GK Tamil
Home TNPSC Thirukkural Quiz History Geography Science Indian Polity Sports Contact

TNPSC Group 1 2022 Preliminary Examination

Aptitude Questions 1 to 26

1.  கொடுக்கப்பட்ட படத்தில் விடுபட்ட எண்ணின் மதிப்பை காண்க. உள் வட்டத்துடன் பல பகுதிகளாகப் பிரிக்கப்பட்ட வட்ட வடிவ எண் புதிர்
Answer: C.   216
2.  0.15, 0.015, 0.0015,... என்ற பெருக்கு தொடர் வரிசையின் பொதுவிகிதம் காண்க.
Answer: A.   0.1
3.  கூடுதல் காண்க: \(1^2+2^2+\cdots+19^2\)
Answer: C.   2470
4.  'A' ஒரு வேலைணய 18 நாட்களில் முடிக்கிறார். 'B' அதே வேலையை முடிக்க 'A' எடுக்கும் நாட்களில் பாதியை எடுக்கிறார் எனில் இருவரும் சேர்ந்து ஒரு நாளில் முடிக்கும் வேலையின் அளவு என்ன?
Answer: B.   \(\dfrac{1}{6}\)
5.  உலோகத்தால் ஆன ஒரு கனச்சதுரத்தின் பக்க அளவு 12 செ.மீ. அதனை உருக்கி 18 செ.மீ. நீளம் மற்றும் 16 செ.மீ. அகலமும் உள்ள ஒரு கனச்செவ்வகம் உருவாக்கப்படுகிறது. அந்த கனச் செவ்வகத்தின் உயரத்தைக் காண்க.
Answer: A.   6 செ.மீ.
6.  20%, ஆண்டு வட்டியில் காலாண்டுக்கு ஒருமுறை வட்டி கணக்கிடப்படும் முறையில் ₹ 16,000-க்கு 9 மாதங்களுக்கு கிடைக்கும் கூட்டு வட்டியானது.
Answer: C.   2,522
7.  அசல் ₹ 10,000 ஆனது, ஆண்டுக்கு 10% வட்டி வீதத்தில், எத்தனை ஆண்டுகளில் ₹ 2,000 வட்டியைப் பெற்றுத் தரும்?
Answer: A.   2 ஆண்டுகள்
8.  ஒரு மகிழுந்து 90 கி.மீ தூரத்தை 2 மணி 30 நிமிடங்களில் கடக்கும். அதே வேகத்தில் 210 கி. மீட்டரைக் கடக்க ஆகும் நேரம்
Answer: A.   5 மணி 50 நிமிடங்கள்
9.  இரண்டு நேர் வட்ட உருளைகளின் ஆரங்களின் விகிதம் 3 : 2 என்க. மேலும் அவற்றின் உயரங்களின் விகிதம் 5 : 3 எனில் அவற்றின் வளைபரப்புகளின் விகிதம்
Answer: A.   5 : 2
10.  \(x^4+3x^3+5x^2+26x+56\) மற்றும் \(x^4+2x^3-4x^2-x+28\) என்ற பல்லுறுப்புக் கோவைகளின் மீ.பொ.வ. \(x^2+5x+7\) எனில் அவற்றின் மீ.பொ.ம.-ன் மதிப்பு ____________ ஆகும்.
Answer: C.   \((x^2-2x+8)(x^4+2x^3-4x^2-x+28)\)
11.  பின்வருவனவற்றுள் எந்த ஒரு சோடி எண்கள் சார்பகா எண்கள்?
Answer: B.   (18, 25)
12.  தேயிலையின் விலை 20% அதிகரிக்கும்போது தேயிலை பயன்பாட்டின் செலவு மாறாமல் இருக்க தேயிலை பயன்பாட்டினை எத்தனை சதவீதம் குறைத்துக்கொள்ள வேண்டும்?
Answer: B.   \(16\dfrac{2}{3}\%\)
13.  அகிலா ஒரு தேர்வில் 80% மதிப்பெண்களைப் பெற்றாள். அவள் பெற்றது 576 மதிப்பெண்கள். அந்த தேர்வின் மொத்த மதிப்பெண்களைக் காண்க.
Answer: C.   720
14.  ZEBRA வை 2652181 என எழுதலாம் என்றால் COBRA எப்படி எழுதப்படும்?
Answer: B.   3152181
15.  விடுபட்ட எண்ணை காண்க.

