GK Tamil
Home TNPSC Quiz History Geography Science Indian Polity Sports Contact

TNPSC Group 4 2024 – General Studies Questions 26 to 50 in Tamil

1. ரோம் நாட்டைச் சேர்ந்த மூத்த பிளினி தன்னுடைய இயற்கை வரலாறு எனும் நூலில் __________ இந்தியாவின் முதல் பேரங்காடி எனக் குறிப்பிட்டுள்ளார்.

  • A. காவிரிப்பூம்பட்டினம்
  • B. நாகப்பட்டினம்
  • C. முசிறி
  • D. கொற்கை
Answer: C. முசிறி

2. 1891 இல் அயோத்தி தாசரால் நிறுவப்பட்ட திராவிட மகாஜனசபையின் முதல் மாநாடு நடைபெற்ற இடம்

  • A. சேலம்
  • B. திருச்சி
  • C. நீலகிரி
  • D. மதுரை
Answer: C. நீலகிரி

3. வள்ளுவன் செய்த திருக்குறளை நன்கு கற்றுணர்ந்தோர் உள்ளுவரோ மனுவாதி நூல்களை என்று திருக்குறளைப் புகழ்ந்துரைத்தவர் யார்?

  • A. ஒளவையார்
  • B. பேரா. சுந்தரம் பிள்ளை
  • C. பாரதியார்
  • D. சுத்தானந்த பாரதியார்
Answer: B. பேரா. சுந்தரம் பிள்ளை

4. "ஞாலம் கருதினும் கை கூடும்"
மேற்கூறிய திருக்குறளின்படி ஒருவர் உலகம் முழுவதையும் கைப்பற்றக் கருதினாலும் அவர் எந்த இரண்டை அறிந்து செயல்பட வேண்டும்?

  • A. செல்வமும்,வீரமும்
  • B. காலமும், இடமும்
  • C. சகோதர - சகோதரி உதவி
  • D. தாய், தந்தை உதவி
Answer: B. காலமும், இடமும்

5. தமிழ்நாட்டில் இரத்த சோகை முக்த் பாரத் திட்டம் எந்த ஆண்டு தொடங்கப்பட்டது?

  • A. 2010
  • B. 2015
  • C. 2018
  • D. 2020
Answer: C. 2018

6. ஜப்பான் பன்னாட்டு கூட்டுறவு முகமை நிதி உதவியுடன் செயல்படும் தமிழ்நாடு நகர்ப்புற சுகாதாரத் திட்டத்தின் செயலாக்கக் காலம் ____
ஆண்டுகள்.

  • A. 5
  • B. 6
  • C. 7
  • D. 8
Answer: C. 7

7. இந்தியா 2018 ஆம் ஆண்டை எந்தப் பயிரின் தேசிய ஆண்டாக கடைபிடித்தது?

  • A. திணை வகைகள்
  • B. எண்ணெய் வித்துக்கள்
  • C. கரும்பு
  • D. பருத்தி
Answer: A. திணை வகைகள்

8. கூற்று (A]: 2023 ஆம் ஆண்டு திறனறித் தேர்வுத் திட்டம் தொடங்கப்பட்டது.
காரணம் (R) : அரசுப் பள்ளி மாணவர்களை முதன்மை கல்வி நிறுவனத்தில் உயர்கல்வி பயில ஊக்குவிக்க உருவாக்கப்பட்டது.

  • A. [A] சரி, ஆனால் (R) தவறு
  • B. [A] மற்றும் [R] இரண்டும் சரி, [R]-என்பது [A]-வின் சரியான விளக்கம்
  • C. (A) தவறு, [R] சரி
  • D. [A] மற்றும் [R] இரண்டும் சரி, ஆனால் [R]-என்பது [A]-வின் சரியான விளக்கம் இல்லை
Answer: B. [A] மற்றும் [R] இரண்டும் சரி, [R]-என்பது [A]-வின் சரியான விளக்கம்

9. ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மக்களின் ஒட்டு மொத்த வளர்ச்சியை மேம்படுத்த பல்வேறு நலத்திட்டங்கள், 2023-2024ஆம் ஆண்டுக்கான வரவு செலவு மதிப்பீட்டில் ரூ. _________ கோடிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

  • A. ரூ. 3012.85
  • B. ரூ. 3212.85
  • C. ரூ. 3512.85
  • D. ரூ. 3552.85
Answer: C. ரூ. 3512.85

10. பாலூட்டிகளில் பால்பற்களின் அமைவில் காணப்படாதது

  • A. முன்கடைவாய் பற்கள்
  • B. பின்கடைவாய் பற்கள்
  • C. கோரைப் பற்கள்
  • D. வெட்டுப் பற்கள்
Answer: B. பின்கடைவாய் பற்கள்

11. கீழ்க்காண்பவற்றில் எந்த வகை உணவுப் பொருள் ஃபுளோய உணவேற்றம் மூலம் கடத்தப்படுகிறது?

