TNPSC Group 4 2014
General Tamil Questions 51 to 75
1.
வெற்பு, சிலம்பு, பொருப்பு ஆகிய சொற்கள் குறிக்கும் பொருள்
A.
நிலம்
B.
மலை
C.
காடு
D.
நாடு
Answer:
B.
மலை
2.
'நெடிலோ டுயிர்த் தொடர்க்குற் றுகரங்களுள்
பறவொற் றிரட்டும் வேற்றுமை மிகவே'
– இவ்விதிக்குச் சான்றைத் தேர்க.
பறவொற் றிரட்டும் வேற்றுமை மிகவே'
– இவ்விதிக்குச் சான்றைத் தேர்க.
A.
இரட்டுற மொழிதல்
B.
வட்டப் பலகை
C.
கட்டுச் சோறு
D.
காட்டுக் கோழி
Answer:
D.
காட்டுக் கோழி
3.
'முந்நீர் வழக்கம் மகடூஉ வோடில்லை' – இதில் மகடூஉ என்பது ____________
A.
மகள்
B.
மகன்
C.
பெண்
D.
ஆண்
Answer:
C.
பெண்
4.
தொடை விகற்பம் எத்தனை வகைப்படும்?
A.
40
B.
35
C.
25
D.
45
Answer:
B.
35
5.
கீழ்க்கண்டவற்றுள் எது சரி?
A.
தொகா, தொகை நிலைத் தொடர் 7
B.
தொகை, தொகா நிலைத் தொடர் 9
C.
தொகை நிலைத் தொடர் 6; தொகா நிலைத் தொடர் 9
D.
தொகை நிலைத் தொடர் 9; தொகா நிலைத் தொடர் 6
Answer:
C.
தொகை நிலைத் தொடர் 6; தொகா நிலைத் தொடர் 9
6.
ஐ, ஔ ஆகிய 2 எழுத்துகளும் அழைக்கப்படும் விதம்
A.
அளபெடை
B.
எழுத்துப்பேறு
C.
இதழ்குவி எழுத்து
D.
சந்தியக்கரம்
Answer:
D.
சந்தியக்கரம்
7.
முற்றியலுகரச் சொல்லை எழுதுக.
A.
மாடு
B.
மூக்கு
C.
கதவு
D.
மார்பு
Answer:
C.
கதவு
8.
கீழே கொடுக்கப்பட்டுள்ள சொற்களில் 'ஒரு பொருட் பன்மொழிச்' சொல்லைத் தேர்க.
A.
மீமிசை ஞாயிறு
B.
உயர்ந்த கட்டடம்
C.
மேல் பகுதி
D.
மையப் பகுதி
Answer:
A.
மீமிசை ஞாயிறு
9.
'பெறு' என்ற வேர்ச்சொல்லின் வினையாலணையும் பெயரைத் தேர்ந்தெடு:
A.
பெற்றான்
B.
பெறுவான்
C.
பெறுகிறான்
D.
பெறுபவன்
Answer:
D.
பெறுபவன்
10.
பொருத்துக:
| (a) இலக்கணமுடையது | 1. புறநகர் |
| (b) மங்கலம் | 2. கால் கழுவி வந்தான் |
| (c) இலக்கணப் போலி | 3. இறைவனடி சேர்ந்தார் |
| (d) இடக்கரடக்கல் | 4. நிலம் |
A.
2 3 1 4
B.
4 3 1 2
C.
1 2 3 4
D.
3 4 1 2
Answer:
B.
4 3 1 2
11.
அந்தந்த அடிகளில் உள்ள சொற்களை முன்பின்னாக மாற்றிக் கொள்வது - எவ்வகைப் பொருள்கோள்?
A.
அடிமறி மாற்றுப் பொருள்கோள்
B.
அளைமறிபாப்புப் பொருள்கோள்
C.
கொண்டு கூட்டுப் பொருள்கோள்
D.
மொழிமாற்றுப் பொருள்கோள்
Answer:
D.
மொழிமாற்றுப் பொருள்கோள்
12.
பொருள் தேர்க:
அங்காப்பு - என்பது
அங்காப்பு - என்பது
A.
வாயைப் பிளத்தல்
B.
அங்கம் காப்பு
C.
அகம் காத்தல்
D.
வாயைத் திறத்தல்
Answer:
D.
வாயைத் திறத்தல்
13.
வினைமுற்றை தேர்க
A.
படி
B.
படித்த
C.
