GK Tamil
Home TNPSC Quiz History Geography Science Indian Polity Sports Contact

TNPSC Group 4 2014

Aptitude Questions 1 to 25

1.  பின்வரும் படத்தில் 'x' ன் மதிப்பைக் காண். 'x' கோணத்தின் மதிப்பைக் காணும் வடிவியல் வரைபடம்
A.   30°
B.   60°
C.   90°
D.   45°
Answer: A.  30°
2.  ஓர் இணைகரத்தின் பரப்பு 300 ச.செ.மீ மற்றும் அடிப்பக்கம் 15 செ.மீ எனில் உயரம்
A.   10 செ.மீ
B.   15 செ.மீ
C.   20 செ.மீ
D.   30 செ.மீ
Answer: C.  20 செ.மீ
3.  ராமின் வயது அவரது மகள் நந்தினியின் வயதை போல் 7 மடங்கு. 5 வருடங்களுக்குப் பிறகு ராமின் வயது மகளின் வயதை போல் 5 மடங்கு எனில் அவர்களின் தற்போதைய வயதுகள் என்ன?
A.   5, 35
B.   6, 42
C.   9, 63
D.   10, 70
Answer: D.  10, 70
4.  \(\dfrac{a}{b} = \dfrac{4}{3}\) எனில் \(\dfrac{6a + 4b}{6a - 5b}\) ன் மதிப்பு காண்க
A.   -1
B.   3
C.   4
D.   5
Answer: C.  4
5.  விடுபட்ட எண்ணைக் காண்க '?' மூன்று வட்ட எண் புதிர் வரைபடம்
A.   10
B.   11
C.   13
D.   14
Answer: D.  14
6.  சுருக்குக:

\(\sqrt{214 + \sqrt{112 + \sqrt{74 + \sqrt{49}}}}\)
A.   15
B.   18
C.   25
D.   17
Answer: A.  15
7.  A-க்கு B-ஐப் போல் 2 மடங்கும் Bக்கு Cஐப் போல் 2 மடங்கும் கிடைக்கும்படி ரூ. 700-ஐ பிரித்தால் அவர்கள் பெறும் தொகை எவ்வளவு?
A.   ரூ. 100, ரூ. 200, ரூ. 400
B.   ரூ. 200, ரூ. 300, ரூ. 200
C.   ரூ. 300, ரூ. 200, ரூ. 200
D.   ரூ. 400, ரூ. 200, ரூ. 100
Answer: D.  ரூ. 400, ரூ. 200, ரூ. 100
8.  ஒரு கூம்பு, அரைகோளம் மற்றும் உருளை ஆகியவை சம அடிப்பரப்பினைக் கொண்டுள்ளது. கூம்பின் உயரம் உருளையின் உயரத்திற்கு சமமாகவும், மேலும் இவ்உயரம் அவற்றின் ஆரத்திற்கு சமமாகவும் இருந்தால் இம்மூன்றின் கனஅளவுகளுக்கிடையே உள்ள விகிதம் காண்க.
A.   2 : 3 : 4
B.   1 : 2 : 3
C.   2 : 1 : 3
D.   3 : 2 : 5
Answer: B.  1 : 2 : 3
9.  \(x - y = -6;\; xy = 4;\) எனில் \(x^3 - y^3\) -ன் மதிப்பு காண்க
A.   -288
B.   -388
C.   -268
D.   -278
Answer: A.  -288
10.  ஒரு தொட்டியை இரு குழாய்கள் தனித்தனியே முறையே 30 நிமிடங்கள், 40 நிமிடங்களில் நிரப்புகிறது. மற்றொரு குழாய் நீர் நிரம்பிய தொட்டியை 24 நிமிடங்களில் காலி செய்யும். தொட்டி காலியாக இருந்து இம்மூன்று குழாய்களும் ஒரே சமயத்தில் திறந்து விடப்பட்டால் அத்தொட்டி எத்தனை நிமிடங்களில் நிரம்பும்?
A.   \(1\dfrac{1}{2}\) மணி நேரம்
B.   இரண்டு மணி நேரம்
C.   ஒரு மணி நேரம்
D.   \(2\dfrac{1}{2}\) மணி நேரம்
Answer: C.  ஒரு மணி நேரம்
11.  1.75 ஆரம் கொண்ட ஒரு சக்கரம் உடைய ஒரு வண்டி 11 கி.மீ தூரத்தை கடக்க எத்தனை சுற்றுகள் சுற்ற வேண்டும்?
A.   10
B.   100
C.   1000
D.   10000
Answer: C.  1000
12.  ஒருவரின் மாத செலவுகள் படத்தில் காட்டப்பட்டுள்ளது. அவரின் சேமிப்பு எவ்வளவு எனக் காண்க. ஒருவரின் மாதச் செலவுகள் மற்றும் சேமிப்பைக் காட்டும் வட்ட விளக்கப்படம்
A.   Rs. 800
B.   Rs. 900
C.   Rs. 1,000
D.   Rs. 750
Answer: D.  Rs. 750
13.  '?' குறியிட்ட இடத்தில் வரும் எண்ணைக் காண்க எண் கட்டப் புதிர்
A.   18
B.   19
C.   20
D.   21
Answer: B.  19
14.  20-க்கும் 30– க்கும் இடையில் உள்ள பகா எண்கள் எத்தனை?
A.   1
B.   2
C.   3
D.   4
Answer: B.  2
15.  ΔABC -ன் பரப்பு 68 ச. அலகு A(6, 7), B(-4, 1) மற்றும் C(a, - 9) வரிசைப்படி கொடுக்கப்பட்டுள்ளது எனில் a-ன் மதிப்பு என்ன?
A.   -2
B.   3
C.   5
D.   2
Answer: D.  2
16.  \(x,\; x + 2,\; x + 4,\; x + 6,\; x + 8\) என்ற எண்களின் சராசரி 20 எனில் \(x\)ன் மதிப்பு காண்க
A.   32
B.   16
C.   8
D.   4
Answer: B.  16
17.  ஒரு நபர் ஒரு காரை ரூ. 1,40,000க்கு விற்பனை செய்வதன் மூலம் 20% நட்டம் அடைகிறார் எனில் அதன் அடக்கவிலை.
A.   ரூ. 1,50,000
B.   ரூ. 1,25,000
C.   ரூ. 2,00,000
D.   ரூ. 1,75,000
Answer: D.  ரூ. 1,75,000
18.  படத்தில் \(\angle B : \angle C = 2 : 3\) எனில் \(\angle B\) காண்க. முக்கோண வெளிக்கோண வரைபடம்
A.   120°
B.   52°
C.   78°
D.   130°
Answer: B.  52°
19.  \(9x - y - 2 = 0,\; 2x + y - 9 = 0\) என்ற நேர்கோடுகள் வெட்டும் புள்ளி காண்க.
A.   (-1, 7)
B.   (7, 1)
C.   (1, 7)
D.   (-1, -7)
Answer: C.  (1, 7)
20.  ஓர் உணவு மேசையின் அடக்கவிலை ரூ. 8,400. A இம்மேசையை 10 மாதத்தவணைகளில் பெற நினைக்கிறார். அவரது மாதத் தவணை ரூ. 875 எனில் வட்டி வீதம் என்ன?
A.   3%
B.   5%
C.   8%
D.   10%
Answer: B.  5%
21.  \((x + m)(x + n) = x^2 + 6x + 5\) எனில் \(m^2 + n^2\) -ன் மதிப்பானது
A.   25
B.   26
C.   27
D.   28
Answer: B.  26
22.  இரண்டு எண்களின் வித்தியாசம் 5. அவற்றின் பெருக்கற்பலன் 336, அந்த இரண்டு எண்களின் கூடுதல்
A.   21
B.   28
C.   37
D.   51
Answer: C.  37
23.  விடுபட்ட எண்ணைக் காண்க. சதுர எண் புதிர்
A.   136
B.   156
C.   176
D.   189
Answer: D.  189
24.  ரூபாய் 6,750க்கு 219 நாட்களுக்கு 10% வட்டிவீதம் தனிவட்டி காண்க.
A.   205
B.   305
C.   405
D.   415
Answer: C.  405
25.  மூன்று எண்களின் விகிதம் 3:4:5 அவ்வெண்களின் மீ.சி.ம. 2400 எனில் அவ்வெண்களின் மீ.பொ.வ
A.   40
B.   80
C.   120
D.   200
Answer: A.  40
;