GK Tamil
Home TNPSC Thirukkural Quiz History Geography Science Indian Polity Sports Contact

TNPSC Group 4 2014

General Studies Questions 1 to 25

1.  லென்ஸ் ஒன்றின் திறன் -0.5 டையாப்டர் எனில் அதன் குவியத் தூரம் மற்றும் வகை என்ன?
Answer: A.   2 மீ, குழி
2.  வேறுப்பட்டு இருப்பதை கண்டுபிடி:

வெப்பத்துடன் சம்பந்தப்பட்டது ஒரு செயலில்
Answer: C.   உட்கவர்தல்
3.  கீழ்க்கண்டவற்றை பொருத்துக:
(a) பொட்டாசியம் குளோரேட் 1. மலச்சிக்கலைத் தீர்க்க
(b) எப்சம் உப்பு 2. தீப்பெட்டி தொழிற்சாலைகளில்
(c) காப்பர் சல்பேட் உப்பு 3. பட்டாசு
(d) பொட்டாசியம் நைட்ரேட் 4. பூஞ்சைக் கொல்லியாக
Answer: C.   2 1 4 3
4.  சரியான கூற்றை தேர்வு செய்க:
I. அண்ட அணு வெளியேற்றத்திற்கு பிறகு கிராஃபியன் பாலிகிள்கள் உடைந்து கார்பஸ் லூட்டியமாக மாறுகிறது.
II. கார்பஸ் லூட்டியம் ஒரு நாளமில்லாச் சுரப்பியாக மாறுகிறது.
Answer: D.   I மற்றும் II சரி
5.  சூடோமோனாஸ் எனும் மரபுப் பொறியியல் மூலம் உருவாக்கப்பட்ட பாக்டீரியாவை கண்டறிந்தவர்
Answer: D.   Dr. ஆனந்த மோகன் சக்ரபர்த்தி
6.  பின்வருவனவற்றுள் தவறான கூற்று/கூற்றுகளை குறிப்பிடுக:
(i) தனக்கு தேவையான உணவைத் தானே தயாரித்துக் கொள்பவை தற்சார்பு உயிரிகள்
(ii) தனக்கு தேவையான உணவை தானே தயாரிக்க முடியாதவை பிறசார்பு உயிரிகள்
(iii) தனக்கு தேவையான உணவை தானே தயாரிக்க முடியாதவை தற்சார்பு உயிரிகள்
(iv) தனக்கு தேவையான உணவை தானே தயாரித்து கொள்பவை பிறசார்பு உயிரிகள்
Answer: D.   (iii) and (iv)
7.  எயிட்ஸ் வைரஸ் எந்த ஜினோமால் ஆனது?
Answer: B.   RNA
8.  உள்ளாட்சித் தேர்தல்களை எந்த அமைப்பு நடத்துகிறது?
Answer: A.   மாநிலத் தேர்தல் ஆணையம்
9.  எந்த இந்திய பிரதமரின் காலத்தில் தொங்கும் பாராளுமன்றம் ஏற்பட்டது?
Answer: C.   ஐ.கே.குஜ்ரால்
10.  பத்தாவது ஐந்தாண்டு திட்டகாலம்
Answer: A.   2002-2007
11.  இந்திய அரசியலமைப்பின் ____________ சட்டப் பிரிவின்படி எவரையும் விசாரணை இன்றி கைது செய்யக் கூடாது.
Answer: A.   விதி 22
12.  அடிப்படை உரிமைகள் இந்திய அரசியலமைப்பில் சேர்க்கப்பட்டுள்ள பகுதி
Answer: B.   பகுதி III
13.  'உலக வரலாற்றின் சுருக்கங்கள்' என்ற நூலை எழுதியவர்
Answer: C.   ஜவஹர்லால் நேரு
14.  42-வது சட்டதிருத்தம் நடைமுறைக்கு வந்த ஆண்டு
Answer: B.   1976
15.  நம் நாட்டில் அனைவருக்கும் சமச்சீர் கல்வி கொள்கை அறிமுகப்படுத்தப்பட்ட ஆண்டு
Answer: B.   1968
16.  எப்.இ.ஆர்.எ. என்பது ____________ பரிவர்த்தனை (பரிமாற்றம்) முறைப்படுத்தப்பட்ட சட்டம்.
Answer: A.   அயல்நாட்டு
17.  இந்தியாவில் முதலாம் ஐந்தாண்டுத் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்ட ஆண்டு
Answer: B.   1951
18.  கீழ்கொடுக்கப்பட்டவைகளில் சரியான விடையை எழுது:
I. கார்படை மேகங்களானது செங்குத்தான மேகங்களாகும்
II. கார்படை மேகங்களானது உயர் மேகங்களாகும்
III. கார்படை மேகங்களானது தாழ் மேகங்களாகும்
IV. கார்படை மேகங்களானது வெடித்த பருத்தியை போன்றது.
Answer: A.   I மட்டும்
19.  மக்கட்தொகை சீரற்று பரவிக் கிடக்க முக்கிய இரு காரணிகள்
Answer: C.   நிலத்தோற்றம், காலநிலை
20.  சரியான விடையை தேர்ந்தெடு:
I. மனிதர்கள் அதிக உற்பத்திக்காகப் பயன்படுத்தும் உர வகைகள் நீரில் அடித்து செல்லப்பட்டு நீர் நிலைகளைச் சென்றடைவதை "மிகையூட்டவளமுறுதல்" என்கிறோம்
II. மாசடைந்த நீர், நீர்நில சூழ்த் தொகுதியை பாதிக்கிறது
III. தேவையற்ற சப்தம் மனிதர்களது ஆரோக்கியம் மற்றும் மனநிலையைப் பாதிக்காது
Answer: C.   I மற்றும் II
21.  "இந்தியக் கிளி" என அழைக்கப்பட்ட கவிஞர் ____________ ஆவார்.
Answer: C.   அமிர்குஸ்ரு
22.  சிவாஜி பிறந்தது
Answer: C.   ஷிவ்னேர்
23.  மொழி என்பது ____________
Answer: C.   இணைப்புக்கருவி
24.  பின்வருவனவற்றுள் எது சரியாகப் பொருந்தியுள்ளது?
I. குடவோலை முறை - சேரர்
II. வாரியபெருமக்கள் - பாண்டியர்
III. வாரிபொத்தகம் - சோழர்
IV. பூமிபுத்திரர் - களப்பிரர்
Answer: C.   III
25.  பின்வருவனவற்றுள் எது சரியாக பொருந்தியுள்ளது?
Answer: C.   சுயராஜ்ஜிய கட்சி - C.R. தாஸ், மோதிலால் நேரு
;