TNPSC Group 4 2024
General Tamil Questions 76 to 100
1.
பதினெண் என்றால்
A.
18
B.
20
C.
11
D.
17
Answer:
A.
18
2.
'இனியவை நாற்பது' பாடலின் ஆசிரியர் யார்?
A.
நப்பசலையார்
B.
பூதஞ்சேந்தனார்
C.
பூங்குன்றனார்
D.
குடப்புலவியனார்
Answer:
B.
பூதஞ்சேந்தனார்
3.
"பூவையும் குயில்களும் பொலங்கை வண்டரும்" - இவ்வடியில் பூவையும் என்பது ________ குறிக்கும்.
A.
மயில்கள்
B.
பெண்கள்
C.
நாகணவாய்ப் பறவைகள்
D.
மரங்கொத்திப் பறவைகள்
Answer:
C.
நாகணவாய்ப் பறவைகள்
4.
'உத்தர காண்டம்' எழுதியவர்
A.
ஒட்டக்கூத்தர்
B.
கம்பர்
C.
வில்லிபுத்தூரார்
D.
புகழேந்தி
Answer:
A.
ஒட்டக்கூத்தர்
5.
"பாடை மாக்கள்” என அழைக்கப்படுபவர்கள் யாவர்?
A.
சமயத் தத்துவவாதிகள்
B.
பல மொழி பேசும் மக்கள்
C.
படை வீரர்கள்
D.
வணிகர்கள்
Answer:
B.
பல மொழி பேசும் மக்கள்
6.
பொருத்துக.
| (a) மணிமேகலை | 1. சேக்கிழார் |
| (b) சிலப்பதிகாரம் | 2. சீத்தலைச்சாத்தனார் |
| (c) பெரியபுராணம் | 3. பரஞ்சோதி முனிவர் |
| (d) திருவிளையாடற் புராணம் | 4. இளங்கோவடிகள் |
A.
3 4 1 2
B.
2 4 1 3
C.
2 1 4 3
D.
1 2 3 4
Answer:
B.
2 4 1 3
7.
'முடிகெழு வேந்தர் மூவர்க்கும் உரியது' - என அழைக்கப்படும் காப்பியம் எது?
A.
கம்பராமாயணம்
B.
பெரியபுராணம்
C.
சீவகசிந்தாமணி
D.
சிலப்பதிகாரம்
Answer:
D.
சிலப்பதிகாரம்
8.
"ஓங்கு தண்பணைசூழ் நீப வனத்தை நீத்து ஒரு போதேனும் " இவ்வடியில் நீப வனம் என்பது
A.
கடம்பவனம்
B.
உவவனம்
C.
பாலைவனம்
D.
மலர்வனம்
Answer:
A.
கடம்பவனம்
9.
பாரதியார் பாடிய பாடல்களுள் ஒன்று
A.
குடும்ப விளக்கு
B.
மருமக்கள் வழி மாண்மியம்
C.
குயில் பாட்டு
D.
சீறாப்புராணம்
Answer:
C.
குயில் பாட்டு
10.
'வாலெங்கே? நீண்டுஎழுந்த வல்லுகி ரெங்கே? நாலு __________ __________ எனத் தொடங்கும் இரட்டுறமொழிதல் பாடலின் ஆசிரியர் யார்?
A.
சொக்கநாதர் பலபட்டடையார்
B.
அழகிய சொக்கநாதர்
C.
கவி காளமேகம்
D.
குமரேசர்
Answer:
C.
கவி காளமேகம்
11.
சரியானதைக் கண்டறிக.
(I) மனோன்மணீயத்தின் கிளைக்கதை சிவகாமியின் சபதம்.
(II) நூலின் தொடக்கத்தில் கடவுள் வாழ்த்துடன் தமிழ்த்தாய் வாழ்த்தும் இடம் பெற்றுள்ளது.
(III) எளிய நடையில் வெண்பாவால் அமைந்தது.
(IV) மனோன்மணீயம் தமிழின் முதல் பா வடிவ நாடக நூல்.
(I) மனோன்மணீயத்தின் கிளைக்கதை சிவகாமியின் சபதம்.
(II) நூலின் தொடக்கத்தில் கடவுள் வாழ்த்துடன் தமிழ்த்தாய் வாழ்த்தும் இடம் பெற்றுள்ளது.
(III) எளிய நடையில் வெண்பாவால் அமைந்தது.
(IV) மனோன்மணீயம் தமிழின் முதல் பா வடிவ நாடக நூல்.
A.
(I) மற்றும் (II)
B.
(I), (II) மற்றும் (III)
C.
(I), (II), (IV) சரி
D.
அனைத்தும் சரி
Answer:
C.
(I), (II), (IV) சரி
12.
'திருவிருத்தம்' என்ற நூலின் ஆசிரியர்
A.
நம்மாழ்வார்
B.
திருப்பாணாழ்வார்
C.
மதுரகவியாழ்வார்
D.
பேயாழ்வார்
Answer:
A.
நம்மாழ்வார்
13.
'திருக்கேதாரப்' பதிகத்தைப் பாடியவர் யார்?
A.
அப்பர்
B.
சம்பந்தர்
C.
சுந்தரர்
D.
மாணிக்கவாசகர்
Answer:
C.
சுந்தரர்
14.
மார்கழித் திங்களில் திருமால் கோயில்களிலும் வீடுகளிலும் ஓதப்படும் பாடல்
A.
திருப்பாவை
B.
