GK Tamil
Home TNPSC Thirukkural Quiz History Geography Science Indian Polity Sports Contact

TNPSC Group 4 2024

Aptitude Questions 1 to 27

1.  ஒருவர் ரூ.12,000 ஐ 5% கூட்டுவட்டி விகிதத்தில் 2 ஆண்டுகளுக்கு நிரந்தர வைப்பு திட்டத்தில் செலுத்துகிறார். நிரந்தர வைப்பு முதிர்வு தொகையாக அவர் எவ்வளவு பெறுவார்?
Answer: C.   ரூ. 13,230
2.  கித்தானைக் கொண்டு 700 செ.மீ ஆரமும் 24 மீ உயரமும் உடைய ஒரு கூம்பு வடிவக் கூடாரம் உருவாக்கப்படுகிறது. செவ்வக வடிவக் கித்தானின் அகலம் 4 மீ எனில் அதன் நீளம் காண்க.
Answer: A.   137.5 மீ
3.  அடுத்த எண்ணைக் காண்க:
1, 2, 6, 24, 120, ?
Answer: C.   720
4.  \(x : y = 2 : 1\) எனில் \((x^2-y^2) : (x^2+y^2)\) என்பது
Answer: D.   3 : 5
5.  குமரன் 20% தள்ளுபடியுடன் ஒரு ரெயின்கோட்டை வாங்கி ரூ. 25 யை சேமித்தார் எனில், ரெயின்கோட்டின் அசல் விலை என்ன?
Answer: A.   ரூ. 125
6.  A = 1, B = 2, C = 3, ....Z = 26 எனக் கொண்டால் H,C,F-ன் மீ.சி.ம எதற்குச் சமமில்லை?
Answer: C.   A + C + H
7.  மதிப்பு காண்க \(\sqrt{5\sqrt{5\sqrt{5\cdots}}}\)
Answer: D.   \(5^1\)
8.  ஒரு அரைக்கோளத்தில் காணப்படும் மீப்பெரு வட்டங்களின் எண்ணிக்கை எத்தனை?
Answer: A.   1
9.  உயரம் 4 மீ மற்றும் அடிப்பரப்பு 500 ச.மீ கொண்ட ஓர் உருளையின் கனஅளவைக் காண்க.
Answer: A.   \(2000\ \text{மீ}^3\)
10.  \(3x+4y : 4x+6y = 22 : 32\) எனில் \(x : y\) என்பது
Answer: A.   \(1 : 2\)
11.  a மற்றும் b என்னும் இரு எண்கள் \(m : n\) என்னும் விகிதத்தில் அமைந்துள்ளன எனில் a மற்றும் b யின் மீ.பொ.ம எது?
Answer: C.   \(mb\)
12.  ஒரு புத்திசாலி மனிதன் மூட்டைக்கு 30 மாம்பழங்கள் வீதம் 3 மூட்டைகள் எடுத்துச் செல்கிறான். ஒவ்வொரு சுங்கச் சாவடியைத் தாண்டும் பொழுதும் மூட்டைக்கு 1 மாம்பழம் தர வேண்டும். 30 சுங்கச் சாவடிகளைத் தாண்டும் பொழுது அவனிடம் எத்தனை மாம்பழங்கள் மீதம் இருக்கும்?
Answer: D.   25
13.  24 மீ நீளம், 18 மீ அகலம் மற்றும் 16 மீ உயரம் உள்ள ஒரு அறையினுள் வைக்க முடிந்த மிகப் பெரிய கம்பியின் நீளம் என்ன?
Answer: C.   34 மீ
14.  இரு எண்களின் மீ.சி.ம ஆனது மீ.பெ.கா-வின் 6 மடங்காகும். மீ.பெ.கா 12 மற்றும் ஓர் எண் 36 எனில், மற்றோர் எண்ணைக் காண்க.
Answer: A.   24
15.  இரு எண்களின் மீ.பொ.வ 11 மற்றும் அவற்றின் மீ.சி.ம. 693. ஓர் எண் 77 எனில் மற்றொரு எண் என்ன?
