GK Tamil
Home TNPSC Quiz History Geography Science Indian Polity Sports Contact

TNPSC Group 4 2024 – General Tamil Questions 51 to 75

1. "தமிழ்ப் பதிப்புலகின் தலைமகன்" என்று போற்றப்படுபவர்.

  • A. சச்சிதானந்தன்
  • B. ஆறுமுகநாவலர்
  • C. சி.வை. தாமோதரனார்
  • D. உ.வே.சாமிநாதர்
Answer: C. சி.வை. தாமோதரனார்

2. கூற்று 1: மாநகராட்சிக் கூட்டத்திற்குத் தலைமை வகித்தவர் இராஜாஜி.
கூற்று 2: அக்கூட்டத்தில் "தலையைக் கொடுத்தேனும் தலைநகரைக் காப்போம்" என்று ம.பொ.சி . முழங்கினார்

  • A. கூற்று 1 மட்டும் சரி
  • B. கூற்று 2 மட்டும் சரி
  • C. கூற்று 1ம் கூற்று 2ம் சரி
  • D. இரு கூற்றுகளும் தவறு
Answer: B. கூற்று 2 மட்டும் சரி

3. திருச்சிராப்பள்ளிக்கு அருகில் அமைந்துள்ள அல்லூரில் "திருவள்ளுவர் தவச்சாலையை" அமைத்தவர்

  • A. தேவநேயப்பாவாணர்
  • B. இரா. இளங்குமரனார்
  • C. ம. பொ. சிவஞானம்
  • D. காயிதே மில்லத்
Answer: B. இரா. இளங்குமரனார்

4. இராசராச சோழனுக்கு கோயில் கட்டவேண்டுமென்ற ஆர்வத்தைத் தூண்டிய கோயில் எது?

  • A. இராமேஸ்வரம் கோயில்
  • B. பல்லவ குடைவரைக் கோயில்
  • C. மதுரை மீனாட்சி கோயில்
  • D. இராசசிம்மேச்சுரம் கோயில்
Answer: D. இராசசிம்மேச்சுரம் கோயில்

5. குந்தி தின்றால் குன்றும் கரையும் என்னும் பழமொழி உணர்த்தும் பொருளை எழுது.

  • A. பயனற்ற சொல்
  • B. உழைக்காதவன் செல்வம் அழியும்
  • C. எளிதில் மனதில் பதித்தல்
  • D. தற்செயல் நிகழ்வு
Answer: B. உழைக்காதவன் செல்வம் அழியும்

6. அகர வரிசைப்படுத்துக.
இசைக் கருவிகளின் பெயர்களை அகர வரிசைப்படுத்துக.
படகம், தவில், கணப்பறை, உடுக்கை, நாகசுரம், மகுடி

  • A. தவில், படகம், கணப்பறை, நாகசுரம், மகுடி, உடுக்கை
  • B. உடுக்கை, கணப்பறை, தவில், நாகசுரம், படகம், மகுடி
  • C. படகம், உடுக்கை, மகுடி, நாகசுரம், கணப்பறை, தவில்
  • D. நாகசுரம், கணப்பறை,உடுக்கை, தவில்,மகுடி, படகம்
Answer: B. உடுக்கை, கணப்பறை, தவில், நாகசுரம், படகம், மகுடி

7. "மனக்குரங்கு" என்னும் சொல்லிற்கு இலக்கணக் குறிப்புத் தருக.

  • A. உருவகம்
  • B. வினையெச்சம்
  • C. உவமைத்தொகை
  • D. உரிச்சொற்றொடர்
Answer: A. உருவகம்

8. பொருந்தாச் சொல்லைக் கண்டறிக.

  • A. கடல்
  • B. ஆழி
  • C. பரவை
  • D. ஆறு
Answer: D. ஆறு

9. பிழை திருத்தம் செய்க.

  • A. மயில் அலறும் குயில் கூவும் ஆந்தை அகவும்
  • B. மயில் அகவும் குயில் அலறும் ஆந்தை கூவும்
  • C. மயில் அகவும் குயில் கூவும் ஆந்தை அலறும்
  • D. மயில் கூவும் குயில் அலறும் ஆந்தை அகவும்
Answer: C. மயில் அகவும் குயில் கூவும் ஆந்தை அலறும்

10. பிழை திருத்தம் செய்க.

