1.திராட்சை மற்றும் தக்காளியில் உள்ள அமிலங்கள் ________,_________ ஆகும்.
2.கீழ்க்காண்பவற்றை பொருத்துக:
(a) பெருமூளைப் புறணி 1. உடல் வெப்பநிலையைக் கட்டுப்படுத்துதல்
(b) ஹைப்போதலாமஸ் 2. உணர்வுகளைப் பெறுதல்
(c) சிறுமூளை 3. உறக்க-விழிப்பு சுழற்சி
(d) பான்ஸ் 4. உடல் சமநிலை
3.கீழ்க்காண்பனவற்றை பொருத்துக :
(a) கேனிமீட் - 1.அதன் கோளின் சுழற்சிக்கு எதிர்திசையில் சுற்றும்
(b) டைட்டன் - 2. பச்சை நிற விண்மீன் போன்ற தோற்றம்
(c) நெப்டியூன் - 3. சூரிய மண்டலத்தின் மேகங்களுடன் கூடிய நிலவு
(d) டிரைட்டான்- 4. சூரிய மண்டலத்தின் மிகப் பெரிய நிலவு
4.நகராட்சி நிர்வாகத்தின் முதன்மை நிர்வாக அலுவலர் யார்?
5.வரலாற்றில் சிறந்த சொற்பொழிவுகளில் ஒன்றான, "எனக்கு ஒரு கனவு இருக்கிறது" என்று கூறியது
6.சமக்ரா சிக்ஷா அபியான் திட்டத்தின் நோக்கம்
7."அம்பேத்கர் : ஒரு வாழ்க்கை" என்னும் புத்தகத்தை எழுதியவர் யார்?
8.மதம் மற்றும் வழிப்பாட்டுத் தலங்களைப் பொருத்துக:
மதம் வழிப்பாட்டு தலம்
(a) சமணம் 1. சினகாக்
(b) ஜுடாய்ஸம் 2. அகியாரி
(c) புத்தமதம் 3. பசாதி
(d) ஜொராஸ்டிரியம் 4. விஹாரா
9.கீழ்கண்ட வாக்கியங்களை கவனி (கூற்று மற்றும் காரணம் வகை):
கூற்று (A] : இந்தியாவில் உற்பத்தி செய்யும் திட்டம் 2014-ல் அறிமுகமானது
காரணம் (R] : இதன் முக்கிய நோக்கம் உள்நாட்டு உற்பத்தித் துறையை
ஊக்குவிப்பதும் மற்றும் நாட்டிற்கான முதலீடுகளை அதிகரிப்பதே ஆகும்.
10.கீழ்க்காணும் வாக்கியங்களில் எவை சரியாக இமயமலையுடன் தொடர்புடையது?
(i) சாஸ்கர், லடாக், கைலாஸ் மற்றும் காரகோரம் ஆகிய முக்கியமான
மலைத்தொடர்கள் ட்ரான்ஸ் இமயமலையில் அமைந்துள்ளது.
(ii) சிறிய இமயமலை மற்றும் சிவாலிக் குன்றுகளை ஒப்பிடும்போது இப்பகுதி குறைவான மழையைப் பெறுகின்றது.
(iii) வெளி இமயமலை மிகவும் தொடர்ச்சியான மலைத்தொடராக அமைந்துள்ளது.
11.ஹரப்பர்களால் அறியப்படாத விலங்கு எது?
12.பின்வருவனவற்றை அவற்றின் சரியான பதிலுடன் பொருத்தவும் :
(a) பேஷ்வா - 1.செயலர்
(b) சுர்நாவிஸ் - 2. தலைமை நீதிபதி
(c) நியாயதீஸ் - 3. தலைமை அர்ச்சகர்
(d) பண்டிட் ராவ் - 4. பிரதம அமைச்சர்
13.கீழ்க்காணும் எந்த மாநிலங்கள் பொதுவான உயர்நீதி மன்றத்தைப் பெற்றுள்ளன?
14.எந்த ஆண்டு இந்திய அரசால் முதல் செம்மொழியாக தமிழ் மொழி அறிவிக்கப்பட்டது?
15.மனித உரிமை நாள் கொண்டாடப்படுவது _________ ஆகும்.
16.கீழே கொடுக்கப்பட்டுள்ள குழுக்களை காலவரிசைப்படி எழுதுக:
I. ஜி.வி.கே. ராவ் குழு
II. பல்வந்த்ராய் மேத்தா குழு
III. எல்.எம்.சிங்வி குழு
IV. அசோக் மேத்தா குழு
17.கீழ்க்காணும் வாக்கியங்களில் கட்சி தாவல் தடைச் சட்டத்தைப் பற்றி சரியான கூற்று எது?
(i) 52வது அரசமைப்புச் சட்டத்திருத்தம் 1985, அளித்தது.
(ii) அரசமைப்பில் 9வது அட்டவணையில் இணைக்கப்பட்டது.
(iii) 91வது அரசமைப்புச் சட்டத்திருத்தம் 2003ன் மூலமாக ஓர் சிறு திருத்தம் செய்யப்பட்டது.
18.எந்த தொழிற்கொள்கையானது இந்தியாவில் MRTP 1969 சட்டத்தை ஒழித்தது?
19.உழவர் கடன் அட்டை (KCC) 1998-ல் யாரால் தொடங்கப்பட்டது?
20.கூற்று (A] : மத்தியக்கல்வி அமைச்சகம் (இதற்கு முன் மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் - MHRD) நம் நாட்டின் கல்விக் கொள்கைகளையும்
திட்டங்களையும் வகுத்து நடைமுறைப்படுத்தி வருகிறது.
காரணம் [R] : மத்தியக் கல்வி அமைச்சகம் கல்விக்கான வரவு செலவு திட்டத்தை முடிவு செய்கிறது.
21.சுதேசி நீராவிக் கப்பல் கம்பெனியின் ஆரம்ப மொத்த முதலீட்டு தொகை
22._________ புரட்சிகர நடவடிக்கைகளுக்காக ராம்பிரசாத் பிஸ்மில் மற்றும் அஷ்ஃபாகுல்லா கானும் கைது செய்யப்பட்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.
23.அலிப்பூர் குண்டு வெடிப்பு வழக்கில் புரட்சிகர தேசியவாதிகளுக்காக வாதாடியவர் யார்?
24.தன்னலமற்ற சேவைக்காக ராவ் சாகிப் (1926), ராவ் பகதூர் (1930), திவான் பகதூர் (1936) ஆகிய பட்டங்களைப் பெற்றவர் யார்?
25.அகத்தின் இருளைப் போக்கும் விளக்காக வள்ளுவர் எதனைக் கூறுகின்றார்?