GK Tamil
Home TNPSC Thirukkural Quiz History Geography Science Indian Polity Sports Contact

General Tamil Questions 51 to 75

51.  வெற்பு, சிலம்பு, பொருப்பு - ஆகிய சொற்கள் குறிக்கும் பொருள்
Answer: B.   மலை
52.  'நெடிலோ டுயிர்த் தொடர்க்குற் றுகரங்களுள்
பறவொற் றிரட்டும் வேற்றுமை மிகவே'
– இவ்விதிக்குச் சான்றைத் தேர்க.
Answer: D.   காட்டுக் கோழி
53.  'முந்நீர் வழக்கம் மகடூஉ வோடில்லை' – இதில் மகடூஉ என்பது ____________
Answer: C.   பெண்
54.  தொடை விகற்பம் எத்தனை வகைப்படும்?
Answer: B.   35
55.  கீழ்க்கண்டவற்றுள் எது சரி?
Answer: C.   தொகை நிலைத் தொடர் 6; தொகா நிலைத் தொடர் 9
56.  ஐ, ஔ ஆகிய 2 எழுத்துகளும் அழைக்கப்படும் விதம்
Answer: D.   சந்தியக்கரம்
57.  முற்றியலுகரச் சொல்லை எழுதுக.
Answer: C.   கதவு
58.  கீழே கொடுக்கப்பட்டுள்ள சொற்களில் 'ஒரு பொருட் பன்மொழிச்' சொல்லைத் தேர்க.
Answer: A.   மீமிசை ஞாயிறு
59.  'பெறு' என்ற வேர்ச்சொல்லின் வினையாலணையும் பெயரைத் தேர்ந்தெடு:
Answer: D.   பெறுபவன்
60.  பொருத்துக:
(a) இலக்கணமுடையது 1. புறநகர்
(b) மங்கலம் 2. கால் கழுவி வந்தான்
(c) இலக்கணப் போலி 3. இறைவனடி சேர்ந்தார்
(d) இடக்கரடக்கல் 4. நிலம்
Answer: B.   4 3 1 2
61.  அந்தந்த அடிகளில் உள்ள சொற்களை முன்பின்னாக மாற்றிக் கொள்வது - எவ்வகைப் பொருள்கோள்?
Answer: D.   மொழிமாற்றுப் பொருள்கோள்
62.  பொருள் தேர்க:
அங்காப்பு - என்பது
Answer: D.   வாயைத் திறத்தல்
63.  வினைமுற்றை தேர்க
Answer: D.   படித்தான்
64.  தவறான ஒன்றை தேர்க
Answer: D.   இல
65.  'இணையில்லை முப்பாலுக்கு இந்நிலத்தே' எனப் பாடியவர்
Answer: C.   பாரதிதாசன்
66.  இப்போதுள்ள கல்வெட்டுகளிலேயே மிகப் பழமையானது
Answer: D.   திருநாதர் குன்றம் கல்வெட்டு
67.  காந்தியடிகளை 'அரை நிருவாணப் பக்கிரி' என ஏளனம் செய்தவர்.
Answer: A.   சர்ச்சில்
68.  'ஏழையின் குடிசையில் அடுப்பும் விளக்கும் தவிர எல்லாமே எரிகின்றன' - இதனை பாடிய கவிஞர் யார்?
Answer: B.   வல்லிக்கண்ணன்
69.  'கலம்பகம் பாடுவதில் புகழ் பெற்றவர்' யாவர்?
Answer: A.   இரட்டையர்
70.  'இந்திய அரசியலில் சாணக்கியர்' ____________
Answer: C.   இராஜகோபாலாச்சாரியார்
71.  ஆன்ம ஈடேற்றத்தை விரும்பும் பயணம் குறித்த நூல்
Answer: A.   இரட்சணிய யாத்திரிகம்
72.  "எல்லார்க்கும் எல்லாம் என்றிருப்பதான இடம் நோக்கி நடக்கின்ற திந்தவையம்" எனப் பொதுவுடைமையை விரும்பியவர்
Answer: B.   பாரதிதாசன்
73.  "திருந்திய பண்பும் சீர்த்த நாகரிகமும் பொருந்திய தூய்மொழி தமிழ்ச் செம்மொழியாம்" - என்று செம்மொழிக்கு இலக்கணம் வகுத்தவர்
Answer: A.   பரிதிமாற் கலைஞர்
74.  ஐஞ்சிறு காப்பியங்கள் அனைத்தும் யாரால் இயற்றப்பட்டன?
Answer: C.   சமணரால் இயற்றப்பட்டன
75.  பெர்சிவல் பாதிரியாரின் வேண்டுகோளை ஏற்று பைபிளைத் தமிழில் பெயர்த்த அறிஞர்
Answer: D.   ஆறுமுக நாவலர்
;