  • A. வாழைப்பழத் தோல் சறுக்கி ஏழைக் கிழவன் வியாழக்கிழமை கீழே விழுந்தான்
  • B. வாழைப்பழ தோல் சறுக்கி ஏழை கிழவன் வியாழக்கிழமை கீழே விழுந்தான்
  • C. வாழைப்பழத் தோல் சறுக்கி ஏழைக் கிழவன் வியாழக்கிழமைக் கீழே விழுந்தான்
  • D. வாழைப்பழத் தோல் சருக்கி ஏழைக் கிழவன் வியாழக்கிழமைக் கீழே விழுந்தான்
Answer: A. வாழைப்பழத் தோல் சறுக்கி ஏழைக் கிழவன் வியாழக்கிழமை கீழே விழுந்தான்

11. பிறவினைச் சொற்களைக் கண்டறிக.

  • A. நனைந்தான், படித்தான்
  • B. திருத்தினான், நனைந்தான்
  • C. வருவித்தான், திருத்தினான்
  • D. படித்தான்,வருவித்தான்
Answer: C. வருவித்தான், திருத்தினான்

12. பின்வரும் தொடரைக் கண்டறிக.
‘பூங்குழலி யாழ் மீட்டினாள்'

  • A. எதிர்மறைத் தொடர்
  • B. செய்வினைத் தொடர்
  • C. செயப்பாட்டு வினைத் தொடர்
  • D. விழைவுத் தொடர்
Answer: B. செய்வினைத் தொடர்

13. விடைக்கேற்ற வினா அமைத்தல்.
வணிக அறிவியல் முதலீட்டைப் பெருக்குவதற்காகப் பொருள்களைக் கண்டுபிடிக்கிறது.

  • A. வணிக அறிவியல் என்றால் என்ன?
  • B. எத்தகைய முதலீட்டைப் பெருக்குவதற்காகப் பொருள்களைக் கண்டுபிடிக்கிறது?
  • C. வணிக அறிவியல் முதலீட்டைப் பெறுவதற்கு பொருள்களை கண்டுபிடிக்கிறதா?
  • D. எந்த முதலீட்டை பெருக்க வேண்டும்?
Answer: B. எத்தகைய முதலீட்டைப் பெருக்குவதற்காகப் பொருள்களைக் கண்டுபிடிக்கிறது?

14. அகர வரிசைப்படுத்துக.
கேள்வர், பொளிக்கும், நசைஇ, போத்து, மஞ்ஞை, நல்குவர், சாவகர்

  • A. கேள்வர், சாவகர், நல்குவர், நசைஇ, பொளிக்கும், மஞ்ஞை, போத்து
  • B. சாவகர், நசைஇ, நல்குவர், கேள்வர், பொளிக்கும், மஞ்ஞை, போத்து
  • C. கேள்வர், சாவகர், நசைஇ, நல்குவர், பொளிக்கும், போத்து, மஞ்ஞை
  • D. கேள்வர், சாவகர், நல்குவர், நசைஇ, பொளிக்கும், போத்து, மஞ்ஞை
Answer: C. கேள்வர், சாவகர், நசைஇ, நல்குவர், பொளிக்கும், போத்து, மஞ்ஞை

15. தா என்ற வேர்ச்சொல்லின் வினையாலணையும் பெயர்.

  • A. தந்து
  • B. தந்த
  • C. தந்தது
  • D. தந்தவர்
Answer: D. தந்தவர்

16. வேர்ச்சொல்லை தேர்வு செய்க.
மலர் வீட்டுக்குச் சென்றாள்.

