TNPSC Group 4 2014
General Tamil Questions 26 to 50
1.
'தமிழுக்குத் தொண்டு செய்வோன் சாவதில்லை' யார் கூற்று?
A.
பாரதியார்
B.
பாரதிதாசன்
C.
கண்ணதாசன்
D.
முடியரசன்
Answer:
B.
பாரதிதாசன்
2.
கூடுகட்டி வாழும் பாம்பு எது?
A.
நல்ல பாம்பு
B.
இராஜ நாகம்
C.
பச்சைப் பாம்பு
D.
எதுவுமில்லை
Answer:
B.
இராஜ நாகம்
3.
மணிமேகலையில் விருச்சிக முனிவரால் பசிநோய் சாபம் பெற்றவள் யார்?
A.
சுதமதி
B.
மணிமேகலை
C.
ஆதிரை
D.
காயசண்டிகை
Answer:
D.
காயசண்டிகை
4.
'தென்னிந்தியாவின் ஏதென்ஸ்' என்னும் புகழ்மிக்க நகரம்
A.
மதுரை
B.
ஊட்டி
C.
கொடைக்கானல்
D.
ஏற்காடு
Answer:
A.
மதுரை
5.
‘சதகம்' என்பது ____________ பாடல்களைக் கொண்ட நூலைக் குறிக்கும்
A.
ஐம்பது
B.
நூறு
C.
ஆயிரம்
D.
பத்தாயிரம்
Answer:
B.
நூறு
6.
“கண்டனென் கற்பினுக் கணியைக் கண்களால்...”
-இவ் அடி மூலம் அனுமன் பெற்ற புகழ்ப்பெயர்
-இவ் அடி மூலம் அனுமன் பெற்ற புகழ்ப்பெயர்
A.
சொல்லின் நாயகன்
B.
சொல்லின் தலைவன்
C.
சொல்லின் புலவன்
D.
சொல்லின் செல்வன்
Answer:
D.
சொல்லின் செல்வன்
7.
'சிங்கங்களே! எழுந்து வாருங்கள். நீங்கள் செம்மறி ஆடுகள் என்ற மயக்கத்தை உதறித் தள்ளுங்கள்' எனக் கூறியவர்?–
A.
பாரதிதாசன்
B.
விவேகானந்தர்
C.
சுபாஷ் சந்திர போஸ்
D.
திலகர்
Answer:
B.
விவேகானந்தர்
8.
'சொல்லாதன இல்லை பொதுமறையான திருக்குறளில்' - இவ்வடியைப் பாடியவர்
A.
பாரதியார்
B.
பாரதிதாசன்
C.
கவிமணி
D.
சுரதா
Answer:
B.
பாரதிதாசன்
9.
பொருத்தமான விடையை எழுதுக : 'துன்பத்தையும் நகைச்சுவையோடு சொல்வதில் வல்லவர்' -
A.
அந்தகக் கவி
B.
இராமச்சந்திர கவிராயர்
C.
திருவள்ளுவர்
D.
உடுமலை நாராயணக் கவி
Answer:
B.
இராமச்சந்திர கவிராயர்
10.
'களிறு எறிந்து பெயர்தல் காளைக்குக் கடனே' - என்று கூறியவர்
A.
ஒக்கூர் மாசாத்தியார்
B.
பொன்முடியார்
C.
காவற்பெண்டு
D.
ஔவையார்
Answer:
B.
பொன்முடியார்
11.
அழுது அடியடைந்த அன்பர் ____________
A.
மாணிக்கவாசகர்
B.
வாகீசர்
C.
சரபேசர்
D.
மதுரேசர்
Answer:
A.
மாணிக்கவாசகர்
12.
மறைமலை அடிகள் தாம் நடத்தி வந்த 'ஞானசாகரம்' இதழைத் தூய தமிழில் எங்ஙனம் பெயர் மாற்றம் செய்தார்?
A.
ஞானக் கடல்
B.
அறிவுக் கடல்
C.
அறிவு சாகரம்
D.
நாணக் கடல்
Answer:
A.
ஞானக் கடல்
13.
'ஜல்லிக்கட்டு' என்னும் எருதாட்டத்தை வைத்து 'வாடிவாசல்' எனும் நாவலை எழுதியவர் ____________
A.
சி.சு. செல்லப்பா
B.
பி.எஸ். ராமையா
C.
திரு.வி.க.
D.
வ. வே. சு. ஐயர்
Answer:
A.
சி.சு. செல்லப்பா
14.
திருமணம் செல்வக் கேசவராய முதலியார் தமிழின் எப்பிரிவுக்கு மிகவும் தொண்டு செய்தார்?
A.
செய்யுள்
B.
உரைநடை
C.
இலக்கணம்
D.
நாடகம்
Answer:
B.
உரைநடை
15.
