TNPSC Group 4 2014
General Tamil Questions 1 to 25
1.
'கண்ணகி' எனும் சொல்லின் பொருள்
Answer:
C.
கண்களால் நகுபவள்
2.
பகுதி I உடன் பகுதி II ஐப் பொருத்துக.
| பகுதி I | பகுதி II |
|---|---|
| (a) குறிஞ்சி | 1. நெல்லரிதல் |
| (b) முல்லை | 2. கிழங்ககழ்தல் |
| (c) மருதம் | 3. உப்பு விற்றல் |
| (d) நெய்தல் | 4. வரகு விதைத்தல் |
Answer:
A.
2 4 1 3
3.
வண்ணம், வடிவம், அளவு, சுவை என இந்த நான்கும் எதனோடு தொடர்புடையது?
Answer:
A.
பண்புத் தொகை
4.
வெண்டளை விரவிய கலிவெண்பாவால் பாடப்படுவது எது?
Answer:
B.
தூது
5.
பொருத்துக:
| (a) வினைத் தொகை | 1. நாலிரண்டு |
| (b) உவமைத் தொகை | 2. செய்தொழில் |
| (c) உம்மைத் தொகை | 3. பவள வாய் பேசினாள் |
| (d) அன்மொழித் தொகை | 4. மதிமுகம் |
Answer:
D.
2 4 1 3
6.
'அவன் உழவன்' - என்பதன் இலக்கணக் குறிப்பு தேர்க.
Answer:
B.
குறிப்பு வினைமுற்று
7.
பிழையற்ற வாக்கியத்தைக் கூறுக.
Answer:
C.
வயலில் மாடுகள் மேய்ந்தன
8.
பெயர்ச் சொல்லின் வகையறிதல்: நடிகன்
Answer:
C.
தொழிற்பெயர்
9.
பொன்னியிடம் தேன்மொழி தான் மறுநாள் மதுரைக்குச் செல்வதாகக் கூறினாள் - எவ்வகைத் தொடர்?
Answer:
B.
அயற்கூற்று
10.
பொருந்தாத சொல்லை தேர்வு செய்க
Answer:
C.
அண்ணன்
11.
யாப்பு என்றால் ____________ என்பது பொருள்
Answer:
C.
கட்டுதல்
12.
நாயக்கர் மரபில் முடிசூட்டிக் கொண்ட பெண்ணரசி யார்?
Answer:
C.
இராணி மங்கம்மாள்
13.
'உலகின் எட்டாவது அதிசயம்' எனப் பாராட்டப்படுபவர்
Answer:
C.
கெலன் கெல்லர்
14.
திருக்குறளுக்கும் எந்த எண்ணிற்கும் பெரிதும் தொடர்புள்ளது?
Answer:
B.
7
15.
தொண்ணூற்று ஒன்பது வகையான பூக்களின் பெயர்கள் இடம் பெறும் நூல் எது?
Answer:
A.
குறிஞ்சிப் பாட்டு
16.
'மனித நாகரிகத்தின் தொட்டில்' என அழைக்கப்படுவது எது?
Answer:
B.
இலெமூரியா
17.
குமரகுருபரர் எழுதாத நூல்
Answer:
C.
திருச்செந்தூர் முருகன் பிள்ளைத்தமிழ்
18.
தாயுமானவர் நினைவு இல்லம் எந்த மாவட்டத்தில் உள்ளது?
Answer:
C.
இராமநாதபுரம்
19.
தமிழகத்தின் 'வேர்ட்ஸ்வொர்த்' என்று புகழப்படுபவர்
Answer:
A.
வாணிதாசன்
20.
குளிர்பதனப் பெட்டியில் பயன்படுத்தப்படும் ____________ உயிர்வளிப்படலத்தைச் சிதைப்பதில் பெரும்பங்கு வகிக்கிறது.
Answer:
A.
குளோரோஃபுளுரோ கார்பன்
21.
'திராவிடம்' என்னும் சொல்லை முதன்முதலில் உருவாக்கியவர்
Answer:
B.
குமரிலபட்டர்
22.
'சீர்திருத்தக் காப்பியம்' என்று பாராட்டப்படுவது
Answer:
B.
மணிமேகலை
23.
ஏற்றுமதி, இறக்குமதி குறித்துக் கூறும் நூல்கள் யாவை?
Answer:
B.
பட்டினப்பாலை, மதுரைக் காஞ்சி
24.
சரிந்த குடலைப் புத்தத் துறவியர் சரிசெய்த செய்தியைக் கூறும் நூல்
Answer:
D.
மணிமேகலை
25.
பொருத்துக:
| (a) நான்மணிமாலை | 1. கவிதை |
| (b) மலரும் மாலையும் | 2. சிற்றிலக்கியம் |
| (c) நான்மணிக்கடிகை | 3. காப்பியம் |
| (d) தேம்பாவணி | 4. நீதிநூல் |
Answer:
A.
2 1 4 3