1 2 3
4 5 6
7 8 9
27 38 ?
Answer: C.   51
16.  கனசதுரத்தின் நான்கு வரைபடங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன. எந்த எண் 3 இன் எதிர்ப்பக்கமாக இருக்க முடியும். கனசதுரத்தின் நான்கு தோற்றங்களைப் பயன்படுத்தி 3-க்கு எதிரே உள்ள முகத்தை கண்டறியும் புதிர்
Answer: C.   4
17.  C4X, F9U, I16R என்ற எண்ணெழுத்து தொடரில் அடுத்த உறுப்பு
Answer: C.   L25O
18.  180 மீ நீளமுள்ள ஒரு பாயினை 15 பெண்கள் 12 நாட்களில் செய்தனர். 512 மீ நீளமுள்ள ஒரு பாயினை 32 பெண்கள் செய்ய எத்தனை நாட்கள் ஆகும்?
Answer: C.   16 நாட்கள்
19.  180 செ.மீ. சுற்றளவு கொண்ட ஒரு சமபக்க முக்கோணத்தின் பரப்பு காண்க.
Answer: A.   1558.8 செ.மீ.\(^{2}\)
20.  I, II மற்றும் III ஆண்டுகளுக்கான வட்டி வீதங்கள் முறையே 15%, 20% மற்றும் 25% எனில் ₹ 15,000-க்கு 3 ஆண்டுக்கு கிடைக்கும் வட்டி காண்க.
Answer: A.   10,875
21.  ஒரு ஆப்பிள் (Apple) விலை ₹ 60, ஒரு கொய்யா (Guava) விலை ₹ 90 மற்றும் ஒரு மாம்பழம் (Mango) விலை ₹ 60. ஒரு மாதுளை (pomegranate) விலை எவ்வளவு?
Answer: D.   ₹ 150
22.  அசல் ₹ 6,000-க்கு, 5 ஆண்டுகளில் 4% வட்டி வீதத்தில் கிடைக்கும் தனிவட்டியும், அசல் ₹ 8,000-க்கு 3% வட்டி வீதத்தில் கிடைக்கும் தனி வட்டியும் சமமாக இருக்கும் எனில், அதன் ஆண்டுகள் எவ்வளவாக இருக்கும்?
Answer: A.   5 ஆண்டுகள்
23.  A : B = 2 : 3, B : C = 2 : 4, C : D = 2 : 5 எனில் A : D-க்கு சமமான விகிதம்
Answer: D.   2 : 15
24.  கொடுக்கப்பட்ட இரு எண்களின் மீச்சிறு பொது மடங்கின் மதிப்பானது, அவ்விரு எண்களின் மீப்பெரு பொதுக் காரணியின் மதிப்பை விட, 6 மடங்கு அதிகமாகும். மேலும் அவ்விரு எண்களின் மீப்பெரு பொது காரணியின் மதிப்பு 12 மற்றும் அவ்விரு எண்களில், ஒரு எண்ணானது 36 எனில், மற்றொரு எண்ணின் மதிப்பு
Answer: C.   24
25.  \(6x^4-30x^3+60x^2-48x\) மற்றும் \(3x^3-12x^2+21x-18\) ஆகிய பல்லுறுப்புக் கோவைகளின் மீ.பொ.வ. காண்க.
Answer: C.   \(3(x-2)\)
26.  சுருக்குக : 100 + 8 ÷ 2 + {(3 × 2) - 6 ÷ 2}
Answer: B.   107
;