Answer: C.   99
16.  வியாபாரி ஒருவர் இரண்டு வகையான எண்ணெய்களை முறையே 120 லி, 180 லி என இரு கலங்களில் வைத்துள்ளார். சம அளவு கொண்ட கலனில் அந்த இரண்டு எண்ணெய்களை நிரப்பி விற்க விரும்பினார். கலன் கொள்ளும் அதிகபட்ச கொள்ளளவு என்ன?
Answer: C.   60 லி
17.  \(1^3 + 2^3 + 3^3 + \cdots + K^3 = 72900\) எனில், \(1 + 2 + 3 + \cdots + K\) யின் மதிப்பு காண்க.
Answer: C.   270
18.  \(2,\ 3,\ 5,\ 9,\ x,\ 33,\ y,\ \ldots\) என்ற தொடரில் \(x + y\) ன் மதிப்பு என்ன?
Answer: D.   82
19.  AZBYCX .... YBZA என்றவாறு எழுதும் போது ஆங்கில உயிரெழுத்திற்கு இடது புறம் அருகில் வரக்கூடிய உயிரெழுத்து அல்லாத எழுத்துக்கள் எத்தனை?
Answer: C.   9
20.  ரமீலா கூறுகையில், "எனது மாமனாரான ராமனாதனின் ஒரே மகனான ராமன் ராகவியின் தந்தை",ரமணி, ராகவியின் சகோதரி என்றால் ரமணி ராமனாதனுக்கு என்ன உறவு?
Answer: D.   பேத்தி
21.  3 ஆண்கள் மற்றும் 4 பெண்கள் 7 நாள்களில் ரூ.3,780 சம்பாதிக்கின்றனர். 11 ஆண்கள் மற்றும் 13 பெண்கள் சேர்ந்து 8 நாள்களில் ரூ.15,040. சம்பாதிக்கின்றனர் எனில் 7 ஆண்கள் மற்றும் 9 பெண்கள் சேர்ந்து எவ்வளவு நாள்களில் ரூ.12,400 சம்பாதிப்பர்?
Answer: C.   10 நாள்கள்
22.  அசல் தொகை ரூ.10,000 ஆனது 15% ஆண்டு வட்டியில் 3 ஆண்டுகளுக்கு கிடைக்கும் கூட்டு வட்டிக்கும், தனி வட்டிக்கும் இடையேயான வித்தியாசம் காண்க.
Answer: C.   708.75
23.  ஒருவர் ரூ.2,000 ஐ 6% தனிவட்டிக்கு கடன் வாங்குகிறார். ஓர் ஆண்டு முடிவில் ரூ.1,000 ஐ திருப்பி செலுத்துகிறார் எனில் அவர் அக்கடனை இரண்டாம் ஆண்டு முடிவில் முழுவதுமாக முடிக்க எவ்வளவு தொகை செலுத்த வேண்டும்?
Answer: B.   ரூ. 1,180
24.  விக்னேஷ் 2 ஆண்டுகளுக்கு 4% வட்டிவீதத்தில் ரூ.10,000 கடனாக பெற்றார். இந்தப் பணத்தை சஞ்சையிடம் 2 ஆண்டுகளுக்கு 6% வட்டிவீதத்தில் கடனாகக் கொடுத்தார். இந்தப் பரிமாற்றத்தில் அவருக்குக் கிடைத்த ஓர் ஆண்டின் லாபம் என்ன?
Answer: A.   200
25.  7 மற்றும் 13 ஆகிய எண்களின் மீ.பொ.வ மற்றும் மீ.சி.ம வின் விகிதத்தைக் காண்க.
Answer: A.   1 : 91
26.  கயல் 5 டசன் முட்டைகளை வாங்கினார். அதில் 45 முட்டைகள் நல்ல முட்டைகள், எனில் கெட்டுவிட்ட முட்டைகளின் சதவீதத்தைக் காண்க.
Answer: C.   25%
27.  Sunday = 2, Tuesday = 3, Thursday = 2 எனில் Monday வின் மதிப்பு என்ன?
Answer: B.   2
;