16. வியாபாரி ஒருவர் இரண்டு வகையான எண்ணெய்களை முறையே 120 லி, 180 லி என இரு கலங்களில் வைத்துள்ளார். சம அளவு கொண்ட கலனில் அந்த இரண்டு எண்ணெய்களை நிரப்பி விற்க விரும்பினார். கலன் கொள்ளும் அதிகபட்ச கொள்ளளவு என்ன?

  • A. 10 லி
  • B. 30 லி
  • C. 60 லி
  • D. 90 லி
Answer: C. 60 லி

17. 1³ + 2³ + 3³ + ... + K³ = 72900 எனில், 1+2+3+...+K யின் மதிப்பு காண்க.

  • A. 220
  • B. 370
  • C. 270
  • D. 170
Answer: C. 270

18. 2, 3, 5, 9, x, 33, y, ... என்ற தொடரில் x + y ன் மதிப்பு என்ன?

  • A. 65
  • B. 72
  • C. 75
  • D. 82
Answer: D. 82

19. AZBYCX .... YBZA என்றவாறு எழுதும் போது ஆங்கில உயிரெழுத்திற்கு இடது புறம் அருகில் வரக்கூடிய உயிரெழுத்து அல்லாத எழுத்துக்கள் எத்தனை?

  • A. 7
  • B. 8
  • C. 9
  • D. 10
Answer: C. 9

20. ரமீலா கூறுகையில், "எனது மாமனாரான ராமனாதனின் ஒரே மகனான ராமன் ராகவியின் தந்தை",ரமணி, ராகவியின் சகோதரி என்றால் ரமணி ராமனாதனுக்கு என்ன உறவு?

  • A. மனைவி
  • B. சகோதரி
  • C. மகள்
  • D. பேத்தி
Answer: D. பேத்தி

21. 3 ஆண்கள் மற்றும் 4 பெண்கள் 7 நாள்களில் ரூ.3,780 சம்பாதிக்கின்றனர். 11 ஆண்கள் மற்றும் 13 பெண்கள் சேர்ந்து 8 நாள்களில் ரூ.15,040. சம்பாதிக்கின்றனர் எனில் 7 ஆண்கள் மற்றும் 9 பெண்கள் சேர்ந்து எவ்வளவு நாள்களில் ரூ.12,400 சம்பாதிப்பர்?

  • A. 9 நாள்கள்
  • B. 12 நாள்கள்
  • C. 10 நாள்கள்
  • D. 11 நாள்கள்
Answer: C. 10 நாள்கள்

22. அசல் தொகை ரூ.10,000 ஆனது 15% ஆண்டு வட்டியில் 3 ஆண்டுகளுக்கு கிடைக்கும் கூட்டு வட்டிக்கும், தனி வட்டிக்கும் இடையேயான வித்தியாசம் காண்க.

  • A. 70.86
  • B. 708
  • C. 708.75
  • D. 775
Answer: C. 708.75

23. ஒருவர் ரூ.2,000 ஐ 6% தனிவட்டிக்கு கடன் வாங்குகிறார். ஓர் ஆண்டு முடிவில் ரூ.1,000 ஐ திருப்பி செலுத்துகிறார் எனில் அவர் அக்கடனை இரண்டாம் ஆண்டு முடிவில் முழுவதுமாக முடிக்க எவ்வளவு தொகை செலுத்த வேண்டும்?

  • A. ரூ. 1,240
  • B. ரூ. 1,180
  • C. ரூ. 1,120
  • D. ரூ. 1,200
Answer: B. ரூ. 1,180

24. விக்னேஷ் 2 ஆண்டுகளுக்கு 4% வட்டிவீதத்தில் ரூ.10,000 கடனாக பெற்றார். இந்தப் பணத்தை சஞ்சையிடம் 2 ஆண்டுகளுக்கு 6% வட்டிவீதத்தில் கடனாகக் கொடுத்தார். இந்தப் பரிமாற்றத்தில் அவருக்குக் கிடைத்த ஓர் ஆண்டின் லாபம் என்ன?

  • A. 200
  • B. 400
  • C. 600
  • D. 800
Answer: A. 200

25. 7 மற்றும் 13 ஆகிய எண்களின் மீ.பொ.வ மற்றும் மீ.சி.ம வின் விகிதத்தைக் காண்க.

  • A. 1 : 91
  • B. 13 : 7
  • C. 91 : 10
  • D. 7 : 13
Answer: A. 1 : 91

26. கயல் 5 டசன் முட்டைகளை வாங்கினார். அதில் 45 முட்டைகள் நல்ல முட்டைகள், எனில் கெட்டுவிட்ட முட்டைகளின் சதவீதத்தைக் காண்க.

  • A. 45%
  • B. 35%
  • C. 25%
  • D. 15%
Answer: C. 25%

27. Sunday = 2, Tuesday = 3, Thursday = 2 எனில் Monday ன் மதிப்பு என்ன?

  • A. 1
  • B. 2
  • C. 3
  • D. 4
Answer: B. 2
;