படித்து
D.
படித்தான்
Answer:
D.
படித்தான்
14.
தவறான ஒன்றை தேர்க
A.
கிறு
B.
கிண்று
C.
ஆநின்று
D.
இல
Answer:
D.
இல
15.
'இணையில்லை முப்பாலுக்கு இந்நிலத்தே' எனப் பாடியவர்
A.
பாரதியார்
B.
சுரதா
C.
பாரதிதாசன்
D.
வாணிதாசன்
Answer:
C.
பாரதிதாசன்
16.
இப்போதுள்ள கல்வெட்டுகளிலேயே மிகப் பழமையானது
A.
உத்திரமேரூர்க் கல்வெட்டு
B.
ஆதிச்சநல்லூர்க் கல்வெட்டு
C.
அரியாங்குப்பம் கல்வெட்டு
D.
திருநாதர் குன்றம் கல்வெட்டு
Answer:
D.
திருநாதர் குன்றம் கல்வெட்டு
17.
காந்தியடிகளை 'அரை நிருவாணப் பக்கிரி' என ஏளனம் செய்தவர்.
A.
சர்ச்சில்
B.
முசோலினி
C.
ஹிட்லர்
D.
ஸ்மட்ஸ்
Answer:
A.
சர்ச்சில்
18.
'ஏழையின் குடிசையில் அடுப்பும் விளக்கும் தவிர எல்லாமே எரிகின்றன' இதனை பாடிய கவிஞர் யார்?
A.
ந.பிச்சமூர்த்தி
B.
வல்லிக்கண்ணன்
C.
புதுமைப்பித்தன்
D.
சி.சு.செல்லப்பா
Answer:
B.
வல்லிக்கண்ணன்
19.
'கலம்பகம் பாடுவதில் புகழ் பெற்றவர்' யாவர்?
A.
இரட்டையர்
B.
சமணர்
C.
பரணர்
D.
பௌத்தர்
Answer:
A.
இரட்டையர்
20.
'இந்திய அரசியலில் சாணக்கியர்' ____________
A.
ஜவஹர்லால் நேரு
B.
வல்லபாய் படேல்
C.
இராஜகோபாலாச்சாரியார்
D.
இராதா கிருட்டிணன்
Answer:
C.
இராஜகோபாலாச்சாரியார்
21.
ஆன்ம ஈடேற்றத்தை விரும்பும் பயணம் குறித்த நூல்
A.
இரட்சணிய யாத்திரிகம்
B.
இரட்சணிய மனோகரம்
C.
இரட்சணிய குறள்
D.
இரட்சணிய சரிதம்
Answer:
A.
இரட்சணிய யாத்திரிகம்
22.
"எல்லார்க்கும் எல்லாம் என்றிருப்பதான இடம் நோக்கி நடக்கின்ற திந்தவையம்" எனப் பொதுவுடைமையை விரும்பியவர்
A.
கல்யாண சுந்தரம்.
B.
பாரதிதாசன்
C.
முடியரசன்
D.
தமிழ்ஒளி
Answer:
B.
பாரதிதாசன்
23.
"திருந்திய பண்பும் சீர்த்த நாகரிகமும் பொருந்திய தூய்மொழி தமிழ்ச் செம்மொழியாம்" என்று செம்மொழிக்கு இலக்கணம் வகுத்தவர்
A.
பரிதிமாற் கலைஞர்
B.
நாமக்கல் கவிஞர்
C.
பாரதியார்
D.
பாரதிதாசன்
Answer:
A.
பரிதிமாற் கலைஞர்
24.
ஐஞ்சிறு காப்பியங்கள் அனைத்தும் யாரால் இயற்றப்பட்டன?
A.
சைவரால் இயற்றப்பட்டன
B.
வைணவரால் இயற்றப்பட்டன
C.
சமணரால் இயற்றப்பட்டன
D.
கிறித்தவர்களால் இயற்றப்பட்டன
Answer:
C.
சமணரால் இயற்றப்பட்டன
25.
பெர்சிவல் பாதிரியாரின் வேண்டுகோளை ஏற்று பைபிளைத் தமிழில் பெயர்த்த அறிஞர்
A.
வேத நாயகம் பிள்ளை
B.
வித்வான் மீனாட்சி சுந்தரம் பிள்ளை
C.
பேராசிரியர் சுந்தரம் பிள்ளை
D.
ஆறுமுக நாவலர்
Answer:
D.
ஆறுமுக நாவலர்