1. கூற்று [A] : அரசமைப்பின் 249-வது உறுப்பின்படி ஒரு அதிகாரத்தை மாநில பட்டியலிலிருந்து மத்திய பட்டியலுக்கு நாடாளுமன்றத்தால் மாற்ற முடியும்.
காரணம் [R]: தேசிய நலன் கருதி நாடாளுமன்றம் இம்மாற்றத்தை செய்யலாம்.
2. 'வெளிநாடு வாழ் இந்தியர்கள் தினம்' எந்த நாளில் கொண்டாடப்படுகிறது?
3. யார் இந்திய அரசியலமைப்பின் சிற்பி எனக் கருதப்படுகிறார்?
4. 1855-ல் மேற்கு வங்க மாநிலத்திலுள்ள _______ என்னும் ஊரில்
நவீனமயமாக்கப்பட்ட சணல் தொழிற்சாலை முதல் முறையாக உருவாக்கப்பட்டது.
5. மனித மேம்பாட்டுக் குறியீட்டில் அதிக புள்ளிகள் பெற்ற நாடுகளை மேலிருந்து கீழாக வரிசைப்படுத்துக. (2016 ஆம் ஆண்டின் படி)
1. நார்வே
2. ஸ்விட்சர்லாந்து.
3. இந்தியா
4. ஆஸ்திரேலியா
6. தவறான இணையைக் கண்டுபிடி:
(i) வேளாண் வருமான வரி - மாநிலம்
(ii) நிலம் மற்றும் கட்டிடங்கள் மீதான வரி - மாநிலம்
(iii) மின்சார நுகர்வு அல்லது விற்பனைக்கான வரி - ஒன்றிய அரசு
(iv) நில வருவாய் - ஒன்றிய அரசு
7. நிதி ஆயோக்கின் நிர்வாக தலைவர் யார்?
8. தேவதாசி முறை ஒழிப்பு சட்டம் கொண்டு வர டாக்டர். முத்துலட்சுமி அம்மையாருக்கு ஆணிவேராக இருந்த பெண் சீர்திருத்தவாதி
9. "நான் ஏன் நாத்திகனாக இருக்கிறேன்”? என்ற புத்தகத்தின் ஆசிரியர்
10. "இந்தியாவில் வறுமையும் பிரிட்டிஷ் தன்மையற்ற ஆட்சியும்" என்ற நூலின் ஆசிரியர்
11. பின்வரும் கூற்றுகளில் தீரன் சின்னமலைப் பற்றிய சரியான கூற்று எது?
(i) தீரன் சின்னமலை ஆங்கிலேயக் கிழக்கிந்தியக் கம்பெனியை எதிர்த்துப் போரிட்ட கொங்கு நாட்டு பாளையக்காரர் ஆவார்.
(ii) இவர் பிரெஞ்சுக்காரர்களாலும், திப்புவாலும் பயிற்சி அளிக்கப்பட்ட
பாளையக்காரர் ஆவார்.
(iii) 1800 லிருந்து அவர் தூக்கிலிடப்பட்ட 1805 ஜூலை 31 வரை பிரெஞ்சுக்காரர்களுக்கு எதிராகப் போராடினார்.
12. தொழிலாளன் (worker) என்ற தமிழ் பத்திரிக்கையை வெளியிட்டவர் யார்?
13. விஜய நகரப் பேரரசில் அறிமுகமான __________ நாணயம் பகோடா எனப்பட்டது.
14. கீழ்கண்ட கூற்றுகளில் வ. உ. சிதம்பரம் பிள்ளையை பற்றிய சரியான வாக்கியங்கள் எவை?
(i) கோபாலகிருஷ்ண கோகலேவின் சீடர் ஆவார்.
(ii) இவர் செக்கிழுத்த செம்மல் என்று அழைக்கப்பட்டார்.
(iii) இந்திய பணியாளர் சங்கத்தை தோற்றுவித்தார்.
(iv) வழக்கறிஞர் ஆவார்
15. அசோகர் கல்வெட்டில் குறிப்பிடப்படும் “சத்யபுத்ரர்”
16. "நெய்யால் எரிநுதுப்பேம் என்றற்றால் கௌவையால்
காமம் நுதுப்பேம் எனல்"
என்னும் குறளில் நுதுப்பேம் என்பதன் பொருள் என்ன?
17. பிறப்பினால் எல்லா உயிர்களும் சமம் எனக் கருதும் வள்ளுவர் எதன் வழி அவற்றை வேறுபடுத்துகிறார்?
18. அக்சாய் சின் __________ மற்றும் சீனாவிற்கு இடையே சர்ச்சைக்குரிய பகுதியாக உள்ளது.
19. கூற்று (A): பொருளாதாரத்தில் பொதுவான மந்தநிலை இருந்த போதிலும் சிமெண்ட் உற்பத்தி மற்றும் நுகர்வு தொடர்ந்து வளர்ந்து வருகிறது.
காரணம் [R]: இந்தியா மிகப்பெரிய சிமெண்ட் உற்பத்தியாளர்களில் ஒன்றாகும் மற்றும் உலகில் முதல் இடத்தில் உள்ளது.
20. தமிழக அரசு _________ ஆம் தேதியை கல்வி வளர்ச்சி நாளாக அறிவித்துள்ளது.
21. 2022-2023 ஆம் ஆண்டிற்கான தமிழ்நாட்டின் மொத்த மாநில உள்நாட்டு உற்பத்தி (GSDP) அதே கால கட்டத்தில் இந்தியாவின் GDP வளர்ச்சி விகிதமாக 7.24%க்கு எதிராக _____% வளர்ச்சியடைந்தது.
22. கூற்று (A): "மங்கள மாலை திட்டம்" 2012-2013இல் அறிமுகப்படுத்தப்பட்டது.
காரணம் [R] : அனாதை பெண்களுக்கு தகுந்த மணமகன் கிடைக்க வழிவகை செய்கிறது.
23. அதிநவீன வசதிகளுடன் கூடிய ரயிலில் அடிமைகளாக இருப்பதை விட சுதந்திரத்துடன் கூடிய மாட்டு வண்டியே சிறந்தது எனக் கூறியவர்