திருவாய்மொழி
C.
நாச்சியார் திருமொழி
D.
தேவாரம்
Answer:
A.
திருப்பாவை
15.
'தமிழ்ப் பெருங்காவலர்' என்ற சிறப்புப் பெயருக்குரியவர் யார்?
A.
மறைமலையடிகள்
B.
பேரா. தனிநாயகம்
C.
தேவநேயப்பாவாணர்
D.
உ.வே.சாமிநாதர்
Answer:
C.
தேவநேயப்பாவாணர்
16.
'திருக்குறள் மூலத்தை நேரடியாகப் படிக்க விரும்பியே தமிழ் பயிலத் தொடங்கினேன்' - என்று கூறியவர் யார்?
A.
அண்ணல் அம்பேத்கர்
B.
முனைவர். எமினோ
C.
காந்தியடிகள்
D.
ஜி.யு. போப்
Answer:
C.
காந்தியடிகள்
17.
தமிழக அரசின் பாவேந்தர் நினைவுப்பரிசினைப் பெற்ற முதற்பாவலர்.
A.
வாணிதாசன்
B.
உவமைக் கவிஞர் சுரதா
C.
மு. மேத்தா
D.
ஈரோடு தமிழன்பன்
Answer:
B.
உவமைக் கவிஞர் சுரதா
18.
'பகுத்தறிவுக் கவிஞர்' என்று புகழப்படுபவர் யார்?
A.
கவியரசர் கண்ணதாசன்
B.
உடுமலை நாராயண கவி
C.
கவிச்சக்கரவர்த்தி கம்பர்
D.
கவிவேந்தர் மு. மேத்தா
Answer:
B.
உடுமலை நாராயண கவி
19.
"வாழ்வினில் செம்மையைச் செய்பவள் நீயே" எனும் தமிழ்த்தாய் வாழ்த்துப்பாடலைப் பாடியவர்
A.
மகாகவி பாரதியார்
B.
கவிஞர் வாணிதாசன்
C.
பாவேந்தர் பாரதிதாசன்
D.
நாமக்கல் கவிஞர் வெ. இராமலிங்கம்
Answer:
C.
பாவேந்தர் பாரதிதாசன்
20.
திருவரங்கத்தில் நாயக்க மன்னர் மற்றும் அவரது பட்டத்தரசியின் உருவங்கள் கம்பீரமாகக் காட்சியளிப்பது
A.
நாற்பது அடி உயரத்தில்
B.
அறுபது அடி உயரத்தில்
C.
ஆறு அடி உயரத்தில்
D.
நான்கு அடி உயரத்தில்
Answer:
D.
நான்கு அடி உயரத்தில்
21.
சரியானவற்றைப் பொருத்துக.
| (a) அக்ஷராப்பியாசம் | 1. தாழை மடல் |
| (b) வித்தியாப்பியாசம் | 2. கல்விப் பயிற்சி |
| (c) வித்தியாரம்பம் | 3. எழுத்துப் பயிற்சி |
| (d) சீதாள பத்திரம் | 4. கல்வித் தொடக்கம் |
A.
2 3 1 4
B.
1 3 4 2
C.
4 1 3 2
D.
3 2 4 1
Answer:
D.
3 2 4 1
22.
"எனக்கு வறுமையும் உண்டு; மனைவி மக்களும் உண்டு; அவற்றோடு மானமும் உண்டு" - என்று கூறிய தமிழறிஞர்
A.
மறைமலையடிகள்
B.
தேவநேயப்பாவாணர்
C.
ம. பொ. சிவஞானம்
D.
பரிதிமாற்கலைஞர்
Answer:
B.
தேவநேயப்பாவாணர்
23.
படைப்பாளன் தன் கருத்துக்களை உணர்ச்சிகளோடு வெளிப்படுத்தும் வடிவம்
A.
நாடகம்
B.
கதை
C.
கவிதை
D.
கட்டுரை
Answer:
C.
கவிதை
24.
தேர்ந்தெடுத்து எழுதுக.
'மக்கள் கவிஞர்' என்றழைக்கப்படுபவர் _________,
'பகுத்தறிவுக் கவிராயர்' என்றழைக்கப்படுவர் _______ முறையே
'மக்கள் கவிஞர்' என்றழைக்கப்படுபவர் _________,
'பகுத்தறிவுக் கவிராயர்' என்றழைக்கப்படுவர் _______ முறையே
A.
வாணிதாசன் - பெருஞ்சித்திரனார்
B.
பாரதியார் - கண்ணதாசன்
C.
ந. பிச்சமூர்த்தி - மு.மேத்தா
D.
பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் - உடுமலை நாராயண கவி
Answer:
D.
பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் - உடுமலை நாராயண கவி
25.
தவறான தொடரைத் தேர்ந்தெடுக்க.
A.
ஆசியாவிலேயே மிகப்பழமையான நூலகம் தஞ்சை சரசுவதி மகால் நூலகமாகும்
B.
இந்தியாவின் முதல் பொது நூலகம் மும்பை நடுவண் நூலகமாகு
C.
உலகளவில் தமிழ் நூல்கள் அதிகம் உள்ள நூலகம் கன்னிமாரா நூலகம்
D.
கொல்கத்தாவின் தேசிய நூலகமே இந்தியாவின் பெரிய நூலகமாகும்
Answer:
B.
இந்தியாவின் முதல் பொது நூலகம் மும்பை நடுவண் நூலகமாகு