  • A. சென்ற
  • B. செல்ல
  • C. செல்
  • D. சென்று
Answer: C. செல்

17. ஒலி வேறுபாடறிந்து சரியான பொருளை அறிதல்.
சூல், சூழ்,சூள்

  • A. கருப்பம், சுற்று, சபதம்
  • B. சபதம், சுவர், தானியம்
  • C. ஆலோசனை, ஆணை, வாயில்
  • D. ஆணை,முற்றுகையிடு, சருமம்
Answer: A. கருப்பம், சுற்று, சபதம்

18. பிழையற்ற தொடரைக் கண்டறிக.

  • A. எங்களூரில் புலவர் ஒருவர் வாழ்ந்தார்
  • B. எங்களூரில் புலவர் இருவர் வாழ்ந்தது
  • C. எங்களூரில் பல புலவர்கள் வாழ்ந்தார்
  • D. எங்களூரில் புலவர்கள் வாழ்ந்தாள்
Answer: D. எங்களூரில் புலவர்கள் வாழ்ந்தாள்

19. கீழ்க்காணும் சொல்வழக்கினை வரிசைப்படுத்துக.
(I) நாகரிகம் கருதி மறைமுகமாகக் குறிப்பிடுதல் இடக்கரடக்கல்
(II) மங்கலமான சொற்களை மாற்றி மங்கலம் இல்லாச் சொற்களால் குறிப்பிடுதல் மங்கலம்
(III) ஒரு சொல்லுக்கு மாற்றாக வேறு சொல்லைப் பயன்படுத்தும் முறையே இடக்கரடக்கல், மங்கலம் ஆகியனவாகும்

  • A. (I) சரி (II) சரி (III) தவறு
  • B. (I) சரி (II) தவறு (III) சரி
  • C. (I) சரி (II) தவறு (III) தவறு
  • D. (I) தவறு (II) சரி (III) சரி
Answer: B. (I) சரி (II) தவறு (III) சரி

20. வெண்பா-வுக்குரிய ஓசை

  • A. துள்ளல்
  • B. தூங்கல்
  • C. அகவல்
  • D. செப்பல்
Answer: D. செப்பல்

21. பொருத்தமான பொருளைத் தேர்வு செய்தல்.
(a) முல்லைப்பாட்டு 1. கண்ணதாசன்
(b) காசிக்காண்டம் 2. இளங்கோவடிகள்
(c) சிலப்பதிகாரம் 3. நப்பூதனார்
(d) காலக்கணிதம் 4. அதிவீரராமப்பாண்டியர்

  • A. 1 2 3 4
  • B. 3 4 2 1
  • C. 2 4 3 1
  • D. 2 3 1 4
Answer: B. 3 4 2 1

22. ஐ - எனும் ஓரெழுத்து ஒரு மொழியின் பொருள்

  • A. அரசன்
  • B. வீரன்
  • C. ஒற்றன்
  • D. தலைவன்
Answer: D. தலைவன்

23. Fiction என்னும் சொல்லின் தமிழ்ச்சொல்

  • A. வனைவு
  • B. புனைவு
  • C. புதுமை
  • D. வளைவு
Answer: B. புனைவு

24. "கத்துங் குயிலோசை - சற்றே வந்து
காதிற் படவேணும்" - பாரதியார்.
இத்தொடரில் இடம்பெற்றுள்ள வழுவமைதியைக் குறிப்பிடுக.

  • A. திணை வழுவமைதி
  • B. பால் வழுவமைதி
  • C. மரபு வழுவமைதி
  • D. இட வழுவமைதி
Answer: C. மரபு வழுவமைதி

25. மணிமொழிக்கோவை - அடைமொழியால் குறிக்கப்படும் நூல்கள்.

  • A. நான்மணிக்கடிகை, முதுமொழிக்காஞ்சி, ஆசாரக்கோவை
  • B. இன்னா நாற்பது, இனியவை நாற்பது, களவழி நாற்பது
  • C. இன்னா நாற்பது, நாலடியார், நான்மணிக்கடிகை
  • D. பழமொழி, ஏலாதி, ஆசாரக்கோவை
Answer: A. நான்மணிக்கடிகை, முதுமொழிக்காஞ்சி, ஆசாரக்கோவை

26. பதினெண் என்றால்

  • A. 18
  • B. 20
  • C. 11
  • D. 17
Answer: A. 18
;