  • A. குளுக்கோஸ்
  • B. ஸ்டார்ச்
  • C. ப்ரக்டோஸ்
  • D. சுக்ரோஸ்
Answer: D. சுக்ரோஸ்

12. எக்கூற்று தவறானது: "டாப்ளர் விளைவு நடைபெறாமல் இருக்க நிபந்தனைகள்”
1. கேட்குநர் ஓய்வு நிலையிலும், ஒலி மூலம் கேட்குநரை நோக்கி நகர்கிறது
2. ஒலி மூலம் (S) மற்றும் கேட்குநர் (L) சம இடைவெளியில் நகரும்போது
3. ஒலி மூலம் (S) மற்றும் கேட்குநர் (L) ஒன்றுக்கொன்று செங்குத்தாக நகரும்போது
4. ஒலி மூலமானது வட்டப்பாதையின் மையப்பகுதியில் அமைந்து, கேட்குநர் வட்டப்பாதையில் நகரும்போது

  • A. 1 மட்டும்
  • B. 1 மற்றும் 2 மட்டும்
  • C. 1 மற்றும் 4 மட்டும்
  • D. 3 மற்றும் 4 மட்டும்
Answer: A. 1 மட்டும்

13. சரியாக பொருந்திய தொல்லுயிரினை தேர்ந்தெடுக்க :

  • A. பாசி - பர்குலா
  • B. பிரையோஃபைட் - நயடைட்டா
  • C. டெரிடோஃபைட் - லெப்பிடோகார்பான்
  • D. ஜிம்னோஸ்பெர்ம் - ரைனியா
Answer: B. பிரையோஃபைட் - நயடைட்டா

14. சரியான இணைகளை தேர்ந்தெடு :
1. பினாப்தலீன் - அமில ஊடகத்தில் நிறமற்றது, கார ஊடகத்தில் இளஞ்சிவப்பு நிறத்தை உருவாக்கும்
2. மெத்தைல் ஆரஞ்சு - கார ஊடகத்தில் இளஞ்சிவப்பு நிறம், அமில ஊடகத்தில் மஞ்சள் நிறத்தை உருவாக்கும்
3. சிவப்பு லிட்மஸ் தாள் - கார ஊடகத்தில் நீல நிறமாக மாறும்
4. நீல லிட்மஸ் தாள் - கார ஊடகத்தில் சிவப்பு நிறமாக மாறும்

  • A. 1 மற்றும் 2 சரியானது
  • B. 1 மற்றும் 3 சரியானது
  • C. 2 மற்றும் 3 சரியானது
  • D. 3 மற்றும் 4 சரியானது
Answer: B. 1 மற்றும் 3 சரியானது

15. அண்மையில் தாவரங்களில் நோய் ஏற்படுத்தும் பூஞ்சையானது மனிதர்களைத் தாக்கி நோய்த்தொற்று ஏற்படுத்தியதாக தெரியவந்துள்ளது. இதற்கு காரணமான பூஞ்சை எது?

  • A. பிளாஸ்மோடையோபோரா பிராசிக்கே
  • B. காண்ட்ரோஸ்டிரியம் பர்பூரியம்
  • C. டாப்ரினா டிபார்மன்ஸ்
  • D. பக்சினியா கிராமினிஸ் வார்-டிரிட்டிசை
Answer: B. காண்ட்ரோஸ்டிரியம் பர்பூரியம்

16. பின்வருவனவற்றில் எந்த மாநிலம் சதுப்புநில மானை மாநில விலங்காகக் கொண்டுள்ளது ?

  • A. கேரளா
  • B. நாகாலாந்து
  • C. ஹரியானா
  • D. மகாராஷ்டிரா
Answer: D. மகாராஷ்டிரா

17. எந்த நாட்டில் (2023ஆம் ஆண்டு) 49-வது G7 உச்சி மாநாடு நடைபெற்றது?

  • A. அமெரிக்கா
  • B. தென் ஆப்பிரிக்கா
  • C. பிரேசில்
  • D. ஜப்பான்
Answer: D. ஜப்பான்

18. சரியான வாக்கியங்களைத் தேர்ந்தெடு :
(i) இந்திய அரசு 1972-இல் வனவிலங்கு பாதுகாப்புச் சட்டத்தை இயற்றியது.
(ii) புலிகள் பாதுகாப்பு திட்டம் ஏப்ரல் 1974-இல் தொடங்கப்பட்டது.
(iii) இந்திய அரசாங்கம் 16 உயிர்க்கோள காப்பகங்களை ஏற்படுத்தியுள்ளது.