'தமிழ் உரைநடையின் தந்தை' என மெச்சத் தகுந்தவர்
A.
யாழ்ப்பாணத்து ஆறுமுக நாவலர்
B.
சி.வை. தாமோதரம் பிள்ளை
C.
விபுலானந்த அடிகள்
D.
கனகசபைப் புலவர்
Answer:
A.
யாழ்ப்பாணத்து ஆறுமுக நாவலர்
16.
'முத்தொள்ளாயிரம்' - இவர்களைப் பற்றிய புகழ்ப் பாடல்கள்
A.
சேர, சோழ, பாண்டியர்
B.
பல்லவர், நாயக்கர், பாளையக்காரர்
C.
முகமதியர், ஆங்கிலேயர், மராட்டியர்
D.
குப்தர், மௌரியர், டச்சுக்காரர்
Answer:
A.
சேர, சோழ, பாண்டியர்
17.
பொருத்துக:
| (a) சிக்கனம் | 1. கவிஞர் தாரா பாரதி |
| (b) மனிதநேயம் | 2. ஆலந்தூர் கோ.மோகனரங்கம் |
| (c) காடு | 3. சுரதா |
| (d) வேலைகளல்ல வேள்விகளே | 4. வாணிதாசன் |
A.
4 3 2 1
B.
2 4 3 1
C.
3 2 4 1
D.
1 2 3 4
Answer:
C.
3 2 4 1
18.
'மணிமேகலை வெண்பா'வின் ஆசிரியர் யார்?
A.
பாரதியார்
B.
பாரதிதாசன்
C.
திரு.வி.க.
D.
கவிமணி
Answer:
B.
பாரதிதாசன்
19.
1942 -ல் பர்மாவிலிருந்து புறப்பட்டு இந்தியா வந்து சேர்ந்ததை விவரிக்கும் மிகச் சிறந்த பயண நூலான 'பர்மா வழி நடைப்பயணம்' நூலின் ஆசிரியர்
A.
வைத்தியநாத சர்மா
B.
வெ. சாமிநாத சர்மா
C.
தேவன்
D.
அநுத்தமா
Answer:
B.
வெ. சாமிநாத சர்மா
20.
'ஆனந்தத்தேன்' நூலின் ஆசிரியர்
A.
வைரமுத்து
B.
தமிழன்பன்
C.
புதுமைப் பித்தன்
D.
க. சச்சிதானந்தன்
Answer:
D.
க. சச்சிதானந்தன்
21.
அடைமொழிக்குரிய ஆசிரியர்களைத் தேர்க:
| (a) விடுதலைக்கவி | 1. அப்துல் ரகுமான் |
| (b) திவ்வியகவி | 2. வாணிதாசன் |
| (c) கவிஞரேறு | 3. பாரதியார் |
| (d) கவிக்கோ | 4. பிள்ளைப்பெருமாள் ஐயங்கார் |
A.
2 4 1 3
B.
1 3 4 2
C.
3 4 2 1
D.
4 3 2 1
Answer:
C.
3 4 2 1
22.
பொருத்துக:
| (a) பூங்கொடி | 1. கண்ணதாசன் |
| (b) கொடி முல்லை | 2. சுரதா |
| (c) ஆட்டனத்தி ஆதிமந்தி | 3. முடியரசன் |
| (d) பட்டத்தரசி | 4. வாணிதாசன் |
A.
2 1 4 3
B.
1 2 3 4
C.
3 4 1 2
D.
4 3 2 1
Answer:
C.
3 4 1 2
23.
வடமொழியில் முகுந்தமாலை என்னும் நூலை இயற்றியவர் ____________
A.
திருமங்கையாழ்வார்
B.
திருமழிசையாழ்வார்
C.
குலசேகராழ்வார்
D.
நம்மாழ்வார்
Answer:
C.
குலசேகராழ்வார்
24.
'பஃறுளி ஆற்றுடன் பன்மலை அடுக்கத்துக்
குமரிக்கோடும் கொடுங்கடல் கொள்ள' என்ற வரிகள் இடம் பெற்ற நூல்
குமரிக்கோடும் கொடுங்கடல் கொள்ள' என்ற வரிகள் இடம் பெற்ற நூல்
A.
மணிமேகலை
B.
சிலப்பதிகாரம்
C.
சீவகசிந்தாமணி
D.
பெரியபுராணம்
Answer:
B.
சிலப்பதிகாரம்
25.
திருக்குறளை முதன் முதலில் பதிப்பித்துத் தஞ்சையில் வெளியிட்டவர்
A.
பாவலரேறு பெருஞ்சித்திரனார்
B.
மலையத்துவசன் மகன் ஞானப்பிரகாசம்
C.
சிவப்பிரகாசம்
D.
மணிவாசகர்
Answer:
B.
மலையத்துவசன் மகன் ஞானப்பிரகாசம்