  • A. (i) மட்டும்
  • B. (i) மற்றும் (iii) மட்டும்
  • C. (i) மற்றும் (ii) மட்டும்
  • D. (ii) மற்றும் (iii) மட்டும்
Answer: A. (i) மட்டும்

19. தண்டவாளங்களில் யானை விபத்துக்களைத் தடுக்க இந்திய ரயில்வே ________ என்ற அதி நவீன AI தொழில்நுட்பத்துடன் இயங்கும் முறையை அறிமுகப்படுத்தியுள்ளது.

  • A. ஹத்தி போர்ட்
  • B. ரேடியோ காலக்ஸி
  • C. கஜ்ராஜ் சுரக்ஷா
  • D. ஜியோக்ளிப் சேவர்
Answer: C. கஜ்ராஜ் சுரக்ஷா

20. கீழ்க்கண்டவற்றுள் எது குப்தர் காலத்துக் குடைவரைக் கோயில் இல்லை?

  • A. உதயகிரி குகை (ஒடிசா)
  • B. அஜந்தா - எல்லோரா குகை (மகாராஷ்டிரா)
  • C. எலிபண்டா குகை (மகாராஷ்டிரா)
  • D. பாக் குகை (மத்திய பிரதேசம்)
Answer: C. எலிபண்டா குகை (மகாராஷ்டிரா)

21. வங்கப் பிரிவினையின் போது ரக்ஷாபந்தன் விழாவை பெருமளவில் மக்கள் பங்கேற்பை தொடக்கி வைத்தவர்

  • A. M.K. காந்தி
  • B. ஜவஹர்லால் நேரு
  • C. சுரேந்திரநாத் பானர்ஜி
  • D. ரவீந்திரநாத் தாகூர்
Answer: D. ரவீந்திரநாத் தாகூர்

22. தான் பெற்ற வெற்றிகளை நினைவு கூறும் வகையில் தன் நாணயங்களில் தன்னுடைய பெயரை இரண்டாம் அலெக்சாண்டர் என்று பொறித்துக் கொண்ட அரசர்

  • A. பாமன் ஷா
  • B. முகமது கவான்
  • C. கிருஷ்ணதேவராயர்
  • D. சமுத்திர குப்தர்
Answer: A. பாமன் ஷா

23. கீழே கொடுக்கப்பட்டுள்ள எந்த கல்வெட்டுக் குறிப்புகள் மெசபடோமியாவுக்கும், ஹரப்பாவுக்கும் இடையேயான வணிகத் தொடர்புகளைக் குறிப்பிடுகின்றன?

  • A. தேவநாகரி
  • B. கரோஷ்டி
  • C. க்யூனிபார்ம்
  • D. ஹைரோக்ளைபிக்ஸ்
Answer: C. க்யூனிபார்ம்

24. கீழ்க்காணும் கூற்றுகளில் அரசு நெறிமுறையுறுத்தும் கோட்பாடுகளை பற்றிய சரியான கூற்றை கண்டறிக :
(i) சட்டப்பிரிவு 36 - லிருந்து 51 வரை அரசு நெறிமுறையுறுத்தும் கோட்பாடுகள் பற்றி கூறியுள்ளது.
(ii) டாக்டர் B.R. அம்பேத்கர் இதனை இந்திய அரசியலமைப்பின் புதுமையான சிறப்பம்சம் என விவரிக்கிறார்.
(iii) இந்த கொள்கைகளை நீதிமன்றத்தால் வலுக்கட்டாயமாக செயல்படுத்த முடியும்.

  • A. (i) மட்டும்
  • B. (i) மற்றும் (iii) மட்டும்
  • C. (i) மற்றும் (ii) மட்டும்
  • D. (ii) மற்றும் (iii) மட்டும்
Answer: C. (i) மற்றும் (ii) மட்டும்

25. அரசமைப்பு சட்டத்தின் படி மூன்று அடுக்குகளை கொண்ட பஞ்சாயத்து ராஜ் அமைப்பினை பொருத்துக.

  • A. கிராமப் பஞ்சாயத்து - இடைநிலைப் பஞ்சாயத்து - மாவட்டப் பஞ்சாயத்து
  • B. ஊராட்சி ஒன்றியம் - மாவட்டப் பஞ்சாயத்து - கிராமப் பஞ்சாயத்து
  • C. மாவட்டப் பஞ்சாயத்து - கிராமப் பஞ்சாயத்து - இடைநிலைப் பஞ்சாயத்து
  • D. கிராமப் பஞ்சாயத்து - நகரப் பஞ்சாயத்து - மாவட்டப் பஞ்சாயத்து
Answer: A. கிராமப் பஞ்சாயத்து - இடைநிலைப் பஞ்சாயத்து - மாவட்டப் பஞ்சாயத்து
;